குற்றம் நிரூபிக்கப்படா விட்டால் குற்றம் சுமத்தியவர்களுக்கு தண்டனை வேண்டும்

0 1,252

இலங்­கையின் அர­சியல் வர­லாறு மாற்றம் கண்­டு­விட்­டது. முஸ்லிம் அமைச்­சர்­களின் பங்­க­ளிப்­பில்­லாத ஓர் அர­சாங்கம் இன்று பதவி வகிக்­கி­றது. பாரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பெரும்­பான்மை மக்கள் பிர­தி­நி­தி­களில் சிலர் இன­வாதக் கொள்­கை­யி­லேயே ஊறிப்­போ­யி­ருக்­கி­றார்கள். அதன் விளை­வு­க­ளையே முஸ்லிம் சமூகம் இன்று எதிர்­கொண்­டுள்­ளது.

நான்கு அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்கள், நான்கு இரா­ஜாங்க அமைச்­சர்கள், ஒரு பிர­தி­ய­மைச்சர் என 9 முஸ்லிம் அமைச்­சர்கள் தங்­க­ளது பத­வி­களை இரா­ஜி­னாமா செய்து கொண்­டார்கள்.

அவர்கள் பல்­வேறு அர­சியல் கொள்­கை­களைக் கொண்­ட­வர்கள். சமூ­கத்தின் நல­னுக்­காக அவர்கள் கைகோர்த்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

அர­சியல் களத்தில் முஸ்லிம் அமைச்­சர்கள் தங்கள் கருத்து முரண்­பா­டு­களைக் களைந்து ஒன்­று­ப­டு­வார்கள் என்று எவ­ருமே எதிர்­பார்க்­க­வில்லை. பாரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் இன­வாத மக்கள் பிர­தி­நி­திகள் மாத்­தி­ர­மல்ல ஜனா­தி­பதி கூட எதிர்­பார்க்­காத நிகழ்வு அரங்­கே­றி­யி­ருக்­கி­றது.

உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து மூன்று முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எதி­ராக இன­வா­திகள் விரல் நீட்­டி­னார்கள். அவர்கள் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­னார்கள். உதவி செய்­தார்கள் என்று குற்றம் சாட்­டப்­பட்­டது.

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன், முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்­புல்லாஹ் மீதான எதிர்­வ­லைகள் நாளுக்கு நாள் வலுப்­பெற்­றன. இவர்கள் தீவி­ர­வா­தி­களின் ஆதா­ர­வா­ளர்கள். பதவி விலக்­கப்­பட வேண்டும் அல்­லது அவர்­க­ளா­கவே பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­து­கொள்ள வேண்டும் என்ற கோரிக்­கைகள் நாடு தழு­விய ரீதியில் முன்­வைக்­கப்­பட்­டன. ஆர்ப்­பாட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

கடந்த காலங்­களில் அர­சி­யலில் மௌனித்­தி­ருந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரத்ன தேரர் இவ்­வா­றான சூழ்­நி­லை­யி­லேயே மூவரும் பதவி விலக்­கப்­பட வேண்­டு­மெனக் கோரி சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை கடந்த 31 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை முன்­னெ­டுத்தார். இந்தப் போராட்­டத்தை அர­சியல் பின்­பு­ல­மான இன­வாதப் போராட்­ட­மா­கவே முஸ்­லிம்கள் கரு­தி­னார்கள். இதனை தங்­களின் உயிர் மற்றும் உடை­மை­க­ளுக்கு அச்­சு­றுத்­த­லா­கவே அவர்கள் எண்­ணி­னார்கள்.

இதை உறுதி செய்யும் வகை­யி­லான சம்­பவம் கடந்த 2 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை நடந்­தது. அன்று அத்­து­ர­லிய ரத்ன தேரரைப் பார்ப்­ப­தற்­காக கண்டி தலதா மாளிகை வளா­கத்­துக்குச் சென்ற ஞான­சார தேரர் ஒரு அச்­சு­றுத்­தலை விடுத்தார். திங்­கட்­கி­ழமை அதா­வது 3 ஆம் திகதி பகல் 12 மணிக்கு முன்பு குறிப்­பிட்ட 3 அர­சி­யல்­வா­தி­களும் பதவி விலக்­கப்­ப­டா­விட்டால் நாடு முழு­வதும் திரு­விழா காண வேண்­டி­யேற்­படும் என்று அச்­சு­றுத்தல் விடுத்தார்.

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஞான­சார தேரர் பேரு­வ­ளையில் இவ்­வா­றான ஒரு கருத்­தையே வெளி­யிட்டார். அவர் ‘அப­ச­ரனய்’ அதா­வது அழிவு அல்­லது சாபம் ஏற்­படும் என்றார். இந்த அவ­ரது உரையே அளுத்­கம, பேரு­வளைப் பகு­தி­களில் இன வன்­மு­றைக்கு வித்­திட்­டது. பாரிய அழி­வு­களும் உயிர்ச்­சே­தங்­களும் ஏற்­பட்­டன. அவ்­வா­றான வன்­மு­றை­களே மீண்டும் அரங்­கேற்­றப்­ப­டப்­போ­கின்­றன என முஸ்­லிம்கள் பீதிக்­குள்­ளா­னார்கள்.

கடந்த 2 ஆம் திகதி பல பிர­தே­சங்­களைச் சேர்ந்த முஸ்­லிம்கள் இரவு தூக்­க­மின்றி விழித்­தி­ருந்­தார்கள். சிலர் வீடு­க­ளி­லி­ருந்து பாது­காப்­பான இடங்­க­ளுக்குச் சென்­றி­ருந்­தனர்.

3 அர­சி­யல்­வா­தி­களின் இரா­ஜி­னா­மா­வை­ய­டுத்து முஸ்லிம் அமைச்­சர்­களும் முஸ்­லிம்­களின் பாது­காப்­பினை வலி­யு­றுத்­தியும் அநா­வ­சிய கெடு­பி­டி­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­வித்தும் தமது பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­தனர். மூன்று அர­சி­யல்­வா­தி­களும் பயங்­க­ர­வ­தத்­திற்கு துணை போக­வில்லை என்றும் அவர்கள் கரு­தி­னார்கள். தாம் தொடர்ந்தும் பத­வி­யி­லி­ருந்தால் அவர்கள் விசா­ர­ணை­களின் பின்பு குற்­ற­மற்­ற­வர்கள் எனக் காணு­மி­டத்து தாம் அர­சியல் செல்­வாக்கு செலுத்­தி­ய­தாக குற்றம் சுமத்­தப்­படும் என்றும் அவர்கள் கரு­தி­னார்கள்.

ரிசாத் பதி­யுதீன், ஹிஸ்­புல்லாஹ், அசாத் சாலி மீது குற்றம் சுமத்­தி­ய­வர்கள் தற்­போது அவற்றை நிரூ­பிக்க வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். விசா­ர­ணைக்­கென பொலிஸ் விசேட குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. விசா­ர­ணைகள் ஒரு மாத காலத்துக்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

முஸ்லிம் அமைச்சர்கள் தங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்து கொண்டாலும் தொடர்ந்தும் அரசுக்கு ஆதரவளிப்பதாகவே தெரிவித்துள்ளார்கள். விசாரணைகளின் பின்பு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டால் அனைவருக்கும் பொறுப்பான அமைச்சுப் பதவிகளை வழங்கி கௌரவிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அத்தோடு குற்றச்சாட்டுகள் போலியானவை என நிரூபிக்கப்பட்டால் குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.