வஹாபிசம் பற்றிய அச்சத்தை போக்குவது எவ்வாறு?

0 915

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடை­பெற்ற தற்­கொலைத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து நாட்டில் ஏற்­பட்ட அசா­தா­ரண சூழ்­நிலை இன்னும் முற்­றுப்­பெ­ற­வில்லை. முஸ்லிம் விரோதப் போக்­குகள் திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் வளர்ந்­து­கொண்­டி­ருப்­பதை ஆங்­காங்கே நடை­பெறும் சம்­ப­வங்கள் ஊடாக புரிந்­து­கொள்ள முடி­கின்­றது. இதற்குப் பிர­தான காரணம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டக்­கூ­டிய பௌத்த தீவி­­ர­வாத அமைப்­புக்­களை வழி­ந­டத்­து­ப­வர்கள் பௌத்த சமூ­கத்தின் அடி­மட்­டத்தை தேர்ந்­தெ­டுத்து முஸ்லிம் விரோ­தி­களை உரு­வாக்­கு­வதன் மூலம் இஸ்லாம் பயங்­க­ர­வாதம் என்ற அடிப்­ப­டையில் பல­மான பொது­மக்கள் அபிப்­பி­ரா­யத்தை கட்­டி­யெ­ழுப்பி நாட்டில் இஸ்­லா­மிய விரோத செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பதை பாரிய திட்­ட­மாக முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

இவ்­வாறு நாளுக்கு நாள் இத்­த­கைய எதிர்ப்­பலை பலம் பெற்று இலங்கை முழு­வ­தற்கும் விரி­வ­டைந்தால் சாதா­ரண சிங்­கள பௌத்த மக்­க­ளையும், தமி­ழர்­க­ளையும், முஸ்லிம் விரோ­தி­க­ளாக மாற்­றி­வி­டலாம். அத்­த­கைய ஒரு­நிலை பல­ம­டைந்தால் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் எதிர்­கா­லத்தில் பாரிய சவால்­க­ளையும் நெருக்­க­டி­க­ளையும் சந்­திக்க நேரி­டலாம். எமது எதிர்­கால சந்­த­தி­யினர் இந்­நாட்டில் வாழ்­வு­ரி­மை­களை அனு­ப­விப்பதில் பாரிய சவால்­க­ளையும் நெருக்­க­டி­க­ளையும் சந்­திக்க வேண்­டிய ஒரு துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­ப­டலாம். அத்­த­கைய ஒரு நிலை ஏற்­ப­டு­வதை தடுக்க இன்­றைய இஸ்­லா­மிய தலை­மைத்­து­வங்கள் தற்­போ­தைய நிலை­மை­களை ஆழ­மாகப் புரிந்­து­கொண்டு அதற்கு நீண்­ட­கால அடிப்­ப­டையில் முஸ்லிம் எதிர் செயற்­பா­டு­களை முறி­ய­டிக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.
“முழு தேசமும் ஒரே சக்­க­ரத்தில் ஒன்­றி­ணைவோம்” என்ற தொனிப் பொருளில் 2019 ஜூலை 07 ஆம் திகதி கண்டி போகம்­பரை மைதா­னத்தில் நடை­பெற்ற பொது­பல சேனா அமைப்பின் கூட்­டத்தில் இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம், இஸ்­லா­மிய தீவி­ர­வாதம் மற்றும் வஹா­பிஸம் என்­ப­வற்றை தோற்­க­டிக்க சிங்­கள பௌத்­தர்கள் அணி­தி­ரள வேண்­டு­மென்ற அடிப்­ப­டையில் பௌத்­தர்­க­ளுக்கு பகி­ரங்க வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அந்தக் கூட்­டத்தில் முக்­கி­ய­மான பேசு பொரு­ளாக அமைந்­தது இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தமும் வஹா­பி­ச­மு­மாகும். அதனை காட்டி சிங்­கள மக்கள் மத்­தியில் எந்­த­ள­விற்கு அச்­சத்­தையும் பீதி­யையும் ஏற்­ப­டுத்த முடி­யுமோ அதற்­கான ஏற்­பா­டுகள் அதி­தீ­வி­­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்த பணியை அது­ர­லியே ரதன தேரரும் ஞான­சார தேரரும் இரண்டு கோணங்­க­ளி­லி­ருந்து நன்கு திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் மேற்­கொண்டு வரு­கின்­றனர். இவர்கள் இரு­வ­ருக்கும் பக்க பல­மாக அதற்கு ஆத­ர­வ­ளிக்­கக்­கூ­டிய சிவில் சமூக பிர­தி­நி­திகள் குழுக்கள் பின்னால் இருந்து செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. அத்­துடன் காத்­தா­ன­்கு­டியில் இது­வ­ரையில் ஷரீஆ சட்டம் மூலம் 20 பேர் கொலை செய்­யப்­பட்­டுள்­ளனர் என்று புதிய புர­ளி­யொன்று கிளப்­பப்­பட்­டி­ருக்­கின்­றது. அவ்­வாறே 90.000 பௌத்த மதத்தைச் சேர்ந்த பெண்­களை மதம் மாற்றி முஸ்லிம் இளை­ஞர்கள் திரு­மணம் முடித்­தி­ருப்­ப­தா­கவும் புதிய தேடல் ஒன்று செய்­யப்பட் டிருக்­கின்­றது. இவர்­களை விரைவில் மீண்டும் பௌத்­தர்­க­ளாக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள இருப்­ப­தா­கவும் அது­ர­லியே ரதன தேரர் கூறி­வ­ரு­கின்றார். அத்­துடன் பௌத்த மதத்தை ஏற்ற முஸ்­லிம்­களை ஷரீஆ சட்­டத்தின் அடிப்­ப­டையில் முஸ்­லிம்கள் கொலை செய்­வ­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­துள்ளார்.

