ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் பின்னணியில் குருநாகல் பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளார்?

0 705

சொத்துக் குவிப்பு  விவ­கா­ரத்­துக்­காக கைது செய்­யப்­பட்­டுள்ள குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் மகப்­பேற்று வைத்­தியர் மொஹம்மட் ஷாபி­யினால்  சட்­ட­வி­ரோ­த­மாக கருத்­தடை சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக 60  முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் பணிப்­பா­ள­ரிடம் இந்த முறைப்­பா­டுகள்  பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.  இதற்கு மேல­தி­க­மாக குரு­நாகல் பொலிஸ் நிலை­யத்­திலும் 10 முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன.

சந்­தே­க­ந­ப­ரான வைத்­தியர் சட்­ட­வி­ரோ­த­மாகக் கருத்­தடை சத்­தி­ர­சி­கிச்­சைகள் மேற்­கொண்­ட­தாகக்  கிடைத்த முறைப்­பா­டு­களில், 4 முறைப்­பா­டுகள் அவ­ருடன் சேர்ந்து பணி­யாற்­றி­ய­தாகக் கூறப்­படும் வைத்­தி­யர்­களால் முன்­வைக்­கப்­பட்­ட­வை­யென  அறி­ய­மு­டி­கின்­றது. ஏனைய முறைப்­பா­டு­களை 28 -– 30 வய­துக்கு இடைப்­பட்ட பெண்­களே பதிவு செய்­துள்­ளனர்.

இத­னி­டையே சொத்துக் குவிப்பு விவ­கா­ரத்தில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட நிலையில், சட்­ட­வி­ரோத கருத்­தடை  விவ­காரம் தொடர்பில் குறித்த வைத்­தி­ய­ருக்கு எதி­ராக குரு­நாகல் மாவட்­டத்­துக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ்மா அதி­பரின் பின்­ன­ணியில் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ள­தாகத் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.  குறித்த பிரதிப் பொலிஸ்மா அதி­பரின்  மனைவி குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையின் வைத்­தி­ய­ராகக் கட­மை­யாற்றும் நிலையில்,  அந்தப் பின்­ன­ணியை வைத்து வைத்­தியர் ஷாபிக்கு எதி­ராக  வேறு நோக்­கங்­க­ளுக்­காகக் கருத்­தடை குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் இந்த விடயம் தொடர்­பிலும் சி.ஐ.டி. விசா­ர­ணை­களில் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உய­ர­தி­காரி ஒருவர் கூறினார்.

குறித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் விவ­கா­ரத்­திலும் சிக்கல் நிலை ஒன்று உள்­ளது. அது தொடர்­பிலும் கண்­டிப்­பாக நாம் ஆராய்­கின்றோம்” என  அந்த உயர் பொலிஸ் அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

வைத்­தியர்  ஷாபிக்கு 40 கோடி ரூபா­விற்கும் அதிக சொத்­துக்கள் உள்­ள­தாகத் தக­வல்கள் கிடைத்­ததால் குரு­நாகல் பொலிசார் ஊடாக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளன. குரு­நாகல் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்­சிரி ஜய­லத்தின்  உத்­த­ர­வி­லேயே குரு­நாகல் பொலி­சாரால் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.  இந்­நி­லை­யி­லேயே கைது செய்­யப்­பட்ட வைத்­தியர் ஷாபி,  மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக பதில் பொலிஸ்மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்­னவின் உத்­த­ர­வுக்­க­மைய சி.ஐ.டி.யால் பொறுப்­பேற்­கப்­பட்­டுள்ளார்.

40 கோடி ரூபா­விற்கும் அதிக பெறு­ம­தி­யு­டைய சொத்­துக்கள் அவ­ரிடம் காணப்­ப­டு­வ­தாக பொலி­ஸா­ருக்குத் தகவல் கிடைத்­த­துடன், அவை ஏதேனும் கடும்­போக்­கு­வாத அல்­லது பயங்­க­ர­வாதக் குழு­வி­ட­மி­ருந்து கிடைத்­துள்­ள­தா­வென ஆராயும் நோக்கில் அவர் கைது செய்­யப்­பட்­ட­தாக  ஆரம்­பத்தில் பொலிஸார் தெரி­வித்­தனர். இதே­வேளை, அந்த வைத்­தி­யரின் பெயரில் காணப்­படும் 17 காணி உறுதிப் பத்­தி­ரங்­களை பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ள­தா­கவும் அறிய முடி­கின்­றது. அந்தக் காணிகள் குரு­நா­கலை சூழ­வுள்ள இடங்­களில் அமைந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இதே­வேளை, குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் தாதி அதி­கா­ரி­யொ­ருவர், வைத்­தி­ய­சாலை பணிப்­பா­ள­ருக்கு எழுத்­து­மூலம் முறைப்­பாடு செய்து, வைத்­தியர்  மகப்­பேற்று சத்­தி­ர­சி­கிச்­சையின் பின்னர் தமது கர்ப்­பப்பை அகற்­றப்­பட்­டுள்­ள­தாக குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார். தமது கர்ப்­பப்பை அகற்­றப்­பட்­டதை பின்­னரே அறிந்­து­கொண்­ட­தாக அந்தப் பெண், வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பா­ள­ருக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, சந்­தே­க­ந­ப­ரான வைத்­தியர் தாயொ­ரு­வரின் பெயரை மாற்றி, சிசு­வொன்றை வேறு தரப்­பி­ன­ருக்கு வழங்­கு­வ­தற்கு முயற்­சித்­த­தாக தெரி­ய­வந்­துள்­ளது.குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் நிர்­வாக அதி­கா­ரி­யொ­ருவர் இது தொடர்பில் ஆரம்­ப­கட்ட விசாரணை நடத்தியுள்ளதுடன், போலி ஆவணத்தைத் தயாரித்து சிசுவை வேறு தரப்பிற்கு சட்டரீதியற்ற முறையில் வழங்குவதற்கு சந்தேகத்திற்குரிய வைத்தியர் செயற்பட்டுள்ளதாக  கூறப்படுகின்றது.

இந்நிலையில் இந்த விவகாரங்கள் தொடர்பிலான  விசாரணைகளுக்கு இலங்கை மருத்துவ சபையின் உதவியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சுகாதார அமைச்சும் இதுகுறித்து விசாரணைகளுக்கென சிறப்பு விசாரணை குழுவொன்றினை அமைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.