முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்பு பிர­சாரம் வன்­மு­றை­களை வன்­மை­யாக கண்­டிக்­கிறோம்

உலக தமிழர் பேரவை அறிக்கை

0 582

இலங்­கையில் முஸ்லிம் சமூ­கத்­த­வர்­க­ளுக்கு எதி­ராக சில சிங்­கள பௌத்த பெரும்­பான்மை இனத்­த­வரால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற வெறுப்­பு­ணர்­வு­மிக்க செயற்­பா­டுகள் குறித்து கடு­மை­யான கண்­ட­னத்தை வெளி­யி­டு­வ­துடன், இத்­த­கைய ஆபத்­தான செயற்­பா­டுகள் தொடர்பில் அர­சாங்கம் விரை­வாக உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றும் உலக தமிழர் பேரவை கோரிக்கை விடுத்­தி­ருக்­கி­றது.இது­வி­ட­யத்தில் உலக தமிழர் பேரவை விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­ப­தா­வது:

கடந்த 2009 ஆம் ஆண்டில் போர் முடி­விற்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டதை அடுத்து சிங்­கள பௌத்த சமூ­கத்­தி­லுள்ள பேரி­ன­வா­தி­களின் அடுத்த பிர­தான இலக்­காக முஸ்லிம் சமூகம் மாறி­ய­துடன், பெரும்­பான்­மை­யின சமூ­கத்தின் பலம் பொருந்­திய பிரி­வி­னரால் இந்­நிலை போஷிக்­கப்­பட்­டது.

துல்­லி­ய­மாகத் திட்­ட­மி­டப்­பட்டு கடந்த 2014 ஜூன் மாதம் களுத்­து­றையில் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல், கடந்த வருடம் பெப்­ர­வரி மற்றும் மார்ச் மாதங்­களில் அம்­பாறை, கண்டி நக­ரங்­களில் இடம்­பெற்ற நன்கு ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட கல­வரம் மற்றும் கடந்த மே மாதம் வடமேல் மாகா­ணத்தில் பல்­வேறு நக­ரங்­க­ளிலும் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் என்­ப­வற்றை குறிப்­பிட்டுக் கூற­மு­டியும்.

இந்தத் தாக்­கு­தல்­களில் முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள் கொல்­லப்­பட்­டார்கள். முஸ்­லிம்­களின் வீடுகள், வர்த்­தக நிலை­யங்கள், பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­ட­துடன், எரி­யூட்­டப்­பட்­டன. மேலும் பலர் இடம்­பெ­யரும் நிலை­யேற்­பட்­டது.

இவற்றில் பெரும்­பா­லான தாக்­கு­தல்கள் பௌத்த பிக்­கு­களின் வழி­காட்­டலில், பாது­காப்புப் படை­யினர் பணியில் ஈடு­பட்­டி­ருக்கும் போது இடம்­பெற்ற தாக்­கு­தல்­க­ளாகும். அண்­மைய வரு­டங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்­பு­ணர்வு திட்­ட­மிட்ட முறையில் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்டு வந்­தி­ருப்­ப­துடன், அச்­ச­மூகம் பல்­வேறு வழி­மு­றை­க­ளிலும் வன்­மு­றை­க­ளுக்கும், மிரட்­டல்­க­ளுக்கும் உள்­ளா­கி­யி­ருக்­கி­றது.

இவற்றின் உச்­ச­கட்­ட­மாக உயிர்த்த ஞாயி­று­தின குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பி­ருப்­ப­தாகக் குறிப்­பிட்டு முஸ்லிம் அமைச்­ச­ரையும், ஆளு­நர்­க­ளையும் பதவி வில­கு­மாறு வலி­யு­றுத்தி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான அத்­து­ர­லியே ரதன தேரரால் முன்­னெ­டுக்­கப்­பட்ட உண்­ணா­வி­ரதப் போராட்டம் அமைந்­தி­ருந்­தது.

உயிர்த்த ஞாயி­று­தினத் தாக்­கு­தல்கள் தொடர்பில் விரி­வான விசா­ர­ணையை மேற்­கொண்டு, அத­னுடன் நேர­டி­யா­கவோ அல்­லது மறை­மு­க­மா­கவோ தொடர்­பு­டை­ய­வர்கள் அனை­வ­ரையும் சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்கு உலகத் தமிழர் பேரவை முழு­மை­யான ஆத­ரவை வழங்கும்.

இவ்­வா­றான ஆபத்­தான போக்கைக் கட்­டுப்­ப­டுத்­துதல் மற்றும் கைது செய்தல் என்­ப­வற்­றுக்­கான தலை­மைத்­து­வத்தை வழங்­கு­வ­தற்கு இலங்­கையின் அர­சி­யல்­வா­திகள் தவ­றி­யி­ருக்­கி­றார்கள்.

இந்­நி­லையில் சிறு­பான்­மை­யின சமூ­கத்­த­வரும், சிறு­பான்­மை­யின மக்­களின் பிர­தி­நி­தி­களும் மீண்டும் தமது பாது­காப்பு, உரி­மைகள் என்­ப­வற்றை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.

அதே­போன்று பெரும்­பான்­மை­யின சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் மற்றும் மதத்தலைவர்கள் அனைத்து சமூகங்களின் மத்தியிலும் சமத்துவத்துவத்தை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு செயற்பட வேண்டும். அதுமாத்திரமன்றி இலங்கை மீண்டுமொரு இன,மதம் சார்ந்த பிரிவினை மற்றும் வன்முறைக்குள் தள்ளப்படாதிருப்பதனை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பை சர்வதேச சமூகமும் சரியாகச் செய்ய வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.