நிதானத்துக்கு முதலிடம்

0 702
  • எம்.எம்.ஏ. ஸமட்

ஏப்ரல் 21 தாக்­குதல் நடை­பெற்ற நாள் முதல் இத்­தாக்­குதல்­க­ளுக்­கெ­தி­ராக இந்­நாட்டின் ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­களும் கண்­ட­னங்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளிடம் மாத்­தி­ர­மின்றி இந்­நாட்டு மக்கள் அனை­வ­ரி­டமும் மன்­னிப்புக் கேட்ட வண்­ண­முள்­ளனர். அத்­துடன், தாக்­கு­தல்­களில் காயப்­பட்­ட­வர்கள் விரைவில் குண­ம­டைய வேண்­டு­மெனப் பிரார்த்­தித்­த­வாறும், அம்­மக்­களின் துய­ரங்­க­ளிலும், துன்­பங்­க­ளிலும் பங்கு கொண்­ட­வர்­க­ளா­கவும் அவர்­க­ளுக்கு தங்­களால் முடிந்த உத­வி­களைச் செய்­த­வாறும் இத்­தாக்­கு­த­லுடன் ஒட்டு மொத்த முஸ்­லிம்­க­ளையும் தொடர்­பு­ப­டுத்த வேண்­டா­மெனக் கோரிக்கை விடுத்தும் வரு­கின்­றனர்.

இச்­சந்­தர்ப்­பத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய, பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித், சில தமிழ், சிங்­கள அர­சியல் தலை­வர்கள் உட்­பட மனித நேயத்­தையும், மனி­தா­பி­மா­னத்­தையும் முதன்­மைப்­ப­டுத்தி இந்­நாட்டை நேசிக்­கின்­றவர்கள் இத்­தாக்­குதல்­களை கார­ண­மாகக் கொண்டு ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­களை நோக்கி உங்­க­ளது விரல்­களை நீட்ட வேண்டாம், அவர்­களை சந்­தேகக் கண்­கொண்டு பார்க்க வேண்டாம், பயங்­க­ர­வா­தத்­திற்குள் அவர்களைத் தள்ள வேண்­டா­மென அவ­ரவர் சமூ­கங்­க­ளுக்கும், ஒட்­டு­மொத்த நாட்டு மக்­க­ளுக்கும் வேண்­டுகோள் விடுத்து வந்த போதிலும், அவ்­வேண்­டு­கோள்­களை கவ­னத்­திற்­கொள்­ளாது, ஏப்ரல் 21 தாக்­குதல் நடை­பெற்ற மூன்று வாரங்­களின் பின்னர் பாரிய வன்­மு­றைகள் வடமேல் மாகா­ணத்தின் முஸ்லிம் பிர­தே­சங்கள் பல­வற்றில் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டி­ருக்­கின்­றன.

நீர்­கொ­ழும்பு, சிலாபம் எனத் தொடங்­கிய வன்­மு­றைகள் குரு­நாகல் மாவட்­டத்தின் பல முஸ்லிம் பிர­தே­சங்­க­ளிலும் கோரத் தாண்­ட­வ­மா­டி­யி­ருப்­பதை ஏற்­பட்­டுள்ள சேதங்­களைக் கொண்டு கணிக்க முடி­கி­றது. இந்த வன்­முறைத் தாக்­கு­தல்­க­ளுக்கு பள்­ளி­வா­சல்கள், கடைகள், வீடுகள், வாக­னங்கள் இலக்­காக்­கப்­பட்டு சொத்­த­ழி­வுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஏப்ரல் 21 தாக்­கு­தல்கள் மேற்­கொண்­ட­வர்கள், அத்­தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்தி அவர்­க­ளுக்­கு­ரிய தண்­ட­னை­களை வழங்­கு­வ­தற்கு பொலி­ஸாரும், பாது­காப்புப் படை­யி­னரும்  நடவ­டிக்கை எடுத்து வரு­கின்­றனர். அந்­ந­டவ­டிக்­கை­க­ளுக்கு ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­களும் ஒத்­து­ழைப்பு வழங்கி வரு­கின்­றனர். இதனை பாது­காப்புத் தரப்­பினர் பல இடங்­களில் கூறி வரு­கின்­றனர். “பொது­மக்­களின் உயிரைப் பாது­காப்­பதே பொலி­சாரின் கட­மை­யாகும். தீவி­ர­வாதச் சக்­தியை அழிப்­ப­தற்கு உத­விய முஸ்லிம் மக்­க­ளுக்கு நன்­றி­களை தெரி­விக்­கின்றேன்” என கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்  கபில ஜய­சே­கர அண்­மையில் கல்­முனை பொலிஸ் தலை­மை­யகம் ஏற்­பாடு செய்­தி­ருந்த பொது மக்­களின் பாது­காப்பு தொடர்­பாக விளக்­க­ம­ளிக்கும் ஒன்­று­கூ­ட­லின்­போது தெரி­வித்­தி­ருக்­கிறார். இதன்­மூலம் முஸ்­லிம்கள் தீவ­ிர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கு பொலி­சா­ரு­டனும், பாது­காப்புப் படை­யி­ன­ரு­டனும் எந்­த­ள­வுக்கு ஒத்­து­ழைப்பு வழங்கி வரு­கின்­றனர் என்­பது புல­னா­கி­றது.

