தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் அரசியல்வாதிகள்

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்

0 524

வன்­முறை சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் சில அர­சி­யல்­வா­தி­களும் – பிர­தே­ச­சபை உறுப்­பி­னர்­களும் உள்­ளார்கள் என்ற தக­வல்கள் எமக்கு கிடைக்கப் பெற்­றுள்­ளன. இது­போன்ற அர­சியல் தலை­வர்­களே அந்­தந்த பிர­தே­ச­சபை உறுப்­பி­னர்­களை வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­மாறு தவ­றான முறையில் வழி­ந­டத்­து­கின்­றனர் என  பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை தெரி­வித்தார்.

கொழும்பு பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை மற்றும் இத்­தே­பானே தம்­மா­லங்­கார தேரர் ஆகி­யோ­ருக்­கி­டை­யி­லான சந்­திப்­பொன்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்­றது. சந்­திப்பின் பின்னர் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது.

இதன்­போது கருத்து தெரி­வித்த கொழும்பு பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை,

சட்­டத்தை ஒரு போதும் நாம் கையி­லெ­டுக்க முற்­ப­டக்­கூ­டாது. அதற்கு நான் இட­ம­ளிக்கப் போவ­து­மில்லை. சரி­யான முறையில் இந்தப் பிரச்­சி­னை­களை புரிந்­து­கொள்ள முடி­யா­த­வர்­க­ளிடம், மது­பா­னத்தை வழங்கி அவர்­களை வன்­மு­றைக்கு தூண்டும் சிலர் உள்­ளனர்.

இந்த வன்­முறை சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் சில அர­சியல் வாதி­களும் கட்சி ரீதி­யி­லான பிர­தே­ச­சபை உறுப்­பி­னர்­களும் உள்­ளார்கள் என்ற தக­வல்கள் எமக்கு கிடைக்கப் பெற்­றுள்­ளன. இது­போன்ற அர­சியல் தலை­வர்­களே அந்­தந்த பிர­தே­ச­சபை உறுப்­பி­னர்­களை இவ்­வாறு தவ­றான வழியில் கையா­ளு­கின்­றனர்.

எனவே, எதிர்­வரும் தினங்­களில் கொண்­டா­டப்­ப­ட­வுள்ள முஸ்லிம் மக்­களின் பண்­டி­கை­யான ரமழான் மற்றும் பௌத்த மக்கள் கொண்­டாடும் வெசாக் பண்­டிகை ஆகி­ய­வற்றை அந்த மக்­களை நிம்­ம­தி­யாக கொண்­டா­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கிறோம்.

அத்­தோடு இவ்­வாறு சிலரால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற செயற்­பா­டு­களால் கல­வ­ர­ம­டை­யாது பொறு­மை­யுடன் செயற்­ப­டு­மாறு முஸ்லிம் மக்­க­ளிடம் கேட்டுக் கொள்­கின்றோம். இவ்­வாறு பிரி­வி­னை­யுடன் செயற்­ப­டாமல் அனை­வரும் ஒன்­றி­ணைந்து ஒற்­று­மையை வெளிப்­ப­டுத்­து­வ­தோடு, நாட்டை வெகு­வி­ரைவில் மீளவும் சாதா­ரண நிலை­மைக்கு கொண்­டு­வர வேண்டும் என்­பதும் எமது கோரிக்­கை­யாகும்.

பாட­சா­லைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள போதும் மாண­வர்­களின் வருகை மிகக் குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றது. இந்த நிலை­மையை உரு­வாக்­கிய அர­சியல் தலை­வர்­களே அவற்றை சரி செய்ய வேண்டும்.

இத்­தனை உயிர்கள் பலி­யா­கியும், சொத்­துக்­க­ளுக்கு சேதம் விளை­விக்­கப்­பட்டும், வன்­மு­றைகள் ஏற்­பட்டும் அர­சியல் தலை­வர்கள் யாரும் பொறுப்­புடன் செயற்­ப­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை. இன்றும் கூட ஒரு­வரை ஒருவர் குறை கூறு­கின்­றார்­களே தவிர நாட்­டுக்­காக ஒன்­றி­ணைய யாரும் முன்­வ­ர­வில்லை என்­பது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

அத்­தோடு இவ்­வா­றான வன்­முறை சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வ­தற்கு முன்­னரே நாம் அர­சாங்­கத்­திடம் பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்தோம். ஆனால் அவை குறித்து யாருமே கவ­னத்தில் கொள்­ள­வில்லை. குறிப்­பாக பாரா­ளு­மன்­றத்­தி­லுள்ள சகல உறுப்­பி­னர்­க­ளதும் சொத்து விப­ரங்கள் குறித்து ஆராய்­வ­தற்­காக ஆணைக்­கு­ழு­வொன்றை அமைக்­கு­மாறும் கோரிக்கை விடுத்­தி­ருந்தோம். ஆனால் அதற்கும் இது வரையில் எந்த பிர­தி­ப­லிப்பும் இல்லை என்றார்.

இத்தே பானே தம்­மா­லங்­கார தேரர் கருத்து தெரி­விக்­கையில்,

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட குண்டு வெடிப்பின் பின்னர் சில தினங்­களில் மக்கள் வழமைக்கு திரும்ப ஆரம்பித்தனர். எனினும் மீண்டும் சில முரண்பாடுகளால் அமைதியற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. சில பிரதேசங்களில் பாரிய வன்முறை சம்பவங்களும் பதிவாகியுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இந்த வன்முறை சம்பவங்களின் பின்னணியில் வேறு நபர்கள் உள்ளனர் என தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இது மிகவும் கீழ்த்தரமான செயலாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.