இந்தியாவில் கோவையில் கைது செய்யப்பட்ட ஆறு பேர் இலங்கையில் தாக்குதல் நடத்தியோருடன் தொடர்பில் இருந்தனர்

இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு இலங்கைக்கு முன்கூட்டியே அறிவித்திருந்தது

0 569

இலங்­கையில் தற்­கொலைத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டலாம் எனும் தக­வலை இந்­தி­யாவின் கோவையில் கைது செய்­யப்­பட்ட ஆறு பேர் மூலம் பெற்றுக் கொண்­ட­தா­கவும் அதனை இந்­திய தேசிய புல­னாய்வு அமைப்பு இலங்­கைக்கு அறி­வித்­த­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். வழக்கு தொடர்­பாக என்.ஐ.ஏ அமைப்பு விசா­ர­ணையை முடித்­தபின் தான், இலங்­கையில் தற்­கொ­லைப்­படைத் தாக்­குதல் நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தாக கடந்த மாதம் இந்­திய உளவு அமைப்­புகள் சார்பில் இலங்கை அர­சுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்­கப்­பட்டு செயல்­பட்­ட­தாக கோவையைச் சேர்ந்த முக­மது ஆஷிக்.ஏ, இஸ்­மாயில்.எஸ், சம்­சுதீன், முக­மது சலா­லுதீன்.எஸ், ஜாபர் சாதிக் அலி மற்றும் சாஹுல் ஹமீது ஆகி­யோரை கடந்த ஆண்டு செப்­டம்பர் மாதம் 1 ஆம் திகதி இந்­திய தேசிய புல­னாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) கைது செய்­தது.

இவர்கள் மீது கோவையில் பொலிஸ் நிலை­யத்தில் வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடத்­தப்­பட்டு வந்­தது. இவர்­க­ளிடம் நடத்­திய விசா­ர­ணையில் இந்­தி­யாவில் உள்ள இந்து மதத் தலை­வர்­க­ளையும், ஆர்­வ­லர்­க­ளையும் கொலை செய்ய திட்­ட­மிட்­டி­ரு­நத்து தெரிய வந்­தது.

இவர்கள் 6 பேர் மீதும் என்.ஐ.ஏ அமைப்­பினர் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்து விசா­ரணை நடத்தி வந்­தனர். இவர்­க­ளிடம் நடத்­திய விசா­ர­ணையில் ஏரா­ள­மான வீடி­யோக்கள் கைப்­பற்­றப்­பட்­டன.

அதில் இலங்­கையில் நடந்த தற்­கொ­லைப்­படைத் தாக்­கு­த­லுக்கு முக்­கிய கார­ண­மாகக் கூறப்­படும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ஸஹ்ரான் ஹாஷிம் குறித்த வீடி­யோக்களில் இருப்­பதை தேசிய புல­னாய்வு அமைப்­பினர் கண்­ட­றிந்­தனர்.

இலங்­கையைச் சேர்ந்த ஸஹ்ரான் ஹாஷிம், இஸ்­லா­மிய குடி­ய­ரசை அமைக்க வேண்டி இலங்கை, தமி­ழகம், கேர­ளாவில் உள்ள முஸ்லிம் இளை­ஞர்­களை மூளைச்­ச­லவை செய்து பிர­சாரம் செய்து வந்தார் என்­பதை புல­னாய்வுப் பிரி­வினர் விசா­ர­ணையில் கண்­டு­பி­டித்­தனர்.

மேலும், கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளிடம் நடத்­திய விசா­ர­ணையில் ஐ.எஸ். அமைப்பின் சிந்­த­னைகள், கொள்­கைகள் குறித்த தாக்கம் அதி­க­மாக இருந்­த­தையும், அது குறித்த விட­யங்­களை சமூக ஊட­கங்­களில் பரப்பி வந்­த­தையும் புல­னாய்வுப் பிரி­வினர் தெரிந்து கொண்­டனர். இந்த 6 பேரும் அடிக்­கடி ஸஹ்ரான் ஹாஷி­முடன் தொடர்பில் இருந்து வந்­துள்­ள­தையும் புல­னாய்வுப் பிரி­வினர் உறுதி செய்­தனர்.

கடந்த 6 மாதங்­க­ளுக்கும் மேலாக நடத்­தப்­பட்ட விசா­ரணை முடிந்த நிலையில், இலங்­கையில் தற்­கொ­லைப்­படைத் தாக்­குதல் நடத்த ஸஹ்ரான் ஹாஷிம் அமைப்­பினர் திட்­ட­மிட்­டுள்­ள­தாக தேசிய புல­னாய்வு அமைப்­பினர் கண்­டு­பி­டித்­தனர்.

இதை­ய­டுத்து, தேசிய புல­னாய்வு அமைப்­பினர் தங்­க­ளுக்கு கிடைத்த தக­வல்­களை முறைப்­படி உயர் அதி­கா­ரி­க­ளுக்கு அனுப்­பினர். அவர்கள் இந்­தியத் தூத­ரகம் மற்றும் உள­வுப்­பி­ரி­வினர் மூலம் இலங்கை அதி­கா­ரி­க­ளுக்கு அனுப்பி எச்­ச­ரிக்கை செய்­துள்­ளனர்.ஐ.எஸ். அமைப்பின் ஆத­ரவு பெற்ற அமைப்­பினர் அல்­லது ஐ.எஸ். அமைப்­பினர் இலங்­கையில் தாக்­குதல் நடத்த திட்­ட­மிட்­டுள்­ள­தாக ஆதா­ரங்­க­ளையும் இந்­திய தூத­ரக அதி­கா­ரிகள் இலங்கை அதி­கா­ரி­க­ளிடம் பகிர்ந்­துள்­ளனர்.

குறிப்பாக இலங்கையில் உள்ள தேவாலயங்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டது.
ஆனால், இந்த எச்சரிக்கைகளை இலங்கை அதிகாரிகள் கவனக்குறைவாக எடுத்துக்கொண்டதால், மிகப்பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.