முஸ்லிம் பாடசாலைகள் நேற்று ஆரம்பம் மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தந்தனர்

0 668

இரண்டாம் தவ­ணைக்­காக முஸ்லிம் பாட­சா­லைகள் நேற்று திங்­கட்­கி­ழமை காலை ஆரம்­ப­மா­கின.

கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம் பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்னர் ஏற்­பட்ட அசா­த­ரண சூழ்நிலை­யி­னாலும் பின்னர் புனித ரமழான் நோன்பு விடு­மு­றைக்­கா­கவும் மூடப்­பட்­டி­ருந்த முஸ்லிம் பாட­சா­லைகள் சுமார் இரண்டு மாதங்­களின் பின்னர் நேற்று மீண்டும் ஆரம்­ப­மா­கின.

மட்­டக்­க­ளப்பு மத்தி கல்வி வல­யத்­தி­லுள்ள காத்­தான்­குடி கல்விக் கோட்­டத்தில் நேற்று 70 வீத­மான மாண­வர்கள் சமு­க­ம­ளித்­த­தாக பாட­சாலை அதி­பர்கள் ஆசி­ரி­யர்கள் தெரி­விக்­கின்­றனர்.

இதே.வேளை ஓட்­ட­மா­வடி கல்விக் கோட்­டத்­தி­லுள்ள பாட­சா­லை­களில் மாண­வர்கள் வரவு அதி­க­ரித்துக் காணப்­பட்­ட­தாக ஓட்­ட­மா­வடி கோட்டக் கல்விப் பணிப்­பாளர் எம்.எஸ்.கே.ரகுமான் தெரி­வித்தார்.

நேற்று பாட­சாலை ஆரம்­பிப்­ப­தற்­காக நேற்று முன்­தினம் பாட­சா­லை­களை பாது­காப்புப் படை­யினர் சோத­னை­யிட்­ட­தோடு பாட­சா­லை­களின் சூழலை நிர்­வா­கத்­தினர் சுத்­தப்­ப­டுத்­தி­ய­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

இதே­வேளை, திரு­கோ­ண­மலை மாவட்­டத்­திலும் நேற்று முஸ்லிம் பாட­சா­லைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட போது, 90 வீத­மான மாண­வர்கள் பாட­சா­லை­க­ளுக்கு சமு­க­ம­ளித்­த­தாக பாட­சாலை அதி­பர்கள் தெரி­வித்­தனர்.

அதி­பர்கள் மேலும் கருத்துத் தெரி­விக்கும் போது, கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்­களும் பாட­சாலை ஆசி­ரியர் குழாம், பாட­சாலை அபி­வி­ருத்திச் சங்க உறுப்­பி­னர்கள், பெற்றோர், பழைய மாண­வர்கள் மற்றும் பெரிய வகுப்பு மாண­வர்­களின் ஒத்­து­ழைப்­புடன் தொற்று நீக்கி திர­வங்கள் கொண்டு வகுப்­ப­றைகள் சுத்தம் செய்­யப்­பட்­டன. இதன் பின்­னர்தான் நேற்று பாட­சா­லை­களை உரிய பாது­காப்பு ஒழுங்­கு­க­ளுடன் ஆரம்­பித்து கல்வி நட­வ­டிக்­கை­களை தொடர்ந்து சீராக நடத்­திச்­செல்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­ப்­பட்­டது.

இந்த வருடத்துக்கான பாடத்திட்டங்களை எஞ்சியுள்ள காலப்பகுதிக்குள் முடிப்பதற்கு விசேட செயற்றிட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டிருப்பதாகவும் அதிபர்கள் தெரிவித்தனர்.
-vidivelli

Leave A Reply

Your email address will not be published.