அரபு மொழி பெயர் பலகை உடனடியாக அகற்ற வேண்டும்

சுற்று நிருபம் வெளியானது

0 789

நாட்டின் சில பகு­தி­களில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அரபு மொழி­யி­லான பெயர்ப் பல­கைகள் மற்றும் பதா­தை­களை உட­ன­டி­யாக அகற்­று­வ­தற்கு சுற்­று­நி­ருபம் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தாக தேசிய ஒரு­மைப்­பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்­பாடு மற்றும் இந்து சமய அலு­வல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார்.

பொதுக்­கொள்­கையின் அடிப்­ப­டையில் நாட்டில் சிங்­களம், தமிழ், ஆங்­கிலம் ஆகிய மொழி­க­ளுக்கு மாத்­தி­ரமே சந்­தர்ப்பம் வழங்­கப்­படும். இம்­மொ­ழிகள் தவிர்ந்த ஏனைய மொழி­களில் பெயர்ப் பல­கைகள் அல்­லது பதா­தை­களைக் காட்­சிப்­ப­டுத்த வேண்­டு­மாயின் அதற்கு விசேட அனு­ம­தி­யினைப் பெற்­றுக்­கொள்­ள­வேண்டும் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார்.

அரபு மொழி­யி­லான பெயர்ப் பல­கை­களும், பதா­தை­களும் அந்­தந்த பிர­தே­சத்தைச் சேர்ந்த பிர­தேச சபைகள், நகர சபைகள் மற்றும் பிர­தேச செயலாளர் காரியாலய அதிகாரிகளினால் அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.