தர்மச்சக்கர’ ஆடை அணிந்த விவகாரம்: மஹியங்கனையில் கைதான பெண்ணின் விளக்கமறியல் ஜூன் 3 வரை நீடிப்பு

0 527

தர்­மச்­சக்­கரம் பொறிக்­கப்­பட்ட ஆடையை அணிந்­த­தாக குற்­றம்­சாட்­டப்­பட்டு கைது செய்­யப்­பட்ட ஹஸ­லக பிர­தே­சத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணின் விளக்­க­ம­றியல் எதிர்­வரும் ஜூன் 3 ஆம் திகதி வரை மேலும் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

தர்மச் சக்­கரம் பொறிக்­கப்­பட்ட ஆடையை அணிந்து புத்த மதத்­துக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­தி­யதன் ஊடாக இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையில் இன முறு­கலை ஏற்­ப­டுத்த முயற்­சித்­த­தாக குறித்த பெண் மீது ஹஸலக பொலிசார் ஐ.சி.சி.பி.ஆர். சட்­டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்­தி­ருந்­தனர். இந் நிலையில் குறித்த வழக்கு நேற்­றைய தினம் மஹி­யங்­கனை நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போதே இப் பெண்ணை ஜூன் 3 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்டார்.

அத்­துடன் பொலி­சாரின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க குறித்த ஆடை­யை பௌத்த சமய ஆணை­யாளர் திணைக்­க­ளத்­திற்கும் தர நிர்­ணய சபைக்கும் அறிக்­கைக்­காக அனுப்பி வைக்­கவும் நீதி­மன்றம்  அனு­ம­தி­ய­ளித்­தது.

இதே­வேளை குறிப்­பிட்ட வடிவம் பௌத்த மதத்தின் புனித சின்­ன­மா­கிய தர்­ம­சக்­கரம் அல்ல, அது கப்­பலின் சுக்கான்  ஆகும் என இப் பெண் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணி­களால் நீதி­மன்­றத்தின் கவ­னத்­திற்கு கொண்டு வரப்­பட்­ட­துடன் பிணை வழங்­கு­மாறும் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது.

எனினும்  இவ்­வ­ழக்­கா­னது ஐ.சி.சி.பி.ஆர். சட்­டத்தின் கீழ் பொலி­சா­ரினால் தொடுக்­கப்­பட்­டி­ருப்­பதால் பிணை வழங்கும் அதி­காரம் தனக்கு இல்லை எனக் கூறி சட்­டத்­த­ர­ணி­களின் பிணை கோரிக்­கையை நீதிவான் நிராகரித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் சார்பில் சட்டத்தரணிகளான சறூக் மற்றும் நுஸ்ரா சறூக் ஆகியோர் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.