அரசியல் நோக்கமுடையதே தயாசிறியின் குற்றச்சாட்டுகள்

கடுமையாக சாடுகிறார் அமைச்சர் ஹலீம்

0 448

சிங்­கள மக்­களை என்­னி­லி­ருந்து தூரப்­ப­டுத்­தவே தயா­சிறி ஜய­சே­கர பொய் குற்­றச்­சாட்­டுக்­களை தெரி­வித்­தி­ருக்­கின்றார். எனது காலத்தில் கண்டி மாவட்­டத்தில் அமைக்­கப்­பட்­டி­ருந்த 94 பள்­ளி­வா­சல்­க­ளையே பதிவு செய்­தி­ருக்­கின்றேன் என தபால் மற்றும் முஸ்லிம் சமய அலு­வல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தயா­சிறி ஜய­சே­கர கட்சி தலை­மை­ய­கத்தில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போது, அமைச்சர் ஹலீம் நாடு­மு­ழு­வதும் 400 தெளஹீத் பள்­ளி­வா­சல்­களை பதி­வு­செய்­துள்­ள­தாக தெரி­வித்­தி­ருந்த குற்­றச்­சாட்­டுக்கு பதி­ல­ளிக்கும் வகையில் நேற்று தபால் அமைச்சில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போதே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

இந்த அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வந்த 2015 ஆம் ஆண்­டு­முதல் முஸ்லிம் சமய அமைச்­ச­ராக நான் செயற்­ப­டு­கின்றேன். இந்த காலப்­ப­கு­தியில் 400 தெளஹீத் பள்­ளி­வா­சல்­களை அமைக்க நான் அனு­மதி அளித்­த­தா­கவும் அதில் 50 பள்­ளி­வா­சல்கள் எனது கண்டி மாவட்­டத்தில் அமைக்க அனு­மதி வழங்­கி­யி­ருப்­ப­தா­கவும் தயா­சிறி ஜய­சே­கர குற்றம் சாட்­டி­யி­ருந்தார். அவரின் இந்த குற்­றச்­சாட்­டுக்கள் அனைத்தும் அப்­பட்­ட­மான பொய்­யாகும்.

அத்­துடன் இந்தக் குற்­றச்­சாட்­டுக்கள் அனைத்தும் கண்­டியில் எனது தொகு­தி­யான ஹரிஸ்­பத்­துவ சிங்­கள மக்­களை வெறுப்­ப­டையச் செய்யும் திட்­டத்­திலே மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது. இதனை யார் சொல்­லிக்­கொ­டுத்­தது என்றும் எனக்குத் தெரியும். என்­றாலும் இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்­களை தெரி­வித்து சிங்­கள மக்­க­ளி­ட­மி­ருந்து என்னை தூரப்­ப­டுத்த முடி­யாது. எனது சேவை குறித்து அந்த மக்­க­ளுக்கு நன்கு தெரியும்.

அத்­துடன் நாட்டில் மொத்தம் 2599 பதிவு செய்­யப்­பட்ட பள்­ள­ிவா­சல்கள் இருக்­கின்­றன. அதே­போன்று ஆயி­ரத்தி 775 மத்­ர­ஸாக்­களும் 317 அர­புக்­கல்­லூ­ரி­களும் இருக்­கின்­றன. கண்டி மாவட்­டத்தில் மாத்­திரம் 282 பள்­ளி­வா­சல்கள் இருக்­கின்­றன. அதில் 94 பள்­ளி­வா­சல்கள் எனது காலத்தில் பதிவு செய்­தி­ருக்­கின்றேன். கண்­டியில் இடம்­பெற்ற வன்­மு­றையில் அதி­க­மான பள்­ளி­வா­சல்கள் பாதிக்­கப்­பட்­டன. அப்­போது நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளி­னூ­டாக அவற்­றுக்கு நஷ்­ட­ஈடு பெற நட­வ­டிக்கை எடுத்­த­போது, அதில் அதி­க­மான பள்­ளி­வா­சல்கள் பதிவு செய்­தி­ருக்­க­வில்லை. அதனால் எமக்கு அதில் பாதிப்­பேற்­பட்­டது.
அத­னால்தான் நாட்டில் இருக்கும் பதிவு செய்­யாத அனைத்து பள்­ளி­வா­சல்­க­ளையும் வக்பு சபையில் பதிவு செய்­து­கொள்­ளு­மாறு நான் அறி­விப்பு செய்தேன். அதன் பிர­கா­ரமே கண்­டியில் 94 பள்­ள­ிவா­சல்கள் பதிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன. அவ்­வாறு இல்­லாமல் இவை அனைத்தும் புதி­தாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் அல்ல. ஏற்கனவே நிர்மாணிக்கப்பட் டவையாகும். பொதுவாக புதிதாக பள்ளிவாசல்களை பதிவு செய்வதாக இருந்தால் அது நிர்மாணிக்கப்பட்டு 6மாதங்கள் வரை செல்லும். அந்த காலப்பகுதியில் குறித்த பள்ளிவாசல் பதிவு செய்வதற்கான தகுதிகள் தொடர்பில் வக்பு சபையினால் ஆராயப்படும் என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.