இச்­சூ­ழலில் முஸ்லிம் பிர­தே­சங்­களில் அமை­தியைச் சீர்­கு­லைத்து சக­வாழ்வைச் சக­திக்குள் தள்­ளு­வ­தற்கு மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள வன்­மு­றைத்­தாக்­கு­தல்கள் முஸ்­லிம்­க­ளுக்கு பல அழி­வு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருத்­தாலும், இத்­தாக்­குதல் சம்­ப­வங்கள் தேசிய நல்­லி­ணக்­கத்­திற்கும், சமூக ஒரு­மைப்­பாட்­டுக்கும், சக­வாழ்­வுக்கும், சமா­தா­னத்­திற்கும், அமை­திக்கும் சாவு­மணி அடித்­தி­ருக்­கி­றது என்­பதை வெளிப்­ப­டை­யாக வெளிப்­ப­டுத்­து­கி­றது. ஏனெனில், அப்­பி­ர­தே­சங்­களில் முஸ்­லிம்கள் ஏனைய இன மக்­க­ளுடன் மிக அந்­நி­யோன்­ய­மாக வாழ்ந்­தி­ருக்­கி­றார்கள் என்­ப­தற்கு ஒரு சில பிர­தே­சங்­களில் முஸ்­லிம்­க­ளோடு இணைந்து சிங்­கள மக்­களும் பிர­தே­சங்­களின் பாது­காப்பில் ஈடு­பட்­டி­ருக்­கி­றார்கள் என்­ப­தற்கு நல்ல உத­ார­ண­மாகும் என்­பதை சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது.

ஏப்ரல் 21 தாக்­கு­தல்­களும் தொடர்­பற்ற முஸ்­லிம்­களும்

ஏப்ரல் 21 தாக்­குதல் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தை குறிப்­பாக சுற்­று­லாத்­து­றையை வெகு­வாகப் பாதித்­தி­ருக்­கி­றது. பாட­சாலை மற்றும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் கல்­வியை மாத்­தி­ர­மின்றி மக்­களின் இயல்பு வாழ்­வையும் ஸ்தம்­பிதமடையச்செய்தி­ருக்­கி­றது. மக்­களின் இயல்பு வாழ்க்­கையை முழு­மை­யாக வழ­மைக்குத் திரும்பச் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரும் சந்­தர்ப்­பத்தில் ஆட்­சியைக் கைப்­பற்­றுதல், ஆட்­சியை மாற்­றுதல்,  ஆட்­சியைத் தக்க வைத்தல் என்ற கோட்­பா­டு­களின் அடிப்­ப­டையில் தேசிய அர­சியல் அரங்கில் அர­சி­யல்­வா­தி­க­ளினால் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற எதிர்­மறைக் கருத்­துக்கள் மக்­களை அச்­சத்­தி­லி­ருந்து அகல முடி­யாத நிலைக்குத் தள்­ளி­யி­ருப்­பதைக் காண முடி­கி­றது.

கடந்த 13ஆம் திகதி தாக்­கு­தல்கள் நடை­பெறும் என்று அர­சி­யல்­வா­திகள் குறிப்­பிட்­டி­ருந்­த­போ­திலும் அதனை பாது­காப்பு தரப்பு கவ­னத்தில் எடுத்­துக்­கொண்டு, முழு­மை­யான பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை அத்­தி­னத்தில் மேற்­கொண்­டி­ருந்­ததைக் காணக் கூடி­ய­தா­க­வி­ருந்­தது.

