தர்மசக்கர ஆடை விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண் மஸாஹிமா அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

0 655

கப்­பலின் சுக்கான் படம் பொறிக்­கப்­பட்ட ஆடை­ய­ணிந்­தி­ருந்த முஸ்லிம் பெண்­மணி பௌத்த தர்­ம­சக்­கரம் பொறிக்­கப்­பட்ட ஆடை அணிந்­தி­ருக்­கிறார் என தவ­றாக ஹஸ­லக பொலி­ஸா­ரினால் குற்றம் சுமத்­தப்பட்டு கைது செய்து விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­ட­மை­யினால் தனது அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ளமை கார­ண­மாக தனக்கு நஷ்­ட­ஈடு பெற்­றுத்­த­ரு­மாறு உயர் நீதி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல்  மனு­வொன்­றினைத் தாக்கல் செய்­துள்ளார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை இந்த அடிப்­படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. கொலன்­கொட புத­லு­கஸ்­யாய பகு­தியை வசிப்­பி­ட­மாகக் கொண்ட அப்துல் ரஹீம் மஸா­ஹிமா எனும் முஸ்லிம் பெண்­ம­ணி­யினால் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள அடிப்­படை உரிமை மீறல் மனுவில் பிர­தி­வா­தி­க­ளாக சட்­டமா அதிபர், ஹஸ­லக பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சந்­தன நிசாந்த மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளனர்.

சட்­டத்­த­ர­ணி­க­ளான ஹரினி ஜய­வர்­தன, புலஸ்தி ஹேவா­மான்ன மற்றும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜே.சி. வெலி­அ­முன ஆகி­யாரின் ஆலோ­ச­னைக்­க­மை­வாக இந்த அடிப்­படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

முறைப்­பாட்­டாளர் ஒரு பிள்­ளையின் தாயா­ராவார். அவர் சிறிது காலம் சவூதி அரே­பி­யாவில் பணிப்­பெண்­ணாகத் தொழில் புரிந்­ததன் பின்பு நாடு திரும்பி ஆடைகள் தைப்­பதை தொழி­லாகக் கொண்­ட­வ­ராவார்.

கடந்த மே மாதம் 17 ஆம் திகதி காலை 10.30 மணி­ய­ளவில் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் சிலர் ஜீப் வண்­டி­யொன்றில் பெண்­ம­ணியின் வீட்­டுக்கு சென்­றுள்­ளனர். அவர்­களில் ஒரு பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் தர்­ம­சக்­கரம் பொறிக்­கப்­பட்ட ஆடை அணிந்து பாதையில் பய­ணித்­தமை தொடர்­பாக அப்­பெண்­ணிடம் விசா­ரணை மேற்­கொண்­டுள்ளார்.  அந்­த­ ஆடை தான் பணிப்­பெண்­ணாக வேலை செய்த நாட்டில் எஜ­மானர் மூலம் தனக்குக் கிடைத்­த­தாக அப்பெண் பதி­ல­ளித்­துள்ளார். அச்­ச­ம­யத்தில் அங்கு சென்­றி­ருந்த ஹச­லக பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி அவரைக் கைது செய்­வ­தற்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.

பின்பு அப்பெண் பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்­துச்­செல்­லப்­பட்டார். அவர் தண்­டனைச் சட்­டக்­கோவை 291 பி பிரிவின் கீழ் மஹி­யங்­கனை நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தியின் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போது ஜூன் மாதம் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டு பதுளை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பின்பு 3 ஆம் திகதி நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்தப்பட்டு பிணையில் விடு­தலை செய்­யப்­பட்டார். முறைப்­பாட்­டா­ள­ரான பெண் அணிந்­தி­ருந்த ஆடையில் பொறிக்­கப்­பட்­டி­ருந்­தது தர்­ம­சக்­கரம் அல்ல கப்­பலின் சுக்கான் படம் என நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. அதன் அடிப்­ப­டையில் அப்பெண் கைது செய்­யப்­பட்­டமை சட்­டத்­துக்கு முர­ணா­ன­தாகும். இதனால் குறிப்­பிட்ட மனு­வினை விசாரணைக்கு எடுத்­துக்­கொள்­வ­தற்கு அனு­மதி வழங்­கும்­ப­டியும் அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கும்­ப­டியும் அதற்கு நஷ்­ட­ஈடு பெற்­றுத்­த­ரும்­ப­டியும் அத்தோடு இதில் தொடர்புபட்ட அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொண்டு தண்டனை பெற்றுக்கொடுக்கும்படியும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.