அநாவசிய கைதுகள் குறித்து முறையிட ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க ஏற்பாடு

0 631

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து பாது­காப்புப் படை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட சோதனை நட­வ­டிக்கைகளின்­போது அநா­வ­சி­ய­மாக இடம்­பெற்­றுள்ள சந்­தே­கத்தின் பேரி­லான கைதுகள் தொடர்பில் முஸ்லிம் சிவில் சமூக பிர­தி­நி­திகள் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரை ஒன்­றாகச் சந்­திப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்­ளனர். அவ்­வா­றான கைதுகள் தொடர்­பான பட்­டி­ய­லொன்று ஜனா­தி­ப­தி­யி­டமும் பிர­த­ம­ரி­டமும் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளன. சிறிய கார­ணங்­க­ளுக்­காக இடம்­பெற்­றுள்ள அநா­வ­சிய கைதுகள் தொடர்­பான முறைப்­பா­டுகள், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்­ஸி­லுக்கும் கிடைத்­துள்­ளன. கிடைக்கப் பெற்­றுள்ள முறைப்­பா­டு­களின் அடிப்­ப­டையில் சந்­தே­கத்தின் பேரி­லான அநா­வ­சிய கைது­களின் பெயர்ப்­பட்­டியல் தயா­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இது தொடர்­பாக கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் தலை­மையில் அவ­ரது காரி­யா­ல­யத்தில் இடம்­பெற்­றது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி மற்றும் பாசில் பாரூக், மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம், மௌலவி ரிழா, முர்சித் முழப்பர் ஆகி­யோரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் தலை­மை­யி­லான பிர­தி­நி­தி­களும் கலந்­து­கொண்­டனர்.

சிறு சிறு சம்­ப­வங்­க­ளுக்­காக அதி­க­மான முஸ்லிம் இளை­ஞர்கள் பாது­காப்புப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டு விசா­ரணை என்ற பெய­ரிலே தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்கள் பயங்­க­ர­வாத சம்­ப­வத்­துடன் எந்­த­வ­கை­யிலும் தொடர்­பு­ப­டா­த­வர்கள். இவர்­களை விடு­தலை செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­வது முஸ்லிம் சிவில் சமூகத் தலை­வர்­க­ளி­னதும் அர­சியல் தலை­வர்­க­ளி­னதும் கட­மை­யாகும் என கலந்­து­ரை­யா­ட­லின்­போது வலி­யு­றுத்­தப்­பட்­டது.

வடமேல் மாகாணம் உட்­பட பல்­வேறு பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்­களை வழங்­கு­வ­தெ­னவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. முதற்­கட்­ட­மாக வடமேல் மாகா­ணத்தில் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களில் 1500 குடும்­பங்­க­ளுக்கு உல­ரு­ணவு பொதிகள் வழங்­கப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது.

இதே­வேளை முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகளின் கோரிக்கைகளையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் உட்பட பாதுகாப்பு உயரதிகாரிகளை நாளை செவ்வாய்க்கிழமை சந்தித்து அநாவசிய கைதுகள் தொடர்பில் கலந்துரையா டவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.