சர்வதேசத்தின் உதவியுடன் தீவிரவாதம் ஒழிக்கப்படும்

தேசிய படை­வீரர் தின நிகழ்வில் ஜனா­தி­பதி தெரி­விப்பு

0 534

முப்­பது வருட  பயங்­க­ர­வா­தத்தை வெற்றி கொண்ட எமது முப்­ப­டை­யி­னரால் மத­வாத கொள்­கை­யினை  பின்­பு­ல­மாக  கொண்­டுள்ள சர்­வ­தேச தீவி­ர­வா­தத்­தையும் முழு­மை­யாக  துடைத்­தெ­றிய  முடியும் எனத் தெரி­வித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, சர்­வ­தேச  தீவி­ர­வா­தத்தை  முழு­மை­யாக  எமது நாட்டில் இருந்து குறு­கிய  காலத்­திற்குள்  இல்­லா­தொ­ழிக்க வேண்டும் என்றும் இதற்­காக சர்­வ­தே­சத்தின் பூரண  ஒத்­து­ழைப்பும்  தேவைக்­கேற்ப  பெற்றுக் கொள்­ளப்­படும் எனவும் குறிப்­பிட்டார். தேசிய படை­வீரர் தின நிகழ்வு நேற்று பாரா­ளு­மன்ற வளா­கத்தில் இடம்­பெற்ற போது உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

இலங்கை ஆரம்ப  காலத்தில் இருந்து போராட்­டங்­க­ளுக்கு பெயர்­போ­யுள்­ளது. மன்னர் காலத்தில்   அந்­நி­யர்­களின் ஆதிக்கம்  வெற்றி கொள்­ளப்­பட்­டது.  பிற்­போந்த காலப்­ப­கு­தியில்  சிவில் யுத்­தமும் இரா­ணு­வத்­தி­னரால் வெற்றி கொள்­ளப்­பட்டு தேசிய இறைமை  ஒரு­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு  அனைத்து மக்­களும்  சுதந்­தி­ர­மாக வாழ்ந்­தார்கள்.  தற்­போது சர்­வ­தேச தீவி­ர­வா­தி­களின் தாக்­கு­தலும் இடம் பெற்­றுள்­ளது. அடிப்­ப­டை­வா­தி­களை முழு­மை­யாக இல்­லா­தொ­ழிக்கும்  பலம்  முப்­ப­டை­யி­ன­ருக்கும் உள்­ளது. இலங்­கையில்  சர்­வ­தேச தீவி­ர­வாதம்  துடைத்­தெ­றி­யப்­படும் என்­பதை உறு­தி­யாக குறிப்­பிட முடியும்.

மிலேச்­சத்­த­ன­மாக  செயற்­பட்ட விடு­தலைப் புலிகள் முழு­மை­யாக அழிக்­கப்­பட்டு 2009 ஆம் ஆண்டு மே மாதம் நாடு கொடிய பிடியில் இருந்து விடு­விக்­கப்­பட்டு அனைத்து மக்­களும் எதிர்­பார்த்த சுதந்­திரம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. ஒரு­மித்து வாழ வேண்டும் என்­பது அனைத்து மக்­களின் மனங்­க­ளிலும் விதைக்­கப்­பட்­டது. 1980 ஆம் ஆண்டில் இருந்து பயங்­க­ர­வா­தத்தை இல்­லா­தொ­ழிக்க அரச தலை­வர்­களும், அர­சாங்­கமும், புல­னாய்வு பிரி­வி­னரும், இரா­ணு­வத்­தி­னரும் முறை­யான திட்­டங்­களை வகுத்து வந்து ஒரு கட்­டத்­திற்கு கொண்டு வந்­தார்கள். அனை­வ­ரது ஒத்­து­ழைப்­பிற்கு அமையயுத்தம் வெற்றி கொள்­ளப்­பட்­டது.