இந்­நி­லை­யில்தான், முஸ்லிம் பிர­தே­சங்கள் இலக்­கு­வைக்­கப்­பட்டு வன்­மு­றைகள் கட்­ட­விழ்க்கப்­பட்­டி­ருக்­கின்­றன. அப்­பாவி முஸ்­லிம்­களின் சொத்­துக்கள் அழிக்­கப்­பட்டு சேத­மாக்­கப்­பட்டு அவர்கள் நடுத்­தெ­ருவில் நிற்கும் நிலையை வன்­மு­றை­யா­ளர்கள் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள்.

இவர்­க­ளுக்­கெ­தி­ரான சட்டம் உரிய முறையில் பிரயோகிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. காலம் கால­மாக ஏனைய சமூ­கத்­தோடு சகோ­தர வாஞ்­சை­யுடன் வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்­களின் சக­வாழ்வைக் கேள்­விக்­கு­றி­யாக்­கி­யுள்ள ஏப்ரல் 21 தாக்­கு­தல்­களும், அதைத்­தொ­டர்ந்து மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள வன்­முறைத் தாக்­கு­தல்­களும் நாட்டில் மேலும் அமை­தி­யின்­மையைத் தோற்­று­வித்­தி­ருக்­கி­றது.

இந்த வன்­மு­றை­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக சட்டம் அதன் கட­மையை முறை­யாக நிறை­வேற்ற வேண்டும் என்ற கோரிக்­கைகள் சகல தரப்­புக்­க­ளி­லுமி­ருந்து முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதற்­க­மைய வன்­மு­றை­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் என்ற குற்­றச்­சாட்டின் பிர­காரம் பலர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இதே­வேளை, மக்கள் அமைதி காக்க வேண்டும், நிதா­னத்­துடன் செயற்­பட வேண்­டு­மென்ற வேண்­டு­தல்­களும் மக்­க­ளிடம் சர்­வ­மதத் தலை­வர்கள் உட்­பட நாட்­டுப்­பற்­றுள்ள பல­ரினால் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

ஏறக்­கு­றைய மூவா­யிரம் வருட வர­லாற்றைக் கொண்ட இலங்­கையில்   முஸ்­லிம்­களின் வர­லாறும் பழமை வாய்ந்­தது. இலங்­கையின் ஏறக்­கு­றைய 2 கோடி 20 இலட்சம் மக்கள் தொகையில் 9.7 வீதம் முஸ்­லிம்கள் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கி­றார்கள்.  இவ்­வாறு வாழும் முஸ்­லிம்கள் அன்றும் இன்றும் மண்­ணுக்கு விசு­வா­ச­மா­கவே வாழ்ந்து வரு­கி­றார்கள்.

இந்­நாட்டின் அத்­தனை வளர்ச்­சி­யிலும் முஸ்­லிம்கள் பங்­க­ளிப்பு செய்­தி­ருக்­கி­றார்கள். இம்­மண்­ணுக்­காக உயிர்த்­தி­யா­கமும் புரிந்திருக்­கி­றார்கள். அவ்­வாறு தேசப்­பற்­றோடு வாழும் முஸ்­லிம்­களை வந்­தேறு குடிகள் எனக் கொச்­சைப்­ப­டுத்­து­கி­றார்கள். இந்­நாட்டில் வாழ முடிந்தால் வாழுங்கள் இல்­லையேல் இந்­நாட்டை விட்டு வெளி­யே­றுங்கள் என அறை­கூவல் விடுக்­கி­றார்கள். இவ்­வாறு அறை­கூவல் விடு­கின்­ற­­வர்­க­ளுக்கு இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்­றைப்­பற்­றியும் அவர்­களால் இந்­நாட்­டுக்­காக புரி­யப்­பட்ட தியா­கங்கள் குறித்தும் நிதா­னத்­துடன் தெளி­வுப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும். அதற்­கான வழி­களை ஆரம்­பிப்­பது சக­வாழ்வை நேசிக்­கின்ற பெரும்­பான்மை மக்­க­ளிடம் முஸ்­லிம்கள் தொடர்­பான உண்­மை­யான பதி­வு­களை ஏற்­ப­டுத்த வேண்டும்.

