இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரையில் 2.5 மில்­லியன் பேர் பங்­கேற்பு

அசம்பாவிதங்கள் எதுவுமின்றி யாத்திரை வெற்றிகரமாக நிறைவு

0 822

இவ்­வ­ருட ஹஜ் யாத்­திரை வெற்­றி­க­ர­மான முறையில் நிறை­வ­டைந்­துள்ள நிலையில், மொத்­த­மாக 2,489,406 யாத்­தி­ரி­கர்கள் ஹஜ் கட­மை­களில் பங்­கேற்­ற­தாக சவூதி புள்­ளி­வி­பர அதி­கார சபை தெரி­வித்­துள்­ளது. இவர்­களில் 1,855,027 பேர் வெளி­நாட்டு யாத்­தி­ரி­கர்கள் எனவும் 634,379 பேர் உள்­நாட்டு யாத்­தி­ரிகள் எனவும் அதி­கார சபை குறிப்­பிட்­டுள்­ளது. உள்­நாட்டு யாத்­தி­ரி­கர்­களில் 67 வீத­மானோர் சவூதி அரே­பிய பிர­ஜை­யல்­லா­த­வர்கள் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இவ்­வ­ருட மொத்த ஹஜ் யாத்­தி­ரி­கர்­களில் 1,385,234 பேர் ஆண்­க­ளாவர். 1,104,172 பேர் பெண்­க­ளாவர் என்றும் சவூதி புள்­ளி­வி­பர அதி­கார சபையின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இவ்­வ­ருட ஹஜ் யாத்­திரை எந்­த­வித குறை­பா­டு­களோ அசம்­பா­வி­தங்­களோ இன்றி முடி­வுக்கு வந்­த­தாக, சவூதி அரே­பிய உள்­நாட்டு அமைச்சர் இள­வ­ரசர் அப்துல் அஸீஸ் பின் சவூத் பின் நாயிப், மன்னர் சல்மான் மற்றும் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகி­யோ­ருக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மான அறி­வித்­துள்ளார்.

சுமார் 2.5 மில்­லியன் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கும் தேவை­யான சகல வச­தி­க­ளையும் செய்து கொடுத்­த­மைக்­காக அவர் மன்­ன­ருக்கு நன்­றி­க­ளையும் தெரி­வித்­துள்­ளார்.

இவ்­வ­ருட ஹஜ் பருவ கால­மா­னது, பாது­காப்பு, தடுப்பு நட­வ­டிக்­கைகள், ஒழுங்­க­மைப்­புகள், சேவைகள் மற்றும் போக்­கு­வ­ரத்து திட்­டங்கள் ஊடாக வெற்­றி­க­ர­மாக நிர்­வ­கிக்­கப்­பட்­டன. ஏற்­க­னவே திட்­ட­மிட்­ட­படி யாத்­தி­ரி­கர்கள் அரபா, நப்ரா, முஸ்­த­லிபா மற்றும் மினா ஆகிய புனித தலங்­களை உரிய நேரத்­திற்கு வந்­த­டைந்­த­துடன் ஜமாரத் வரை­யான அவர்­க­ளது நகர்­வுகள் நெரி­ச­லின்றி முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அத்­துடன் யாத்­தி­ரி­கர்கள் க ஃபதுல்­லாஹ்வை தவாப் செய்­வ­திலும் நெருக்­க­டிகள் ஏற்­ப­டா­த­வாறு ஒழுங்­க­மைக்­கப்­பட்­டி­ருந்­தது.
மேலும் யாத்­தி­ரி­கர்­களின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தல்கள் ஏற்­ப­டாத வகையில் முப்­ப­டை­யி­னரும் கட­மை­களை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

இதே­வேளை இம்­முறை யாத்­தி­ரி­கர்­களின் நலன்களைக் கவனிப்பதற்காக 350,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் 35 ஆயிரம் தொண்டர்களும் 120000 பாதுகாப்பு படையினரும் 30 ஆயிரம் சுகாதாரத்துறை ஊழியர்களும் ஏனைய துறைகளைச் சேர்ந்த 2 இலட்சம் பேரும் இவ்வருட ஹஜ்ஜின் வெற்றிக்கு உதவி செய்துள்ளனர்.

(மக்­கா­வி­லி­ருந்து எஸ்.என்.எம். ஸுஹைல்)

vidivelli

Leave A Reply

Your email address will not be published.