இராஜினாமாவைத் தவிர வேறு வழி இருக்கவில்லை

மஹாநாயாக்க தேரர்களை நேரில் சந்தித்து முஸ்லிம் எம்.பி.க்கள் விளக்கமளிப்பு

0 643

அமைச்சுப் பத­வி­க­ளி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­வதால் அர­சியல் ரீதி­யாக ஏற்­ப­டப்­போகும் பாதிப்பை பற்றி அர­சாங்­கத்தின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் உங்­க­ளைப்­போ­லவே எம்மை வலி­யு­றுத்­தி­னாலும் இரா­ஜி­னாமா செய்­வதை தவிர வேறு வழி எமக்கு இருக்­க­வில்லை என மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய பீடங்­களின் மகா­நா­யக்க தேரர்­களை சந்­தித்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் விளக்­க­ம­ளித்­துள்­ளனர்.

அத்­துடன், மோச­மா­கிக்­கொண்­டி­ருந்த சூழ்­நி­லையில் அதனை பார்த்­துக்­கொண்­டு வெறு­மனே இருக்க முடி­ய­வில்லை. எனவே, எல்­லோரும் ஆலோ­சித்து கூட்­டாக இரா­ஜி­னாமா செய்ய முடி­வெ­டுத்­த­துடன், முஸ்­லிம்­களின் தரப்பில் யாருக்­கேனும் குற்­றச்­சாட்­டுகள் இருப்பின் அவற்றை குறித்த கால எல்­லையில் விசா­ரித்து முடிக்க வேண்டும் என்றும் கேட்­டுக்­கொண்டோம் என்றும் சுட்­டிக்­காட்­டினர்.

முஸ்லிம் அமைச்­சர்கள் தங்­க­ளது அமைச்சு பத­வி­களை ராஜி­னாமா செய்­ததன் பின்னர், அஸ்­கி­ரிய மல்­வத்த பீட மகா­நா­யக்க தேரர்­களின் அழைப்பின் பேரில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அவர்களை சந்­தித்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குழு­வினர் தமது இரா­ஜி­னாமா தொடர்பில் விளக்கம் அளிக்­கும்­போதே முன்னாள் அமைச்சர் ஹக்கீம் இதனை தெவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,

அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் மற்றும் பிர­தி­ய­மைச்­சர்கள் உட்­பட நாம் 9 பேர் எமது பத­வி­க­ளி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­தது பற்றி பர­வ­லாக கருத்­துக்கள் சொல்­லப்­பட்­டாலும், மகா­நா­யக்க தேரர்­களும், சங்­கைக்­கு­ரிய சங்க சபையும் எமக்கு வழங்­கிய ஆலோ­ச­னை­களை நாம் ஏற்­றுக்­கொள்­கிறோம். அது­பற்றி எமது கௌர­வத்தை அவர்­க­ளுக்குத் தெரி­வித்துக் கொள்­கிறோம்.

சமூ­கங்­க­ளுக்­கி­டை­யிலே சந்­தே­கங்­களும், குரோ­தங்­களும் ஏற்­படும் சூழ்­நி­லையை தவிர்க்­கவும், எமது நாட்­டிலே சமா­தான சூழலை ஏற்­ப­டுத்தும் நோக்­கி­லேயே நாம் இந்த முடிவை எடுக்க வேண்டி ஏற்­பட்­டது. கடந்த ஒரு திங்­கட்­கி­ழமை தலதா மாளி­கைக்கு முன்னால் மேற்­கொள்­ளப்­பட்ட உண்­ணா­வி­ர­தத்தை தொடர்ந்து சில சமூ­க­வி­ரோத சக்­தி­களால் நாட்டில் பல பாகங்­க­ளிலும் மேற்­கொள்­ள­வி­ருந்த நாச­கார நட­வ­டிக்­கை­களை தவிர்க்­கவும், ஒரு குறிப்­பிட்ட சமூ­கத்தை இலக்­கு­வைத்து மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருந்த குழப்­பங்­களை தவிர்க்­கவும் நாம் தொடர்ந்தும் அர­சாங்­கத்தை கேட்­டுக்­கொண்டே இருந்தோம். அந்த வேண்­டு­கோளை உறு­திப்­ப­டுத்தும் நோக்­கு­ட­னேயே இவ்­வா­றான முடி­வுக்கு வர­வேண்­டி­யி­ருந்­தது.

மக்­களை கல­கங்­க­ளுக்கு தூண்டும் விஷ­ம­மான பேச்­சுக்­களும், குரோ­தங்­களும் எம்மை சுற்றி மேற்­கொள்­ளப்­பட்ட நிலையில் அர­சாங்கம் என்ற வகையில் அதன் பங்­கு­தா­ரர்­க­ளான நாங்கள் மிகவும் ஆழ­மாகப் பாதிக்­கப்­பட்டோம். அதே தினம் காலையில் எங்­க­ளது சிரேஷ்ட அர­சி­யல்­வா­தி­யான பௌசியின் இல்­லத்தில் நாம் இணைந்து ஆலோ­சனை செய்து முடி­வுக்கு வந்தோம். அந்த முடிவு எட்­டப்­ப­டும்­வரை நாம் கன­விலும் நினைக்­க­வில்லை இவ்­வா­றான ஒரு தீர்­மா­னத்­திற்கு நாங்கள் வர­வேண்டி ஏற்­படும் என்று.
உண்­மை­யி­லேயே இவ்­வா­றான ஒரு நோக்­கத்­தோடு நாம் கூட­வு­மில்லை.