இந்­நாடு எல்­லோ­ருக்கும் சொந்தம் என்ற மனப்­பாங்கு எல்­லோ­ரி­ட

­மு­மில்லை. இந்­நாட்டில் பெரும்­பான்­மை­யாக   பௌத்த சிங்­கள மக்­களே வாழ்­கின்­றனர் என்­பது புள்­ளி­வி­ப­ரங்­களின் மூலம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட உண்மை. அதற்­காக ஏனைய இனத்­த­வர்கள் வந்­தேறு குடி­க­ளல்ல. அந்­நி­யர்­க­ளி­ட­மி­ருந்து இந்­நாட்டை மீட்­ப­தற்­காக சிங்­களத் தலை­வர்­க­ளுடன் இணைந்து தமிழ் மற்றும் முஸ்லிம் சிறு­பான்மை சமூ­கங்­களின் தலை­வர்­களும் போரா­டி­யி­ருக்­கி­றார்கள்.

அதனால், இந்­நாட்டுப் பிர­ஜைகள் என எவ­ரெ­வ­ரெல்லாம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­களோ அவர்கள் எல்­லோரும் இந்­நாட்டின் அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் அத்­தனை உரி­மை­க­ளையும் பெற்று சுதந்­தி­ர­மா­கவும், நிம்­ம­தி­யா­கவும், ஏனைய சமூ­கங்­க­ளுடன் சமூக ஒரு­மைப்­பாட்­டு­டனும், நல்­லி­ணக்­கத்­து­டனும் வாழ்­வ­தற்கு வழி­வி­டப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இருப்­பினும், சமூ­கங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டு­வ­தற்கும், சக­வாழ்வு நிலை­பெ­று­வ­தற்கும் இந்­நாட்டில் புரை­யோ­டிப்­போ­யி­ருக்கும் இன­வாதம் தடைக்­கல்­லாக இருந்து வரு­கி­றது. இலங்கை சமூ­கங்­களின் சமூக ஒற்­று­மையை சீர்­கு­லைத்து இலங்­கையை இன­வாத சக­திக்குள் புதைக்க எத்­த­னிக்கும் சக்­திகள் அடை­யாளம் காணப்­பட்டு அச்­சக்­தி­க­ளுக்கு எதி­ராக உட­ன­டி­யாக சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுப்­பது அர­சாங்­கத்தின் தார்­மீகப் பொறுப்­பென பல கோணங்­க­ளிலும்  வலி­யு­றுத்­தப்­பட்­டுக்­கொண்­டி­ருப்­பதைக் காண முடி­கி­றது. இதற்­கேற்ப இன­வன்­மு­றைக்கு கார­ண­மா­ன­வர்கள் என்று கரு­தப்­படும் முக்கிய நபர்கள் பலர் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்­ப­தையும் பதி­விட வேண்டும்.

தெற்கில் ஆண்­டாண்டு காலம் நல்­லி­ணக்­கத்­துடன், சக­வாழ்­வு­டனும் வாழும்  சிங்­கள. தமிழ், கிறிஸ்­தவ – முஸ்லிம் மக்­களின் சக­வாழ்வைச்  சீர்­கு­லைத்து இன­மு­று­கலை ஏற்­ப­டுத்தும் கைங்­க­ரி­யங்­களை வங்­கு­ரோத்து அர­சி­யல்­வா­தி­களும், அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக செயற்­ப­டு­கின்ற சிலரும்; ஒன்­றி­ணைந்து முன்­னெ­டுத்­தி­ருப்­பதை வர­லாற்று நெடு­கிலும் காண­மு­டி­கி­றது. இவர்­களின் இத்­த­கைய செயற்­பா­டுகள் தொடர்பில் பல்­வேறு விமர்ச­னங்­களை மதத் தலை­வர்கள் தற்­போது முன்­வைத்து வரு­கின்­றனர்.