ஏற்­க­னவே ஷரீஆ சட்டம் என்ற வார்த்தை மூலம் நாட்டில் ஒரு அச்சம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்ற நிலையில் இது மற்­று­மொரு புதிய குண்டுத் தாக்­குதல் போன்ற கதை­யாகும். இவ்­வாறு மக்­களை அச்­ச­ம­டையச் செய்யும் கதை­களை பரப்பி அதனை அப்­பாவி மக்கள் ஏற்­கும்­படி செய்­தால்தான் அந்த மக்­களை இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகத் திசை­தி­ருப்ப முடியும். ஏற்­க­னவே தெற்கில் மட்­டும்தான் இத்­த­கைய கதை­களை பரப்­பிய சிங்­கள தீவி­­ர­வா­திகள் இப்­போது வடக்கு, கிழக்­கில் தமி­ழர்­களை பீதி­யடைச் செய்ய இன்னும் பல புதிய தக­வல்­களை தேடிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

சாதா­ரண மக்கள் முதல் எல்லாத் தரப்­பி­னர்­க­ளி­டமும் கைகளில் தவழும் ஸ்மார்ட் போன்கள் ஊடாக இத்­த­கைய கருத்­துக்கள் பரி­மா­றப்­ப­டு­வதால் அவை மிக வேக­மாக சிங்­கள பௌத்­தர்­க­ளையும் மறு­பு­ற­மாக தமி­ழர்­க­ளையும் சென்­ற­டையக் கூடி­ய­தாக உள்­ளன. அவற்றின் ஊடாக அரபு நாடு­களில் நடை­பெறும் சில இஸ்­லா­மிய தொடர்பே இல்­லாத மனிதப் படு­கொ­லைகள், அடி, உதை, இம்­சைப்­ப­டுத்தும் காட்­சி­களை பரி­மாறி அவை முஸ்­லிம்­களால் இஸ்­லாத்தின் பெயரில் செய்­யப்­ப­டு­கின்ற அநி­யா­யங்கள் என்று கூறப்­ப­டு­கின்­றன. இதில் உள்­நாட்டில் இருக்கும் இஸ்­லா­மிய விரோதக் குழுக்­களின் செயற்­பா­டுகள் போன்றே வெளி­நா­டு­களில் தொழில் புரி­யக்­கூ­டிய இலங்­கையைச் சேர்ந்த முஸ்லிம் விரோத உணர்­வுள்ள முஸ்லிம் அல்­லா­த­வர்கள் ஆங்­காங்கே நடை­பெறும் சம்­ப­வங்­களை இலங்­கைக்கு பரி­மாறி பாத­க­மான சூழலை உரு­வாக்­கு­வதில் துணை­யாக செயற்­பட்டு வரு­கின்­றனர்.

