முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பாக நிரந்தர தீர்வை முஸ்லிம் எம்.பி.க்கள் ஒன்றிணைந்து முன்வைக்க வேண்டும்

முஜிபுர் ரஹ்மான் எம்.பி. சுட்டிக்காட்டு

0 552

முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக இன­வா­தி­களால் தொட­ரப்­படும் இந்த நாச­கார வன்­மு­றை­களை தடுப்­ப­தற்கு மாறி மாறி ஆட்­சிக்கு வந்த  இரண்டு அர­சாங்­கங்­களும்  தவ­றி­யி­ருக்­கின்­றன. அது மட்­டு­மல்­லாமல் இந்த நல்­லாட்சி  அர­சாங்கம் கூட முஸ்­லிம்­களின் பாது­காப்பு தொடர்பில் கரி­சனை காட்­ட­வில்லை என்ற நிலைப்­பாட்டில் முஸ்­லிம்­கள் இருக்­கின்­றனர். முஸ்­லிம்­களின் பாது­காப்­புக்கு எவ்­வித உத்­த­ர­வா­தமும் இல்­லாத ஓர் அச்ச நிலையில்  முஸ்­லிம்கள் வாழ இன்று நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ள­தாக  முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார்.

அண்­மையில் முஸ்­லிம்கள் மீதான திட்­ட­மிட்ட இன­வாத தாக்­கு­தல்கள் தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, கடந்த 21 ஆம் திகதி, முஸ்லிம் என்ற பெயர் தாங்­கிய குழு­வொன்று  வெளி­நாட்டு கூலிப்­ப­டை­யொன்­றான ஐஎஸ் என்ற கொலை­வெறி அமைப்­போடு இணைந்து கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் மற்றும் நட்­சத்­திர ஹோட்­டல்கள் மீது தாக்­கு­தல்­களைத் தொடுத்­தது. இந்த பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து தெற்கின் இன­வாத சக்­திகள் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக தனது வழ­மை­யான  இன­வாத பிர­சா­ரங்­களை மிக வேக­மா­கவும், உற்­சா­கத்­த­டனும்  முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றன.

இதன் விளை­வா­கவே கடந்த 13 ஆம் திகதி  முஸ்­லிம்கள் மீது   திட்­ட­மிட்ட இன­வாத தாக்­கு­த­லொன்று மேற்­கொள்­ளப்­பட்­டது.  கடந்த காலங்­க­ளிலும் முஸ்­லிம்கள் மீது இத்­த­கைய தாக்­கு­தல்கள்  தொடுக்­கப்­பட்­டன. இத்­த­கைய இன­வாதத் தாக்­கு­தல்கள்  இந்­நாட்டை ஆட்சி செய்த மற்றும் ஆட்சி  செய்து கொண்­டி­ருக்கும் இரண்டு அர­சாங்­கங்­களின்  காலங்­க­ளிலும் இடம்­பெற்­றுள்­ளன. இந்த நல்­லாட்­சிலும் இத்­த­கைய இன­வாத தாக்­கு­தல்கள் தொடர்­க­தை­யாக நிகழ்ந்து கொண்­டி­ருப்­பது வேதனை தரும் விட­ய­மாகும்.

அன்று மஹிந்த ராஜ­ப­க் ஷவின்   ஆட்­சிக்­கா­லத்தில் அளுத்­கம, தர்­கா­நகர் போன்ற ஊர்­களில் கல­வ­ரங்கள் இடம்­பெற்­றன.  முஸ்­லிம்­களின் உயிர், உடைமை, சொத்­துக்­க­ளுக்கு பாரிய சேதங்கள் விளை­விக்­கப்­பட்­டன. பல கோடி ரூபா பெறு­ம­தி­யான  சொத்­துக்கள் இன­வா­தி­களால் எரித்து நாச­மாக்­கப்­பட்­டன.

முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்­பற்ற ஒரு சூழ்­நி­லை­யில்தான் இந்த நல்­லாட்சி அர­சாங்கம்  முஸ்­லிம்­களின் அமோக ஆத­ர­வைப்­பெற்று கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்­தது.  இந்த நல்­லாட்­சியின் ஆட்சிக் காலத்தில் கூட தொடர்ந்தும் முஸ்­லிம்கள் இன­வாதத் தாக்­கு­தல்­க­ளுக்கும், இன்­னல்­க­ளுக்கும் முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர்.

மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சியில் நிகழ்ந்­தது போன்றே  இந்த நல்­லாட்­சியின்  காலத்­திலும் கிந்­தோட்டை, திகன, தெல்­தோட்டை போன்ற நக­ரங்­களில் கல­வ­ரங்கள் இடம்­பெற்­றன.  ஊர­டங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு பாது­காப்பு தரப்­பி­னரின் முன்­னி­லையில்  சில இடங்­களில் இன­வா­தி­களால் முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்­டனர், பல கோடி பெறு­ம­தி­யான முஸ்­லிம்­களின்  உடைமைகள் அழிக்­கப்­பட்­டன. பள்­ளி­வா­சல்கள் அடித்து நொறுக்­கப்­பட்டு தீவைத்து  கொளுத்­தப்­பட்­டன.

நீர்­கொ­ழும்பு பல­கத்­துறை, கொட்­டா­ர­முல்ல, மினு­வாங்­கொட, குளி­யாப்­பிட்டி, நிக­வெ­ரட்­டிய, போன்ற பகு­தி­களில் இன­வா­தி­களின் திட்­ட­மி­டப்­பட்ட வன்­முறை அரங்­கே­றி­யுள்­ளது.

கடந்த 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலைத் தாக்­கு­தல்­க­ளோடு இந்த சம்­ப­வத்தை இன­வா­திகள் இன்று முடிச்சு போட முனை­கின்­றனர்.  ஆனால் இந்த தாக்­கு­தலை காரணம் காட்டும் இன­வா­திகள், இதற்கு  முன்­னரும்  பல தட­வைகள் முஸ்­லிம்­களை தாக்கி அவர்­களின் உடைமை­களை அழித்­துள்­ளனர்.  மீண்­டு­மொரு முறை  முஸ்­லிம்­களை அழிப்­ப­தற்கு தருணம் பார்த்­தி­ருந்த குறித்த இன­வாத சக்­தி­க­ளுக்கு இந்த பயங்­க­ர­வாதத் தாக்­குதல் ஒரு சந்­தர்ப்­ப­மாக அமைந்­தது.

இன்று முஸ்­லிம்­களின் பாது­காப்­புக்கு எவ்­வித உத்­த­ர­வா­தமும் இல்­லாத நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது. நல்­லாட்சி  அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்­கையை முஸ்­லிம்கள் படிப்­ப­டி­யாக  இழந்து வரு­கின்­றனர். தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றதன் பின்னர் நஷ்­ட­ஈடு வழங்­கு­வதால் மட்டும் இந்த பிரச்­சி­னைக்கு தீர்வு காண முடி­யாது. இன­வா­தி­களின்  செயற்­பா­டு­களால் முஸ்லிம் சமூகம் நாளுக்கு நாள் எதிர்­கொள்ளும் அச்சம் மற்றும் உள­வியல் ரீதி­யாக எதிர்­கொள்ளும்  அவஸ்த்­தை­க­ளுக்கு தீர்வு காண­மு­டி­யாது.

இந்­நாட்டு சிறு­பான்மை மக்­களின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். தொடர் கதை­யாக நீடித்துக் கொண்­டி­ருக்கும் முஸ்­லிம்கள் மீதான தாக்­கு­தல்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட வேண்டும். முஸ்­லிம்­களின் பாது­காப்பு தொடர்பில் நிரந்­தர தீர்வு காணப்­பட வேண்டும். பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­கின்ற முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் ஏனைய பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்­களும்;  இதற்­கான உறு­தி­யான ஒரு தீர்வை நோக்கி செயற்­பட வேண்டும். சமூக ஊட­கங்­களில்  முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பரப்­பப்­படும் வெறுப்புப் பேச்­சு­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­வ­தற்கு அழுத்­தங்­களை பிர­யோ­கிக்க வேண்டும்.  அர­சியல், கட்சி வேறு­பா­டு­களை மறந்து முஸ்லிம் சமூ­கத்தின் பாது­காப்பு தொடர்­பாக முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்  இணைந்து செய­லாற்­று­வது இன்­றைய காலத்தின் தேவை­யாகும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து இழப்புகளையும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களையும்  பார்வையிட்டு அனுதாபம் தெரிவிப்பதாலோ, அவர்களுக்கு நஷ்ட ஈடு பெற்றுக் கொடுப்பதாலோ  பிரச்சினைகள் முற்றுப் பெறப்போவதில்லலை. எதிர்காலத்தில் இந்நாட்டு முஸ்லிம்கள் அச்சமற்ற சூழலில் வாழ்வதற்கான நிலையை ஏற்படுத்துவதற்குரிய காத்திரமான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓரணி சேர்ந்து முஸ்லிம் சமூகத்தின்  பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.