இந்தக் குழப்ப நிலையை தணித்து ஏதா­வது ஒரு வகையில் குறித்த முக்­கி­யஸ்­தர்­க­ளோடு கதைத்து இந்த குழப்­பங்­களை முடி­வுக்கு கொண்­டு­வ­ரவே நாம் கூடினோம். ஆனால் 12 மணி என்ற காலக்­கெடு கொடுக்­கப்­பட்­டதும், அது யாரால் சொல்­லப்­பட்­டது என்றும் தங்­க­ளுக்குத் தெரியும். குழப்­பங்கள் ஏற்­பட்டால் எமது சமூ­கத்­திற்கு பதில் சொல்ல வேண்­டிய தலை­வர்கள் என்ற வகையில் அவர்கள் ஆணித்­த­ர­மாக கேட்­டுக்­கொண்ட இரா­ஜி­னா­மாவை செய்யும் நிர்ப்­பந்த நிலைக்கு நாம் தள்­ளப்­பட்டோம். இரண்டு ஆளு­நர்­களும் தமது இரா­ஜி­னா­மாவை சமர்ப்­பிக்க ஜனா­தி­ப­தியை நாடிச்­சென்ற போது நாம் பிர­த­மரை சந்­தித்தோம். இரா­ஜி­னாமா வரை செல்­ல­வேண்­டி­ய­தில்லை என அவ­ரது தரப்­பி­லி­ருந்து சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் வலி­யு­றுத்தி சொன்­னாலும் நிலைமை மோச­மா­கிக்­கொண்­டி­ருந்த சூழ்­நி­லையில் அதனை பார்த்­துக்­கொண்­டி­ருக்க எம்மால் முடி­யாது என்­ப­தனால் ஆலோ­சித்து அனை­வரும் இரா­ஜி­னாமா செய்­யவும், முஸ்­லிம்­களின் தரப்பில் யாருக்­கேனும் குற்­றச்­சாட்­டுகள் இருப்பின் அவற்றை குறித்த கால எல்­லையில் விசா­ரித்து முடிக்க வேண்டும் என்றும் கேட்­டுக்­கொண்டோம்.

இந்த இரா­ஜி­னாமா கார­ணத்தால் அர­சியல் ரீதி­யாக ஏற்­ப­டப்­போகும் பாதிப்பை பற்றி அங்கே இருந்த சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் உங்­க­ளைப்­போ­லவே எம்மை வலி­யு­றுத்­தி­னாலும் இரா­ஜி­னாமா செய்­வதை தவிர வேறு வழி எமக்கு இருக்­க­வில்லை.

ஒவ்­வொரு இடங்­க­ளிலும் நடை­பெற்ற விட­யங்கள் தொடர்­பான த­கவல்கள் எங்­களை கலங்கச் செய்­த­மை­யி­னா­லேயே நாங்கள் அத்­த­கைய முடிவை எட்ட நேரிட்­டது. ஏதோ ஒரு வகையில் இது தொடர்பில் பொறுப்புக் கூறு­வ­தற்கு நாங்­களும் கட­மைப்­பட்­டுள்ளோம் என்ற வகையில் நாட்டின் பாது­காப்­புக்கும் அதா­வது இந்த நாட்டில் வாழு­கின்ற ஒவ்­வொரு தனி மனி­தனின் பாது­காப்­பிற்கும் அனை­வரும் இணைந்து உத்­த­ர­வா­தத்தை வழங்­கு­கின்ற வகையில் அதனை அடை­யா­ளப்­ப­டுத்­து­வதும் எமது நோக்­காக அமைந்­தது. ஏனெனில், இதனை தொடர்ச்­சி­யாக கொண்டு செல்­வது பல்­வேறு விப­ரீ­தங்­களை ஏற்­ப­டுத்தும் சாத்­தி­யக்­கூ­றுகள் தென்­பட்­டன. கடந்த திகன பிரச்­சி­னையின் போது மகா­நா­யக்க தேரர்கள் முன்­வந்து இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த மேற்­கொண்ட முயற்­சி­யா­னது மிக நீண்ட தூரத்­திற்கு வந்­தி­ருக்கும் இந்த நேரத்தில், மீண்டும் மிகப்­பெ­ரிய அழிவு ஏற்­ப­டு­மாயின், அந்த நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் கேள்­விக்­கு­றி­யாக ஆகி­விடும்.

குரு­நாகல், குளி­யாப்­பிட்­டிய பிர­தே­சத்தில் இடம்­பெற்ற வன்­முறை செயற்­பா­டு­க­ளினால் ஏற்­பட்ட அழி­வு­களை அவ­தா­னித்தால் அது வெறு­மனே ஒரு இனத்­துக்கு மாத்­தி­ர­மான பாதிப்­பாகக் கருத முடி­யா­துள்­ளது.

இதனால், நாட்டில் சுற்­று­லாத்­து­றையில் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது. பொரு­ளா­தாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறான பாதிப்புக்கள் ஒரு இனத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப் பட்டவையல்ல. எனவே தான் நாங்கள் இந்த நாட்டின் இறைமையையும், பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு நிரந்தர சமாதானத்தை பேணும் முகமாக அரசில் நாங்கள் வகித்த அமைச்சுப் பதவிகளை சிறிது காலத்திற்கு விட்டுக்கொடுத்து பாரிய அனர்த்தம் நிகழ்வதை தடுப்பதோடு நிரந்தரமான அமைதிக்காக பிரார்த்­தனை புரி­கின்றோம். சுருக்­க­மாக கூறின், இது தான் எங்­க­ளது நோக்­க­மாக இருந்­தது. இந்த அடிப்­ப­டையில் உங்களது ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு இந்த இடத்திற்கு வந்து எங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளோம் என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.