தொடர் சம்­ப­வங்­களும் வாழ்­வு­ரிமை மீதான பேரி­டியும் முஸ்­லிம்­களின் வளர்ச்சி பேரி­ன­வா­தத்தின் கழு­குக்­கண்­களை சுதந்­தி­ரத்­திற்கு முற்­பட்ட காலம் தொட்டுக் குத்­திக்­கொண்டு இருக்­கி­றது. குறிப்­பாக முஸ்­லிம்­களின் பொரு­ளா­தார வளர்ச்­சியை அழிப்­பதே இத்­தாக்­கு­தல்­களின் இலக்கு என்­பதை 1915ஆம் ஆண்டு இடம்­பெற்ற கம்­பளைக் கல­வரம் முதல் குரு­நகால் மாவட்­டத்தில்  பல பிர­தே­சங்­க­ளிலும் அரங்­கேற்­றப்­பட்­டுள்ள வன்­மு­றைகள் வரை நன்கு புலப்­ப­டுத்­தி­யுள்­ளன. ஏப்ரல் 21 தாக்­குதல் இதற்கு மேலும் உர­மூட்­டி­யி­ருப்­ப­தா­கவே கரு­தப்­ப­டு­கி­றது. தொடர்ச்­சி­யான தாக்­கு­தல்கள் சம்­ப­வங்கள் முஸ்­லிம்­களின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­ட­தா­கவும், வாழ்­வு­ரிமை மீதான பேரி­டி­யா­கவும் நோக்­கப்­ப­டு­கி­றது.

ஒரு­வரும் எதிர்­பா­ராத ஏப்ரல் 21 தாக்­கு­தல்கள் முஸ்­லிம்கள் மீது வீண்­ப­ழி­களைச் சுமத்­து­வ­தற்கு கார­ண­மா­யிற்று என்றே கரு­தப்­ப­டு­கி­றது. முஸ்­லிம்கள் குறித்­தான நம்­பிக்­கை­யீ­னத்­தையும், தப்­ப­பிப்பி­ரா­யங்­க­ளையும் ஏனைய மக்கள் மத்­தியில் பரப்­பு­வ­தற்கும் இன வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்­து­வி­டு­வ­தற்கும் ஏது­வாக அமைந்து விட்­டது. பிற மத மக்கள் மத்­தியில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற பிர­சா­ரங்கள் முஸ்லிம் மக்­களை பொரு­ளா­தார ரீதி­யாக வெகு­வாகப் பாதித்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அவ்­வப்­போது ஏற்­ப­டு­கின்ற இன முறு­க­லின்­போது முஸ்­லிம்­களின் கடை­களில் பொருட்கள் கொள்­வ­னவு செய்­யக்­கூ­டாது போன்ற பல பிர­சா­ரங்கள்  பிற சமூ­கத்­தி­ன­ரு­ட­னான முஸ்லிம் சக­வாழ்வை வெகு­வாகப் பாதித்­தி­ருக்­கி­றது.  ஓர் உள­வியல் தாக்­குதல் கரு­வி­யாகக் கூட இந்தப் பிர­சா­ரங்கள் மாற்­றப்­பட்­டி­ருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கி­றது. இவர்­களின் இத்­த­கைய பிர­சா­ரங்கள் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் ஆதா­ர­மற்­றவை என நிரூ­பிக்­கப்­பட்­டி­ருந்­தாலும் முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்து உரு­வான சிறு குழு­வினர் மேற்­கொண்ட மிலேச்­சத்­த­ன­மான கொடூரத் தாக்­கு­தல்கள் முஸ்­லிம்­களை மிக மோச­மான நிலைக்குத் தள்­ளி­யி­ருப்­ப­துடன், ஏனை சமூ­கத்­தி­ன­ரு­ட­னான சக­வாழ்­வையும் கேள்­விக்­கு­றி­யாக்­கி­யி­ருக்­கி­றது.

இருப்­பினும், ஏவி­வி­டப்­பட்ட பிசாசு போன்­ற­வர்கள் மேற்­கொண்ட தாக்­கு­தல்­க­ளுக்­காக ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளுக்கும் எதி­ராக சட்­டத்தைக் கையில் எடுத்து செயற்­பட வன்­மு­றை­யா­ளர்கள் முன்­வந்­தி­ருக்­கி­றார்கள். எவரின் ஆசிர்­வா­தத்­துடன் இவர்கள் சட்­டத்தைக் கையில் எடுத்து அப்­பாவி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகச் செயற்­ப­டு­கி­றார்கள்  என்ற கேள்­விக்கு மத்­தியில் முஸ்­லிம்­க­ளுக்கு  இழைக்­கப்­பட்­டுள்ள அநீ­திக்கு நீதி பெற்­றுக்­கொ­டுப்­பது அர­சாங்­கத்தின் தார்­மீகப் பொறுப்­பென வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­வ­தையும் பதி­விட வேண்­டி­யுள்­ளது.