உதா­ர­ண­மாக, மத்­தி­ய­கி­ழக்கில் வீட்டுப் பணிப் பெண்­க­ளுக்கு அந்­நாட்டு வீட்டு உரி­மை­யா­ளரால் (பொஸ்) அநி­யா­யங்கள் செய்யும் அதி­க­மான காட்­சி­களை அத்­த­கைய வீடு­களில் சார­தி­யாக அல்­லது பணி­யா­ளர்­க­ளாக இருக்கும் முஸ்லிம் அல்­லாத நபர்கள் வீடி­யோ­வாக பதிவு செய்து இலங்­கைக்கு அனுப்­பு­கின்­றனர். அவ்­வாறே உள்­நாட்டில் முஸ்­லி­மாக இருந்து பொரு­ளா­தார ரீதி­யா­கவும் வேறு காரணி­க­ளாலும் பாதிக்­கப்­பட்ட பெண்­களை தேடி அவர்­க­ளுக்கு பணம் கொடுத்து இஸ்­லாத்­திற்கும் இஸ்­லாத்தின் அடிப்­ப­டை­க­ளுக்கும் எதி­ராகப் பேச­வைத்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்­க­ளாக பரி­மா­றப்­ப­டு­கின்­றன. ஷரீஆ (இஸ்­லா­மிய சட்டம்), மத­மாற்றம், முஸ்­லிம்­களின் வர்த்­தக வாணிபம், திரு­மணம், காதி நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் என்று பல விட­யங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­களை தேடல் செய்து பரப்­பு­வ­தற்­கா­கவே சில குழுக்கள் பணத்­திற்­காக ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். அதில் பிர­தான பாத்­தி­ரங்­களை இஸ்­லா­மிய விரோத சார்பு இலத்­தி­ர­னியல் மற்றும் அச்சு ஊட­கங்­களும் செய்து வரு­கின்­றன.

அத்­த­கைய கருத்­துக்கள் இலங்கை மக்­க­ளது வியா­பாரம், கல்வி நட­வ­டிக்­கைகள், அலு­வ­லக நட­வ­டிக்­கைகள், பொது­வான நட­மாட்டம், சக­வாழ்வு என்ற அடிப்­ப­டையில் எல்லா மட்­டங்­க­ளிலும் மோச­மான தாக்­கங்­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன.

இலங்­கையை ஐரோப்­பியர் ஆட்­சிய செய்த காலப்­ப­கு­திக்குள் இங்கு உரோமன் டச்சு மற்றும் ஆங்­கி­லேய சட்­டங்கள் அறி­மு­க­மா­கின. அத­னோடு முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனியார் சட்­ட­மாக இஸ்­லா­மிய சட்­டங்­களும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டன.

அவ்­வாறே மலை­நாட்டு சட்டம், கரை­யோர சட்டம், முக்­குவர் சட்டம், தேச­வ­ழமை சட்டம் என்ற அடிப்­ப­டையில் மேலும் சட்­டங்கள் நடை­மு­றையில் இருந்­துள்­ளன. அரபி மொழியில் “ஷரீஆ” என்றால் சட்டம் என்ற அர்த்­த­மாகும். இஸ்­லா­மிய ஷரீஆ என்­பது இஸ்­லா­மிய சட்­டத்தை குறிக்­கின்­றது. அரபு நாடு­களில் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்ற முழு­மை­யான இஸ்­லா­மிய சட்­டங்கள் இலங்­கையில் இது­வ­ரையில் கடைப்­பி­டிக்­கப்­பட்­ட­தாக வர­லாறு இல்லை. முக்­கி­ய­மான நான்கு விட­யங்­களில் மாத்­தி­ரமே இலங்­கையில் முஸ்­லிம்­களால் இஸ்­லா­மிய சட்டம் (ஷரீஆ) பின்­பற்­றப்­ப­டு­கின்­றது. திரு­மணம், விவா­க­ரத்து, வாரிசு உரிமை, மஸ்ஜித் நிர்­வாகம் (வக்ப் சட்டம்) அவை­யாகும்.

எவ­ரையும் கொலை செய்ய இது­வ­ரையில் முஸ்­லிம்கள் இஸ்­லா­மிய சட்­டத்தை பின்­பற்­ற­வில்லை. விப­சாரம், வட்டி, மது­பான பாவனை, கொலை, களவு, அவ­தூறு போன்ற குற்றச் செயல்­க­ளுக்கு இலங்­கையில் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இஸ்­லா­மிய சட்டம் பயன்­ப­டுத்­தப்­ப­ட்ட­தாக இல்லை. அத்­த­கைய சட்­டங்­களை முஸ்­லிம்கள் அமுல்­ப­டுத்த இலங்கை ஒரு இஸ்­லா­மிய நாடாக இருக்க வேண்டும். சவூதி அரே­பியா அல்­லது ஈரான் போன்ற முழுமையான இஸ்­லா­மிய நாடு­களில் கடைப்­பி­டிக்கும் சட்­டங்­களை இங்கு ஒரு­போதும் முஸ்­லிம்கள் அமுல்­ப­டுத்த எதிர்­பார்க்­கவும் முடி­யாது. அதற்­காக முயற்சி செய்­ததும் இல்லை. இதனை முஸ்­லிம்கள் இலங்­கையில் மிகத் தெளி­வாக புரிந்து வைத்­துள்­ளார்கள். இந்த உண்மை பௌத்த தரப்­பி­ன­ருக்கு புரிய வைக்­கப்­பட வேண்டும்.

