மியன்மாரில் கைதான இலங்கையருக்கு குண்டுத்தாக்குதலுடன் தொடர்பில்லை

அந்நாட்டு ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

0 674

இலங்­கையில் சுமார் 250 பேரின் உயிரைப் பலி­யெ­டுத்த ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்டு தேடப்­பட்டு வந்த உண்­மை­யான சந்­தேக நபர் தொடர்ந்தும் மியன்­மாரில் இல்லை என மியன்மார் ஜனா­தி­ப­தியின் செய­லகம் அறி­வித்­துள்­ளது.

தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வ­ரென்று நம்­பப்­படும் இலங்­கையர் ஒருவர் கடந்த வியா­ழக்­கி­ழமை  மியன்­மாரில் கைது செய்­யப்­பட்­டதன் பின்பே இந்தத் தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

கடந்த புதன்­கி­ழமை மியன்மார் சுற்­றுலாப் பய­ணிகள் பொலிஸார் அந்­நாட்டின் ஹோட்டல் மற்றும் சுற்­றுலா திணைக்­க­ளத்­திடம் அப்துல் சலாம் மஹ்மூத் இர்சாத் (29) என்­பவர் தொடர்பில் விப­ரங்­களைக் கோரி­யி­ருந்­தனர். அவர் பதிவு செய்­யப்­பட்ட ஹோட்டல் அல்­லது உல்­லாசப் பய­ணிகள் விடு­தி­களில் தங்­கி­யுள்­ளாரா? என்­பது தொடர்பில் அறி­விக்­கு­மாறும் வேண்­டி­யி­ருந்­தனர்.

இந்­நி­லையில் கடந்த வியா­ழக்­கி­ழமை அப்துல் சலாம் இர்ஷாத் மஹ்மூத், யன்­கூ­னி­லுள்ள குடி­வ­ரவு, குடி­ய­கல்வு காரி­யா­ல­யத்தில் ஆஜ­ரா­ன­போது பொலி­ஸா­ரினால் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்டார்.

கொழும்பு, நீர்­கொ­ழும்பு மற்றும் மட்­டக்­க­ளப்பில் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற 250 பேரை பலி­கொண்ட குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்­டவர் என மஹ்­மூதை சந்­தே­கிப்­ப­தாக இலங்கை அர­சாங்கம் மியன்­மா­ருக்கு அறி­வித்­தி­ருந்­த­துடன், அவர் பற்­றிய விப­ரங்­களைக் கோரி­யி­ருந்­தது என மியன்மார் ஜனா­தி­பதி செய­லக பேச்­சாளர் யுசோ ஹட்டே தெரி­வித்தார்.

மஹ்­மூதை விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து உண்­மை­யான சந்­தேக நபர் நாட்டை விட்டும் வெளி­யே­றி­யுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது எனவும் அவர் கூறினார்.

யுசோ ஹட்டே (Uzaw Htay) மேலும் தெரி­விக்­கையில், அப்துல் சலாம் இர்ஷாத் மஹ்­மூதும் உண்­மை­யான சந்­தேக நபரும் கடந்த வருடம் ஜன­வரி மாதம் ஒரே விமா­னத்தில் மியன்­மா­ருக்கு வருகை தந்­துள்­ளனர். மஹ்மூத் அன்­றி­லி­ருந்து இங்கு தங்­கி­யி­ருந்­துள்ளார்.

அப்துல் சலாம் இர்ஷாத் மஹ்மூத் மாணிக்­கக்கல் வர்த்­தகர். அவர் யன்கூன் மற்றும் மன்­ட­லாய்க்கு பய­ணங்­களை மேற்­கொள்­பவர். கடந்த வியா­ழக்­கி­ழமை மியன்மார் சுற்­றுலாப் பய­ணிகள் பொலிஸார் தேடுதல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­த­போது இந்த இலங்­கையர் தானா­கவே யன்கூன் குடி­வ­ரவு, குடி­ய­கல்வு காரி­யா­ல­யத்தில் ஆஜ­ராகி தனக்கு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் எவ்­வித தொடர்பும் இல்லை எனத் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். என்­றாலும் பொலிஸார் அவரைத் தடுத்து வைத்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

தற்போது பொலிஸார் அவரால் வழங்கப்பட்டுள்ள வாக்குமூலத்தினை மீளாய்வு செய்து வருகின்றனர் எனவும் மியன்மார் ஜனாதிபதி செயலக பேச்சாளர் தெரிவித்தார்.

யன்கூனிலுள்ள இலங்கை தூதரகம் இது தொடர்பில் எந்த கருத்தினையும் வெளியிடவில்லை.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.