கண்டி-தெல்தோட்டையில் தாக்குதலுக்கு திட்டமிட்ட அமித்

கைதினால் தடுக்­கப்­பட்­டது வன்­முறை; பொலிஸ் உயர் அதி­காரி தகவல்

0 743

வடமேல் மாகாண முஸ்லிம் கிரா­மங்­களை இலக்­கு­வைத்து அரங்­கேற்­றப்பட்ட வன்­மு­றை­களை அடுத்து மஹ­சொஹொன் பல­காய அமைப்பின் தலைவர் அமித் வீர­சிங்­கவை  சிறப்பு பொலிஸ்­குழு கைது செய்­தி­ருந்­தது. அவர் கைது செய்­யப்­ப­டாது இருந்­தி­ருப்பின்  வடமேல் மாகா­ணத்தில் பதி­வான வன்­மு­றை­களை ஒத்த வன்­மு­றைகள் கண்டி பகு­தி­யிலும் இடம்­பெற்­றி­ருக்­கு­மென முன்­னெ­டுக்­க­ப்படும் விசா­ர­ணை­களில் வெளிப்­படும் சாட்­சி­யங்கள் ஊடாகத் தெளி­வா­வ­தாக விசா­ர­ணை­க­ளுக்குப் பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

இவ்­வாறு கண்டி பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்­பு­ணர்­வு­களைத் தூண்டி வன்­மு­றைக்­கான  அடித்­த­ளத்தை அமித் வீர­சிங்க, தெல்­தோட்டை உட்­பட கண்­டியின் பல பகு­தி­க­ளுக்கு சென்று விகா­ரைகள் ஊடாக கூட்­டங்­களைக் கூட்டி முன்­னெ­டுத்­துள்­ளமை தொடர்பில் தக­வல்கள் வெளி­ப்ப­டுத்­தப்பட்­டுள்­ள­தாக அந்த பொலிஸ்  அதி­காரி கூறினார். ஏற்­க­னவே திகன பகு­தியில் இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில்  பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட அமித் வீர­சிங்க, 7 மாதங்­களின் பின்னர் கடும் நிபந்­த­னை­களின் கீழ் பிணையில் விடு­விக்­கப்­பட்டார். அதன் பின்னர் அவ­ரது உயி­ருக்கு முஸ்­லிம்­களால் அச்­சு­றுத்தல் ஏற்­ப­டலாம் என்­பதால் அவ­ரது வீட்­டுக்கு முன்­பாக  பொலிசார் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வா­றான பின்­ன­ணியில் முழு கண்­டி­யிலும் பல இடங்­க­ளுக்கு சென்று, கூட்­டங்­களைக் கூட்டி முஸ்லிம் வெறுப்பு பிர­சா­ரங்­களை அமித் வீர­சிங்க முன்­னெ­டுத்­துள்­ளமை தொடர்பில் சாட்­சி­யங்கள்  பதில் பொலிஸ்மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்­னவின்  ஆலோ­ச­னைக்­க­மைய பொலிஸ் அத்­தி­யட்­சகர் நிசாந்த சொய்­ஸாவின் கீழ் முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்நிலையில் பொலிசார் அமித் வீரசிங்கவைக் கைது செய்ததன் ஊடாக கண்டி பகுதியில்  வன்முறைகள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதாக   குறித்த உயர் பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டினார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.