அத்­துடன், முஸ்­லிம்கள் ஒரு­போதும் இலங்­கையில் நடை­மு­றை­யி­லுள்ள ஆங்­கி­லேய சட்­டங்­களை நிரா­க­ரித்­த­தா­கவும் வர­லாறு இல்லை. அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் முஸ்­லிம்கள் இந்­நாட்டில் பின்­பற்­றப்­ப­டு­கின்ற உரோமன், டச் மற்றும் ஆங்­கி­லேய சட்­டத்தின் அடிப்­ப­டை­யிலே நிவா­ர­ணங்­களை நாடு­கின்­றனர். அர­சாங்­கத்தின் சட்­டத்­திற்­க­மை­வா­கவே உள்­நாட்டு நீதி­மன்­றங்கள் வழங்­கு­கின்ற தண்­ட­னை­க­ளையே முஸ்­லிம்­களும் ஏற்று தண்­டனை அனு­ப­விக்­கின்­றனர். இலங்­கையில் முஸ்­லிம்கள் 1200 வரு­டங்­க­ளுக்கு மேலாக வாழ்ந்து வந்­தாலும் திரு­மணம், வாரி­சு­ரிமை, விவா­க­ரத்து, மஸ்ஜித் நிர்­வாகம் தவிர்ந்த ஏனைய எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் ஷரீஆ என்று பௌத்த தீவி­­ர­வா­தி­களால் பீதி ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற சட்­டங்கள் இலங்­கையில் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வடக்கு, கிழக்கில் தமி­ழர்­க­ளையும் தெற்கில் சிங்­க­ள­வர்­க­ளையும் தூண்டி வன்­மு­றைக்கு இட்டுச் செல்­வ­தற்­கான ஒரு முயற்­சி­யா­கவே இவ்­வா­றான குற்­றச்­சாட்­டு­களைக் காண­வேண்­டி­யி­ருக்­கின்­றது.

திரு­மணம், வாரி­சு­ரிமை, விவா­க­ரத்து, மஸ்ஜித் நிர்­வாகம் ஆகிய விடயங்­களை எடுத்துக் கொண்டால் முஸ்­லிம்­க­ளது அன்­றாட வாழ்வில் இவை நேர­டி­யாக சம்­பந்­தப்­ப­டு­வதால் பிரித்­தா­னியர் ஆட்சி முதல் முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கின்ற ஒரு உரி­மை­யாகக் கருதி இந்த செயற்­பா­டு­களில் இஸ்­லா­மிய சட்டம் பின்­பற்­றப்­ப­டு­கின்­றது. விவா­க­ரத்து தொடர்­பாக பிணக்­கு­களை தீர்த்துக் கொள்­வ­தற்­காக இஸ்­லா­மிய நீதி­மன்­ற­மாக காதி நீதி­மன்ற நடை­முறை இருந்து வரு­கின்­றது. அதே­நேரம் முஸ்லிம் சமூ­கத்தில் சிறிய சிறிய பிணக்­குகள் ஏற்­ப­டும்­போது பொலிஸ் நிலையம் செல்­வதை தவிர்த்து அவற்றை ஒவ்­வொரு ஊரிலும் உள்ள பிர­தான பள்­ளி­வா­ச­லான மஸ்ஜித் நிர்­வா­கத்தின் மூலம் தீர்த்­துக்­கொள்ளும் நடை­முறை இருந்து வரு­கின்­றது. இதே பணியை நடை­மு­றை­யி­லுள்ள சட்­டத்­தின்­படி பிணக்­கு­களைத் தீர்த்து வைக்கும் இணக்க சபை­களும் செய்­கின்­றன.