எமது நாட்டு முப்­ப­டை­யி­னரும், புல­னாய்வுப் பிரி­வி­னரும், பாது­காப்பு தரப்­பி­னரும் யுத்­தத்தை  வெற்றி கொண்ட அனு­பவம் கொண்­ட­வர்கள். சர்­வ­தே­சத்­திற்கும் எடுத்­துக்­காட்­டாக செயற்­பட்­டுள்­ளார்கள். விடு­தலைப் புலி­களை  இல்­லா­தொ­ழிக்க இந்­திய அர­சாங்கம் 01 இலட்சம் இரா­ணு­வத்­தி­னரை  போர் நட­வ­டிக்­கை­க­ளுக்கு அனுப்பி வைத்­தது. ஆனால் இந்­திய இரா­ணு­வத்­தி­னரால் விடு­தலைப் புலி­களை வெற்றி கொள்ள முடி­ய­வில்லை. எமது நாட்டு பாது­காப்பு தரப்­பி­ன­ராலே 30 வருட கால யுத்தம்  இறுதிக் கட்­டத்தில் வெற்றி கொள்­ளப்­பட்­டது.

30 வரு­ட­கால பயங்­க­ர­வா­தத்தை வெற்றி கொண்டு  10 ஆண்­டு­களை கடந்­துள்ள நிலையில் சர்­வ­தேச  தீவி­ர­வாத தாக்­கு­தலும் இன்று ஒரு சவா­லாக  காணப்­ப­டு­கின்­றது. கடந்த மாதம் 21 ஆம் திகதி  மத அடிப்­ப­டை­வா­தி­க­ளினால் நடத்­தப்­பட்ட மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்கள் வன்­மை­யாக  கண்­டிக்­கத்­தக்­கன. தீவி­ர­வாத அமைப்­புடன் தொடர்­பு­டைய அனைத்து தரப்­பி­னரும் தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்­ளார்கள்.  பயங்­க­ர­வாத யுத்­தத்தை   வெற்றி கொண்ட  எமது  நாட்டு முப்­ப­டை­யி­ன­ருக்கும், புல­னாய்வு பிரி­வி­ன­ருக்கும், சர்­வ­தேச தீவி­ர­வா­தி­க­ளிடம் இருந்து  மீண்டும்  தாய் நாட்டை பாது­காக்கும் பொறுப்பு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

மத அடிப்­ப­டை­வா­தத்தை   கொள்­கை­யாகக் கொண்­டுள்ள சர்­வ­தேச தீவி­ர­வாதம் இன்று அனைத்து  நாடு­க­ளுக்கும் ஒரு நெருக்­க­டி­யா­கவே காணப்­ப­டு­கின்­றது.  அடிப்­ப­டை­வா­திகள் எந்த இடத்தில் எவ்­வா­றான  நிலையில் தாக்­கு­தல்­களை மேற்­கொள்­வார்கள் என்­பது சர்­வ­தேச இரா­ணுவ நிபு­ணர்­க­ளாலும் கணிக்க முடி­யாத  நிலை காணப்­ப­டு­கின்­றது. அந்­த­ள­விற்கு  இந்த அடிப்­ப­டை­வா­திகள்   சாதா­ரண  மட்­டத்­திலும் தமது  கொள்­கை­களை   பரப்பி நோக்­கங்­களை  நிறை­வேற்றிக் கொள்ள எத்­த­னிக்­கின்­றார்கள். சர்­வ­தேச  தீவி­ர­வா­தத்தை முழு­மை­யாக  இல்­லா­தொ­ழிப்­பதே அனைத்து நாடு­க­ளி­னதும்  பிர­தான நோக்கமாக காணப்படுகின்றது.

சர்வதேச தீவிரவாதத்தை  முழுமையாக எமது நாட்டில் இருந்து குறுகிய காலத்திற்குள்  இல்லாதொழிக்க வேண்டும். இதற்காக சர்வதேசத்தின் பூரண ஒத்துழைப்பை  தேவைக்கேற்ப பெற்றுக் கொள்ள வேண்டும்.  புதிய யுத்த நுட்பங்கள் மற்றும் சர்வதேச தீவிரவாத செயற்பாடுகளை அறிதல் தொடர்பில் சர்வதேச  நுணுக்கங்களையும் நாம் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.  எந்நிலையிலும் எமது நாட்டு இராணுவத்திற்கே   முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.