சமயங்கள் மீதான கட்டுப்பாடுகள் உலகளாவிய ரீதியில் அதிகரிப்பு

0 757

சம­யங்­க­ளோடு தொடர்­பு­பட்ட வன்­செ­யல்கள் மற்றும் தாக்­கு­தல்கள் அதி­க­ரித்­துள்­ளதன் அடிப்­ப­டையில் உல­க­ளா­விய ரீதியில் சம­யங்கள் மீதான கட்­டுப்­பா­டு­களும் அதி­க­ரித்­துள்­ள­தாக ‘பிவ்’ ஆய்வு மத்­திய நிலை­யத்­தினால் வெளி­யி­டப்­பட்ட அண்­மைய அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த திங்­கட்­கி­ழமை வெளி­யி­டப்­பட்ட அவ்­வ­றிக்­கையில் சர்­வா­தி­கார நாடுகள் மற்றும் ஐரோப்­பிய நாடுகள் என வகைப்­ப­டுத்­தப்­பட்ட இரு வகை நாடு­க­ளிலும் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரை சம­யங்­க­ளுக்­கான கட்­டுப்­பா­டுகள் அதி­க­ரித்துச் சென்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

2017 ஆம் ஆண்டு 143 நாடு­களில் கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதி­ரான தாக்­குதல் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ள­தோடு 140 நாடு­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­குதல் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. தனி நபர்கள், அமைப்­புக்கள் மற்றும் குழுக்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட வன்­மு­றைகள் மற்றும் தாக்­கு­தல்கள் உள்­ள­டங்­க­லாக சம­யங்­க­ளோடு தொடர்­பு­பட்ட தாக்­கு­தல்கள் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் அதி­க­ரித்து வந்­துள்­ள­தாக அவ்­வ­றிக்கை தெரி­வித்­துள்­ளது.
2007 ஆம் ஆண்டில் இருந்து சீனா, இந்­தோ­னே­சியா மற்றும் ரஷ்யா உள்­ளிட்ட 52 அர­சாங்­கங்கள் சம­யங்கள் மீது ஒன்றில் உயர்­நிலை அல்­லது மிக உயர்­நிலை மட்ட கட்­டுப்­பா­டு­களை விதித்­துள்­ளன. தென்­னா­பி­ரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், பிரேஸில் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் குறைந்த மட்ட கட்­டுப்­பா­டு­களை விதித்­துள்­ளன எனவும் அவ்­வ­றிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இவ்­வ­றிக்­கையின் பிர­காரம், 2007 ஆம் ஆண்டு தொடக்கம் ஐரோப்பா மற்றும் மத்­திய கிழக்கு – வட ஆபி­ரிக்க பிராந்­தி­யங்­களில் சமூக ரீதி­யான தாக்­குதல்கள் பாரிய அளவில் அதி­க­ரித்­துள்­ளன. 2017 ஆம் ஆண்­ட­ளவில் சமய ரீதி­யான தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்ட நாடு­களின் எண்­ணிக்கை 21 இலி­ருந்து 33 வரை அதி­க­ரித்­தி­ருந்­தது.

முஸ்லிம் பெண்­களால் அணி­யப்­படும் புர்கா மற்றும் முகத்­திரை உள்­ளிட்ட சமய ஆடை­க­ளுக்­கான தடை­களை ஐரோப்­பாவில் 2007 இல் வெறு­மனே 5 நாடு­களே விதித்­தி­ருந்­தன, ஆனால் இவ்­வெண்­ணிக்கை 2017 இல் 20 ஆக அதி­க­ரித்­தது.

ஜேர்­ம­னியில் ஆயி­ரக்­க­ணக்­கான அக­திகள் கிறிஸ்­தவ சம­யத்தை தழு­வு­மாறும் அவ்­வா­றில்­லா­விட்டால் நாடு கடத்­தப்­ப­டுவர் எனவும் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டனர்.

இலட்­சக்­க­ணக்­கான சீனா­வி­லுள்ள உய்கூர் முஸ்லிம் மக்கள் மீள் கல்­வி­யூட்டல் முகாம்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­மை­யி­னையும் மியன்­மாரில் இரா­ணு­வத்­தி­ன­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட துஷ்­பி­ர­யோ­கங்கள் மற்றும் தாக்­கு­தல்கள் கார­ண­மாக முஸ்­லிம்கள் தமது வீடு­களை விட்டு வெளி­யேற நிர்ப்­பந்­திக்­கப்­பட்­ட­மை­யி­னையும் குறித்த ஆய்வு மத்­திய நிலையம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

வட­மேற்கு சீனாவின் சுயாட்சிப் பிர­தே­ச­மான ஸின்­ஜி­யாங்கில் முஸ்லிம் சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­முறைக் கொள்­கைக்கு எதி­ராக சீனா­வினை சர்­வ­தேச சமூ­கங்கள் விமர்­சித்­துள்­ளன.

2012 ஆம் ஆண்டு தொடக்கம் பௌத்த கடும்­போக்­கு­வா­தி­களால் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக இன ரீதி­யான வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன. இதன் கார­ண­மாக நூற்றுக் கணக்­கானோர் கொல்­லப்­பட்­ட­தோடு ஆயிரக் கணக்கானோர் வீடுகளை விட்டும் வெளியேற்றப்பட்டு மியன்மார், தாய்லாந்து, மலேஷியா, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் அழுக்குப் படிந்த வசதிகளற்ற முகாம்களில் முடங்கியுள்ளனர்.
உலகில் மிக மோசமாக வன்முறைக்குள்ளாக்கப்பட்ட சிறுபான்மையினராக ரோஹிங்கிய முஸ்லிம்களை ஐக்கிய நாடுகள் சபை வகைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.