நாட்­டி­லுள்ள பொலிஸ் நிலை­யங்கள் கூட மஸ்ஜித் நிர்­வா­கங்கள் செய்து வரு­கின்ற முரண்­பா­டு­களை தீர்த்து வைக்கும் நடை­மு­றையை அனு­ம­தித்­தி­ருக்­கின்­றது. அதனால் பொலிஸ் நிலை­யங்­க­ளதும் நீதி­மன்­றத்­தி­னதும் சுமை குறை­வாக இருந்து வரு­கின்­றது. இவை தவிர முஸ்லிம் சமூகம் எவ­ரையும் இஸ்­லா­மிய சட்­டத்தின் அடிப்­ப­டையில் கொலை செய்­த­தாக இல்லை. அத்­துடன் இந்த தனியார் சட்­டங்கள் தொடர்­பாக முஸ்­லிம்கள் தமி­ழர்­க­ளையோ சிங்­க­ள­வர்­க­ளையோ நிர்ப்­பந்­தித்து அதனை திணிப்­ப­தற்கு முயற்சி செய்­த­தா­கவும் வர­லாறு இல்லை.

பொது­பல சேனா அமைப்பு எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் எதிர்­பார்க்கும் 70 இலட்சம் சிங்­கள வாக்­கு­களைத் திரட்ட சிங்­கள சமூ­கத்தில் ஏதா­வதொரு வகை­யான அச்­சமும் பீதியும் தொடர்ச்­சி­யாக ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். முஸ்­லிம்­களை நசுக்­கு­வ­தற்கு தருணம் தேடிக்­கொண்­டி­ருந்த நிலையில் இப்­போது இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம் மற்றும் இஸ்­லா­மிய தீவி­­ர­வாதம் என்­ப­வற்­றோடு வஹா­பிஸம் பற்­றிய அச்­சத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய சந்­தர்ப்பம் கிடைத்­தி­ருக்­கின்­றது. அதற்­காக சிங்­கள மற்றும் தமி­ழர்கள் மத்­தியில் இஸ்லாம் மற்றும் முஸ்­லிம்கள் தொடர்­பாக வெறுப்­பையும் அச்­சத்­தையும் பீதி­யையும் ஏற்­ப­டுத்தும் நோக்கில் புதிய கதை­களை பரப்­பு­வதே இந்த பௌத்த தீவி­ர­வா­தி­க­ளது திட்­ட­மாகும். வடக்கு கிழக்கில் காலா கால­மாக இருந்து வரு­கின்ற தமிழ் – முஸ்லிம் உறவு பாதிக்­கப்­பட இட­ம­ளிக்க முடி­யாது. தமி­ழர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் புதிய இன முரண்­பாடு உரு­வா­கா­ம­லி­ருக்க வேண்டும்.
அது­ர­லியே ரதன தேரர் மஹிந்த ராஜபக் ஷவின் அர­சியல் பலத்தை உறுதி செய்­வ­தற்­கா­கவும், ஞான­சார தேரர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு ஆத­ரவை உறுதி செய்­வ­தற்­கா­கவும் மொத்­தத்தில் இரண்­டு­பேரும் ஐ.தே.க.வை தோற்­க­டித்து சிங்­கள மேலா­திக்­கத்தை உறுதி செய்­வதை இலக்­காகக் கொண்டே காய் நகர்த்­தல்­களை மேற்­கொண்டு வரு­வது தெளி­வாகத் தெரி­கின்­றது. அந்த இலட்­சி­யத்தை அடை­வ­தற்­காக சிங்­கள மக்­களை திசை திருப்­பு­வ­தற்­கா­கவே வஹா­பிஸம், சூபிசம், இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம், இஸ்­லா­மிய ஷரீஆ சட்டம் மற்றும் இஸ்­லா­மிய தீவி­ர­வாதம் என்ற பதங்­களை பயன்­ப­டுத்தி சிங்­கள மக்­களை அச்­சத்­திலும் பீதி­யிலும் மூழ்­க­டித்து வாக்­கு­களை வேட்­டை­யாடும் திட்டம் வெற்­றி­ய­ளிக்­குமா என்­பதை பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்டும்.

