கல்முனை தமிழ் செயலகம் தரமுயர்வு  சாய்ந்தமருதுக்கும் உள்ளூராட்சி சபை

சாய்ந்தமருதுக்கும் தனியான உள்ளூராட்சி மன்றம் ; ஹக்கீம் உறுதி

0 661

கல்­முனை வடக்கு தமிழ் உப பிர­தேச செய­லகம் தர­மு­யர்த்­தப்­ப­டு­கின்ற அதே­வேளை சாய்ந்­த­ம­ரு­துக்­கான தனி உள்­ளூ­ராட்சி சபையும் உரு­வாக்கித் தரப்­படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

சாய்ந்­த­ம­ருது பெரிய பள்­ளி­வாசல், கல்­முனை மாந­கர சபையின் சாய்ந்­த­ம­ருது தோடம்­பழ சுயேட்­சைக்­குழு, முஸ்லிம் காங்­கி­ரஸின் சாய்ந்­த­ம­ருது மத்­திய குழு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.
சாய்ந்­த­ம­ரு­துக்கு தனி­யான உள்­ளூ­ராட்சி மன்றம் வழங்­கு­வது தொடர்பில், சாய்ந்­த­ம­ருது சுயேச்­சைக்­குழு உறுப்­பி­னர்கள் மற்றும் கட்சி பிர­தி­நி­தி­க­ளு­ட­னான பரஸ்­பர சந்­திப்பு நேற்­றைய தினம் ரவூப் ஹக்­கீமின் இல்­லத்தில் நடை­பெற்­றது.

இச்­சந்­திப்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம். ஹரீஸ், கல்­முனை மாந­கர சபையின் சுயேச்­சைக்­குழு உறுப்­பி­னர்கள், சாய்ந்­த­ம­ருது ஜும்ஆ பள்­ளி­வாசல் தலைவர் வை.எம். ஹனீபா, சட்டம் ஒழுங்கு அமைச்சின் மேல­திக செய­லாளர் ஏ.எல்.எம். சலீம் மற்றும் மு.கா. சாய்ந்­த­ம­ருது பிர­தி­நி­தி­க­ளான யஹ்­யாகான், அப்துல் பஷீர், ஏ.எல்.எம். புர்கான், அலியார் நஸார்தீன், மன்சூர் பாமி, எம். முபாரக் ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.

இங்கு கருத்து தெரி­வித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறி­ய­தா­வது;

கல்­மு­னையை நான்­காக பிரித்து சாய்ந்­த­ம­ரு­துக்கு சபை வழங்கும் தீர்­மானம் இருக்­கத்­தக்க நிலையில், தற்­போது கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக பிரச்­சினை பூதா­க­ர­மா­கி­யுள்­ளது. பேரி­ன­வாத சக்­தி­க­ளுடன் இணைந்து இப்­பி­ரச்­சினை தேசிய பிரச்­சி­னை­யாக உரு­மாற்றம் பெற்­றுள்­ளது. மக்கள் செல்­வாக்கை இழந்­துள்ள தமிழ் அர­சி­யல்­வா­திகள் சிலர் இப்­பி­ரச்­சி­னையில் அர­சியல் இலாபம் தேட முனை­கின்­றனர்.

அர­சாங்­கத்­துக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி, கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்­துக்கு கணக்­காளரை நிய­மிப்­ப­தற்­கான முஸ்­தீபு மேற்­கொள்­ளப்­பட்­டது. அந்த சம­யத்தில் அர­சாங்கம் தோற்­றுப்­போகக்­கூ­டாது என்ற சூழ்­நிலை காணப்­பட்­டது. நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை நிறை­வே­று­வது அர­சாங்­கத்­துக்கு மாத்­தி­ர­மல்ல எங்­க­ளுக்கும் பிரச்­சி­னைதான்.

நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மை­யுடன் பேசித்தான் இதற்கு நிரந்­தர தீர்வு காண­வேண்டும். கல்­முனை விட­யத்தில் தமிழ்த்­த­ரப்பு எவ்­வ­ளவு தூரம் விட்­டுக்­கொ­டுப்பு செய்­வார்கள் என்­ப­துதான் இதி­லுள்ள பிரச்­சினை. முஸ்லிம் தரப்பில் விட்­டுக்­கொ­டுப்பு செய்­தாலும் அதற்கும் சில எல்­லைகள் இருக்­கின்­றன. இந்த சந்­தர்ப்­பத்தில் எந்த தரப்­புக்கும் பாதிப்­பில்­லாமல் தீர்வை பெற்­றுத்­தர வேண்­டிய தார்­மீகப் பொறுப்பு பிர­த­ம­ருக்கு இருக்­கின்­றது. முன்­னைய ஆட்­சி­யின்­போதே கல்­முனை பிரச்­சி­னையை தீர்த்­தி­ருக்­கலாம் என்று சிலர் கூறு­கின்­றனர். ஆனால், கல்­மு­னையில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்­களின் இணக்­கப்­பா­டின்றி சர்­வா­தி­கார ரீதியில் இதற்கு தீர்­வு­காண முடி­யாது. இந்த சூழ்­நி­லையில் எங்­களை கைவிட்டு விட­வேண்­டா­மென மரு­த­முனை மக்­களும் நற்­பிட்­டி­முனை மக்­களும் இப்­போது கூறத் தொடங்­கி­யுள்­ளனர். ஏக காலத்­தி­லேயே இவை எல்­லா­வற்றும் தீர்­வு­கா­ணப்­பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் ஓர் இணக்­கப்­பாட்­டுக்கு வந்து, கல்­மு­னை­யி­லுள்ள நிர்­வாக ரீதி­யான பிரச்­சி­னைகள் அனைத்தும் விரைவில் தீர்க்­கப்­படும். கல்­மு­னையை ஏக­ காலத்தில் நான்­காகப் பிரித்து, எல்லாப் பிரச்­சி­னை­களுக்கும் தீர்­வு­வரும் நேரத்தில் சாய்ந்­த­ம­ரு­துக்கும் தனி­யான உள்­ளூ­ராட்சி மன்றம் வழங்­கப்­படும் என்றார்.

அஸ்லம் எஸ்.மௌலானா

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.