அசாத்சாலிக்கு எதிராக ஓ.சி.பி.டி. விசாரணை

0 652

நீதி­ப­திகள் அடிப்­ப­டை­வாத அமைப்­புக்­களின் உறுப்­பி­னர்­க­ளாக உள்­ள­தாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி வெளி­யிட்ட கருத்து தொடர்பில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஓ.சி.பி.டி. எனப்­படும் திட்­ட­மிட்ட குற்­றங்­களை தடுக்கும் பொலிஸ் பிரிவு தெரி­வித்­துள்­ளது. இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதி­பரின் உத்­த­ர­வுக்­க­மைய விஷேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக திட்­ட­மிட்ட குற்­றங்­களைத் தடுக்கும் பொலிஸ் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சமிந்த வெல­கெ­தர நேற்று கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­வுக்கு அறி­வித்தார். 

முன்னாள் ஆளுநர் அசாத்­சா­லியின் கருத்து, இனங்­க­ளுக்­கி­டையே முரண்­பாட்டை ஏற்­ப­டுத்தும் வித­மாக உள்­ள­தாக சட்­டத்­த­ரணி பிரே­மநாத் சி தொல­வத்த முன்­வைத்த முறைப்­பாட்டை மையப்­ப­டுத்தி தண்­டனை சட்டக் கோவை , சிவில் மற்றும் அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்டம் மற்றும் நீதி­மன்ற கட்­ட­மைப்புச் சட்டம் ஆகி­ய­வற்றின் கீழ் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சமிந்த வெல­கெ­தர நீதி­மன்­றுக்கு அறி­வித்தார்.

‘கடந்த மே 4 ஆம் திகதி அசாத் சாலி , நீதி­ப­திகள் அடிப்­ப­டை­வாத அமைப்­புக்­க­ளுடன் தொடர்பில் உள்­ள­தா­கவும் , பிர­தேச சபை­யொன்று கூட அனு­ம­திக்­காத பள்­ளி­வாசல் ஒன்­றுக்கு நீதி­பதி ஒருவர் தலை­யீடு செய்து இயங்கத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்­ள­தா­கவும் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

இது பயங்­க­ர­மான நிலைமை எனவும் அது இனங்­க­ளுக்கு இடை­யி­லான முரண்­பாட்டை ஏற்­ப­டுத்தும் எனவும் சட்­டத்­த­ரணி பிரே­மநாத் சி தொல­வத்த முறைப்­பாட்டில் கூறி­யுள்ளார். அசாத் சாலி கூறு­வது உண்­மை­யானால் அதையே முதல் தக­வ­லாக கருதி விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறும் அவர் கோரி­யுள்ளார்.’ எனவே அது தொடர்பில் விசா­ர­ணைகள் பொலிஸ் மா அதி­பரின் உத்­த­ர­வுக்கு அமைய ஆரம்­பிக்கப் பட்­டுள்­ளது என திட்­ட­மிட்ட குற்­றங்­களைத் தடுக்கும் விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இது தொடர்பில் முறைப்­பாட்­டா­ள­ரான சட்­டத்­த­ரணி பிரே­மநாத் சி தொல­வத்­த­விடம் கடந்த 24 ஆம் திகதி பொலிஸார் இது தொடர்பில் வாக்கு மூலம் பதிவு செய்­துள்­ள­தா­கவும் இதன்­போது பொலிஸார் மன்­றுக்கு அறி­வித்­தனர்.
இந்­நி­லையில் மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக அசாத் சாலியின் கருத்து தொடர்பில் ஊடகங்களில் வெளியான செம்மைப்படுத்தப்பட்ட அறிக்கைகள், வீடியோ காட்சிகளையும் செம்மை படுத்தப்படாத அறிக்கைகள் , வீடியோ கட்சிகளையும் பெற்றுக்கொள்ளவும் நீதிமன்றம் விசாரணையாளர்களுக்கு அனுமதியளித்தது.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.