காத்தான்குடியில் நாளை 29 ஆவது ஷுஹதாக்கள் தின நிகழ்வுகள்

0 757

காத்­தான்­கு­டியின் இரண்டு பள்­ளி­வா­சல்­களில் 03.08.1990 அன்று தொழு­கையில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­த­வர்கள் மீது தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் நடாத்­திய தாக்­கு­தலில் படு­கொலை செய்­யப்­பட்ட 103 முஸ்­லிம்­களை நினைவு கூர்ந்து 29 ஆவது ஷுஹ­தாக்கள் தினம் நாளை அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இத­னை­யொட்டி காத்­தான்­கு­டியில் நாளை காலை கவ­ன­யீர்ப்பு பேர­ணி­யொன்று இடம் பெற­வுள்­ள­துடன் படு­கொலை இடம்­பெற்ற காத்­தான்­குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆ பள்­ளி­வாசல் மற்றும் ஹுஸை­னிய்யா பள்­ளி­வா­சல்­களில் குர்ஆன் பாரா­ய­ணமும் விஷேட துஆப்­பி­ராத்­த­னையும் இடம் பெற­வுள்­ளன.

முஸ்லிம் தேச ஷுஹ­தாக்கள் ஞாப­கார்த்த நிறு­வனம், காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம், காத்­தான்­குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்­ஆ­பள்­ளி­வாசல் என்­பன இணைந்து இந்த நிகழ்­வு­களை ஏற்­பாடு செய்­துள்­ளன.

காலையில் இடம் பெற­வுள்ள பேர­ணியின் போது பிர­க­டனும் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ள­தாக முஸ்லிம் தேச ஷுஹ­தாக்கள் ஞாப­கார்த்த நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை, சுஹ­தாக்கள் தினத்­தினை முன்­னிட்டு காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் “சுதந்­திர இலங்­கையில் முஸ்­லிம்கள் இழந்­ததும், பெற்றுக் கொண்­டதும்” எனும் தலைப்பில் நினைவுக் கருத்­த­ரங்கு ஒன்­றினை ஏற்­பாடு செய்­துள்­ளது.

காத்­தான்­குடி பீச் வே ஹோட்­டலில் மாலை 6 மணிக்கு இடம்­பெறும் இந்­நி­கழ்வில் “சுஹ­தாக்­களை ஞாப­கப்­ப­டுத்­து­வதன் அவ­சியம்” எனும் தலைப்பில் சம்­மே­ளன தலைவர் எம்.சீ.எம்.ஏ.சத்தார், “கிழக்கில் காணா­ம­லாக்­கப்­பட்ட முஸ்லிம் கிரா­மங்கள்” எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் ஏ.எல்.ஜுனைதீன் நளீமி, “முஸ்லிம் இன அர­சியல் – ஓர் மீளாய்வு” எனும் தலைப்பில் தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி எம்.எம்.பாஸில் “நெருக்­க­டி­கக்­குள்­ளா­குமா இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம்” எனும் தலைப்பில் சட்­டத்­த­ரணி எம்.எம்.பஹீஜ், “சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கை முஸ்லிம்களின் சமூக மறுமலர்ச்சியும் கல்வி அபிவிருத்தியும்” எனும் தலைப்பில் வைத்தியர் ஐ.எல்.எம்.றிபாஸ் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.

(எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் )

vidivelli

Leave A Reply

Your email address will not be published.