மினுவாங்கொடையில் ; 27 வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்; 12 கடைகள் தீக்கிரை

பள்ளிவாசலுக்கு பலத்த சேதம் ; பிரதேசத்தில் பதற்றம்

0 523

பஸ்­க­ளிலும், மோட்டார் சைக்­கிள்­க­ளிலும் நாலா புறங்­க­ளி­லு­மி­ருந்து மினு­வாங்­கொடை நக­ருக்கு வருகை தந்த சுமார் 1000 க்கும் மேற்­பட்ட வன்­மு­றை­யா­ளர்கள் மினு­வாங்­கொடை பள்­ளி­வா­சலைத் தாக்கி முழு­மை­யாகச் சேதப்­ப­டுத்­தி­னார்கள்.

27 வர்த்­தக நிலை­யங்கள் தாக்­கப்­பட்டு சேதங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளன. இவற்றில் 12 கடைகள் முழு­மை­யாக தீக்­கி­ரை­யா­கி­யுள்­ளன என மினு­வாங்­கொடை ஜும்ஆ பள்­ளி­வா­சலின் தலைவர் எம்.ஆர்.எம். சவாஹிர், செய­லாளர் ஏ.டபிள்யூ. ரஷீத் ஆகியோர் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்­தனர்.

நேற்று முன்­தினம் இரவு மினு­வாங்­கொடை நகரில் இன­வா­தி­களால் மேற்­கொள்ளப் பட்ட தாக்­கு­தல்கள் தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே அவர்கள் இவ்­வாறு தெரி­வித்­தனர். அவர்கள் தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில், கடை­களைத் தாக்­கிய அவர்கள், பொருட்­களை வெளி­யி­லெ­டுத்து எறிந்­த­துடன் சில பொருட்­களை கொள்­ளை­யிட்டும் சென்­றுள்­ளனர். 12 கடைகள் முற்­றாக எரிந்­துள்­ளன. பள்­ளி­வா­ச­லுக்கு முழு­மை­யாக சேதம் ஏற்­பட்­டுள்­ளது.

நேற்று முன்­தினம் மாலை 6.30 மணிக்கும் 8.30 மணிக்கும் இடை­யிலே தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றுள்­ளன. பள்­ளி­வாசல் இரண்டு தட­வைகள் தாக்­கப்­பட்­டுள்­ளன. 7 மணிக்கு பள்­ளி­வா­சலை கற்­களால் தாக்கி, கண்­ணா­டி­களை உடைத்­துள்­ளார்கள். பின்பு 8.30 மணி­ய­ளவில் பள்­ளி­வா­சலின் பிர­தான நுழை­வா­யிலை உடைத்து பள்­ளி­வா­ச­லினுள் சென்று முழு­மை­யாகச் சேதப்­ப­டுத்­தி­யுள்­ளார்கள். மினு­வாங்­கொடை நகரில் முஸ்­லிம்­களின் 3 வீடு­களும் தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன.

உள்­ளூர்­வா­சி­க­ளுடன் அநே­க­மானோர் வெளி­லி­ருந்து வந்தே தாக்­கு­தல்­களை நடத்­தி­னார்கள். மினு­வாங்­கொ­டையில் முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யி­ன­ரா­கவே வாழ்­கி­றார்கள். இதனால் பெரும் அச்­சத்தில் இருக்­கி­றார்கள். அவர்­களை அமை­தி­யா­கவும் பொறு­மை­யு­டனும் இருக்­கு­மாறு வேண்­டி­யுள்ளோம் என்­றார்கள்.

சம்­பவ இடத்தில் தற்­போது விசேட அதி­ர­டிப்­படை, இலங்கை விமா­னப்­படை, இரா­ணுவம் மற்றும் பொலிஸார் குவிக்­கப்­பட்­டுள்­ள­துடன், இப்­பி­ர­தே­சத்தில் பாது­காப்பும் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

மினு­வாங்­கொடை நகரில் அமை­தி­யற்ற சூழ்­நிலை மேலும் நீடிக்­கா­தி­ருக்கும் வகையில், மினு­வாங்­கொடை பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட மினு­வாங்­கொடை, புருல்­ல­பிட்­டிய, , கல்­லொ­ழுவை, ஜாபா­ல­வத்தை, பொல்­வத்தை, பத்­தண்­டு­வன, மிரிஸ்­வத்தை, கோப்­பி­வத்தை ஆகிய பகு­தி­களில் நேற்று முன் தினம் உட­ன­டி­யாக அமு­லுக்கு வரும் வகையில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பொலிஸ் ஊர­டங்குச் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. இவ் ஊர­டங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்­ப­டுத்­தப்­ப­ட்­டுள்­ளது.

மத­கு­ருமார், அர­சி­யல்­வா­திகள் விஜயம்

மினு­வங்­கொடை நக­ருக்கும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் நேற்று அர­சி­யல்­வா­தி­களும், மதத் தலை­வர்­களும் விஜயம் செய்து சேத விப­ரங்­களைப் பார்­வை­யிட்­ட­துடன் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ஆறுதல் கூறினர்.

மினு­வாங்­கொடை பன்­ச­லையின் பிர­தான தேரர், மினு­வாங்­கொடை மற்றும் திவு­லப்­பிட்­டிய பகுதி ஆல­யங்­களின் கிறிஸ்­தவ அருட்­தந்­தைகள், பள்­ளி­வா­ச­லுக்கு விஜயம் செய்து நிர்­வா­கி­களைச் சந்­தித்து ஆறுதல் கூறினர். மற்றும் மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் பிர­தி­நி­திகள், உள்ளூர் அர­சி­யல்­வா­திகள், அமைச்சர் ரிசாத் பதி­யுதீன், இரா­ஜாங்க அமைச்சர் அமீர் அலி, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகி­யோரும் விஜயம் செய்­தனர்.

பென்சி கடை உரி­மை­யாளர்

மினு­வாங்­கொடை நகரில் பென்சி கடை உரி­மை­யா­ளரும், பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பி­ன­ரு­மான சுஹைதர் தெரி­விக்­கையில், எனது கடை மினு­வங்­கொடை நக­ரிலே மத்­திய சந்­தையில் இருக்­கி­றது. எனது கடையை மாலை 6.30 மணி­ய­ளவில் தாக்­கி­னார்கள். எனக்கு சுமார் 50 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்­பட்­டுள்­ளது. மினு­வாங்­கொ­டையில் உள்ள முஸ்லிம்களின் கடைகள் அனைத்தையுமே தாக்கி விட்டார்கள் என்றார்.

தொலைபேசி கடை உரிமையாளர்

மினுவாங்கொடை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்னாலே எனது தொலைபேசிக் கடை இருக்கிறது. காடையர்கள் தாக்குதல்களை மேற்கொள்வதாகவும், கடையை மூடுமாறும் கூறப்பட்டது. நான் கடையை மூடிவிட்டேன். எனது கடை தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதில் சுமார் 17 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.