மாயக்கல்லி மலையடியில் பௌத்த மடாலய நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

0 806

அம்­பாறை, இறக்­காமம் பிர­தேச சபைக்­குட்­பட்ட மாயக்­கல்லி மலை­ய­டியில் அமைக்­கப்­பட்டு வரும் பௌத்த மடா­ல­யத்தின் நிர்­மாணப் பணி­களை உடன் நிறுத்­து­மாறு கோரும் மகஜர் ஒன்றை இறக்­காமம் பிர­தேச சபை­யிடம் கைய­ளிக்­க­வுள்­ள­தாக ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்பின் இறக்­காமம் பிர­தேச அமைப்­பாளர் கே.எல்.சமீம் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், சர்ச்­சையில் கிடந்து வந்த இறக்­காமம் மாயக்­கல்லி மலை­ய­டி­வார பௌத்த மடா­லய நிர்­மாணம் மீண்டும் தொடங்­கப்­பட்­டி­ருப்­பது அங்­குள்ள மக்கள் மத்­தியில் அச்ச நிலை­மையைத் தோற்­று­வித்­துள்­ளது.

இக்­கட்­டட நிர்­மா­ணத்­திற்­காக அனு­மதி வழங்­கி­யது யார் என்­ப­தனை இறக்­காமம் பிர­தேச சபை மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­த­வேண்டும் என்­ப­துடன், இதன் நிர்­மா­ணப்­ப­ணியை உடன் தடை செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­யையும் மேற்­கொள்ள வேண்டும்.

பௌத்­தர்கள் இல்­லாத மாணிக்­க­மடு பிர­தேசம் நூறு வீதம் தமிழ் மக்­களின் குடி­யி­ருப்­பு­களைக் கொண்­ட­துடன், மலையைச் சுற்றி வர முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களும் அமை­யப்­பெற்­றதே மாயக்­கல்லி மலை­யாகும்.
கடந்த இரு­வ­ரு­டங்­க­ளுக்கு முன்பு அங்கு திடீ­ரென வைக்­கப்­பட்ட புத்தர் சிலை­யொன்றின் கார­ண­மாக ஏற்­பட்ட சர்ச்­சைக்குப் பின்னர் தமண பொலி­ஸா­ரினால் அம்­பாறை நீதி­மன்­றத்தில் பெறப்­பட்ட உத்­த­ரவின் பேரில் இப்­பி­ர­தே­சத்­திற்குள் எவரும் செல்லக் கூடாது என தடை­யுத்­த­ரவு விதிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் தற்­போது அதன் நிர்­மாணப் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தனால் அங்கு வாழ்ந்து வரும் சிறு­பான்மை மக்கள் மத்­தியில் அச்­சமும், பீதி­யு­மான நிலை தோன்­றி­யுள்­ளது.

சிறு­பான்மை மக்­களின் உரிமைக் குர­லா­கவும், பாது­காப்­பா­கவும் அமைவோம் என்று சிறு­பான்மை மக்­களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் இவ்வாறான இனவாதப் பயங்கரவாதத்தை கண்டுகொள்ளாமல் இருந்து வருவதனை நாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ரீ.கே.றஹ்­மத்­துல்லா

vidivelli

Leave A Reply

Your email address will not be published.