ஆனாலும் இத்­த­கைய விஷ­மி­களால் ஒவ்­வொரு நாளும் செய்­தி­யாளர் மாநா­டு­களை கூட்டி முன்­வைக்கும் முஸ்லிம் விரோத கதை­க­ளுக்கு முஸ்­லிம்­களால் பதி­ல­ளிக்க வேண்­டிய தார்­மீக பொறுப்பு இருந்து வரு­கின்­றது. இட்­டுக்­கட்­டப்­படும் கதை­களில் உண்­மை­யில்லை என்­பதை வெளிப்­ப­டுத்த வேண்­டி­ய­தோடு அவற்றை பகி­ரங்­க­மாக மறுக்க வேண்­டிய பொறுப்பும் இருந்து வரு­கின்­றது. அவ்­வாறு செய்­யா­விட்டால் அத்­த­கைய கதை­களே உண்­மை­க­ளாக சோடிக்­கப்­பட்டு நாட­ளா­விய ரீதியில் பொது வாழ்க்கை மற்றும் அரச மற்றும் தனியார் துறை­களில் கடமை புரி­கின்ற ஊழி­யர்கள் முதல் அடி­மட்டம் வரையில் அவைதான் உண்மை என்று மக்கள் நம்பும் நிலை ஏற்­ப­டு­கின்­றது.

இது முஸ்­லிம்­களின் இருப்­புக்கு ஆரோக்­கி­ய­மா­ன­தாக இல்லை. அத்­துடன் வடக்கில் தமி­ழர்­க­ளு­டனும் தெற்கில் சிங்­கள மக்கள் மத்­தி­யிலும் எத்­த­கைய சவால்கள் வந்­தாலும் முயற்­சியை கைவி­டாமல் புரிந்­து­ணர்­வையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்த நிலை­யான திட்­டங்கள் முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்து முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். அரே­பிய தீப­கற்­பத்­தில்­கூட முஸ்­லிம்­களால் அவ்­வ­ள­வாக கவ­னத்தில் எடுக்­கப்­ப­டாத ஒரு கோட்­பா­டா­கவே இந்த வஹா­பிஸம் பற்­றிய சிந்­தனை இருந்து வரு­கின்­றது.

அதற்­காக முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள புத்­தி­ஜீ­விகள் ஒன்­று­சேர வேண்டும். ஏற்­க­னவே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற சில இத்­த­கைய நட­வ­டிக்­கை­களில் இன்­றைய காலத்­திற்­கேற்ற வித­மாக புதிய அணு­கு­மு­றைகள் பின்­பற்­றப்­பட வேண்டும். சிங்­கள மக்கள் முஸ்­லிம்கள் என்­றாலே வெறுப்­பு­டனும் அச்­சத்­து­டனும் பார்க்கும் நிலை மேலும் உக்­கி­ர­ம­டை­யாமல் தடுக்க அவ­ச­ர­மாக நட­வ­டிக்­கைகள் தேவைப்­ப­டு­கின்­றன. இது ஒரு­வ­கையில் இலங்­கையில் முஸ்­லிம்­களின் இருப்பை உறுதி செய்வதற்காக இஸ்லாமிய விரோத சக்திகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அறிவியல் யுத்தமாக (Intellectual War against to Counter attack Anti Islamism) இருக்கலாம். அதற்காகவே முஸ்லிம் கல்விமான்கள் புத்தி ஜீவிகள் ஒன்றிணைந்து வியூகங்களை வகுக்க வேண்டிய தேவை உணரப்படுகின்றது.

அல்குர்ஆனில் இடம்பெறும் சிலவகையான காபிர்கள் தொடர்பான வசனங்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், சிங்கள இனத்தை அழிப்பதற்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு எதிரான ‘கருவறை யுத்தம்’ என்ற அடிப்படையிலும் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

வஹாபிசம், சூபிசம், சுன்னா போன்ற விடயங்களில் பௌத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தையும் குழப்பநிலையையும் போக்க நடவடிக்கைகள் தேவை. ஒவ்வொரு கிராம மட்டத்திலும் இத்தகைய செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அவர்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மறுக்கப்பட வேண்டும். சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கங்கள், நியாயங்கள் முஸ்லிம் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட வேண்டும். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவற்றை மறுப்பதற்கான பரந்தளவிலான திட்டங்கள் அவசியமாகின்றன. கடந்த காலங்களில் அவை சரியான முறையில் செய்யப்படவில்லை. சொல்வதை சொல்லிவிட்டு போகட்டும் என்று உதாசீனமாக இருந்துவிட முடியாது. பௌத்த சமூகத்தில் உள்ள அறிஞர்கள், கல்விமான்கள், துறைசார்ந்தவர்கள், பொதுமக்கள் அபிப்பிராயத்தை கட்டியெழுப்பும் ஆற்றல் உள்ளவர்கள் ஆகியோருடன் அதற்காகக் கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். இதே கலந்துரையாடல்கள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழர்களுடனும் கிறிஸ்தவர்களுடனும் அவசியமாகின்றன.

எம்.எஸ். அமீர் ஹுசைன்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.