அர­சாங்­கத்­தினால் அவ­ச­ர­காலச் சட்டம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டும், ஊர­டங்குச் சட்டம் அமுலில் இருந்தும் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்­ளிட்ட சமூக வலைத்­த­ளங்கள் முடக்­கப்­பட்­டி­ருந்த போதிலும், வன்­மு­றை­யா­ளர்­க­ளினால் முஸ்­லிம்­களின் வீடுகள், கடைகள், பள்­ளி­வா­சல்கள், வாக­னங்கள் தாக்­கப்­பட்­டி­ருப்­பதாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்ற நிலையில் முஸ்­லிம்­களின் சமூக, பொரு­ளா­தார கட்­ட­மைப்புக் கூறுகள் அழித்­தொ­ழிக்­கப்­பட்­டி­ருப்­பது வாழ்­வு­ரி­மையில் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தா­கவே உண­ரப்­ப­டு­கி­றது.

சிறு­பான்மை சமூ­கத்­துக்கு எதி­ராக இன­வா­தத்தின் இன அழிப்பு நட­வ­டிக்­கை­யாக 1915இல் நடை­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான  கல­வ­ரமும் 1983ஆம் ஆண்டு தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட ஜுலைக் கல­வ­ரமும் வர­லாற்றில் பதி­யப்­பட்­டி­ருக்­கி­றது. அவ்­வா­றா­ன­தொரு வரலாற்றுப் பதிவு இந்நாட்டில் மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை இந்நாட்டை நேசிக்கின்ற பலர் எடுத்துரைத்து வருகின்றனர்.

அழிவுகள் பலவற்றை எதிர்கொள்ளச் செய்த இவ்விரு ஆண்டுகளிலும் இடம்பெற்ற இவ்வினக்கலவரங்கள் அக்காலங்களிலிருந்த அரச இயந்திரங்களின் ஆசிர்வாதங்க ளுடனேயே நடைபெற்றிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அவ்வா றானதொரு நிலைமை உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளதுடன், இந் நிலைமை உருவாகாமல் நிதானத்திற்கு முதலிடம் வழங்கி செயற்படுவது சமகாலத்தில் ஒவ்வொரு முஸ்லிமை யும் சார்ந்தது. இந்நாட்டின் சட்டத்தின் மீது இறுதி வரை நம்பிக்கை வைத்து சட்டத்தினூடாக நமது இருப்பையும், சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு நம்மால் முடிந்த முயற்சிகளை முன்னெடுப்பது ஒவ்வொரு துறைசார்ந்தோரின் பொறுப்பாகவுள்ளது.

மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் சமூகம் முன்னெடுத்து வரும் சூழலில் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயற்பட்டு சட்டத்தின் முன் குறித்த வன்முறையாளர்களை நிறுத்தவும், நீதியைப் பெற்றுக்கொள்ளவும், தீவிரவாதத்தை இந்த இலங்கை மண்ணிலிருந்து பூண்டோடு அழிக்கவும் வழங்கி வரும் ஒத்துழைப்பை தொடர்ந்தும் அரசாங்கத்திற்கும், பாதுகாப்புப் படையினருக்கும் வழங்கவும் முஸ்லிம்கள் முன்வர வேண்டும்.

அத்துடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சிவில் சமூகத் தலைமைத் துவக் கோரிக்கைகளுக்கு கட்டுப்பட்டு, அவர்களின் வழிநடத்தல்களைப் பின்பற்றி,  இந்நாட்களில் எவ்வாறு நமது பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்று குர்ஆனும் நபி வழியும் வலியுறுத்தியி ருக்கிறதோ அவ்வழியை நிதானமாக மேற்கொண்டு நமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு புனித நோன்பையும் நோன்பு கால வணக்கங்களையும் அச்சமின்றி நிறைவேற்றிக் கொள்வதற்கு வல்ல இறைவன் நமக்கு பாதுகாப்பு அளிப்பானாக!
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.