தீவிரவாத பயிற்சி பெற்ற 160 உறுப்பினர்களை புலனாய்வுப் பிரிவினர் முன்னரே அறிந்திருந்தனர்

உயர்மட்ட உத்தரவு கிடைக்காததால் கைது செய்ய முடியவில்லை என்கிறது புலனாய்வுப் பிரிவு

0 555

இலங்­கையில் சுமார் 160 பேர் தீவி­ர­வாதப் பயிற்­சி­களைப் பெற்­றி­ருந்­தமை தொடர்பில் தமக்கு தக­வல்கள் கிடைத்­தி­ருந்த போதிலும் அவர்­களை கைது செய்­வ­தற்­கான அனு­மதி உய­ர­தி­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து கிடைக்கப் பெற­வில்லை என அரச புல­னாய்வுப் பிரி­வி­னரை மேற்­கோள்­காட்டி ஆங்­கில ஊடகம் ஒன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

ஏலவே தீவி­ர­வாத பயிற்சி பெற்ற ஒரு குழு­வி­னரே கடந்த ஈஸ்டர் தின தாக்­கு­தல்­களை நடாத்­திய குழு­வி­னரை பயிற்­று­வித்­துள்­ள­தா­கவும் விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இந்த தக­வல்­களை பாது­காப்பு அமைச்­சுக்கும் பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கும் பரி­மா­றிய போதிலும் சம்­பந்­தப்­பட்ட தீவி­ர­வாத குழு­வி­னரை கைது செய்­வ­தற்­கான உத்­த­ரவு உயர் மட்­டங்­க­ளி­லி­ருந்து புல­னாய்வு விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு கிடைக்கப் பெற­வில்லை என்றும் தெரிய வரு­கி­றது.

குறித்த தீவி­ர­வாத குழு­வினர் வணாத்­த­வில்­லு­வி­லுள்ள 75 ஏக்கர் பரப்­ப­ள­வான தென்னந் தோட்­டத்தில் பயிற்­சி­களில் ஈடு­பட்­ட­மையை கடந்த ஜன­வரி மாதம் நடாத்­தப்­பட்ட சோதனை நட­வ­டிக்கை ஒன்றின் மூலம் கண்­ட­றிந்­தனர்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாவ­னெல்­லையில் சிலை­களை சேதப்­ப­டுத்­தி­யமை தொடர்பில் பலர் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். அவர்­க­ளி­ட­மி­ருந்து கிடைக்கப் பெற்ற தக­வல்­க­ளுக்­க­மை­யவே வணாத்­த­வில்­லுவில் இருந்த பயிற்சி முகாம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. சந்­தேக நபர் ஒரு­வ­ருக்கு கிடைத்த எஸ்.எம்.எஸ். தகவல் ஒன்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டே குறித்த இடத்தை புல­னாய்­வா­ளர்கள் கண்­ட­றிந்­தனர்.

இதன்­போது சக்­தி­வாய்ந்த 100 கிலோ சீ4 வெடி­ம­ருந்­து­க­ளையும் ஆறு கொள்­க­லன்­களில் இருந்த நைட்­ர­ஜன்­க­ளையும் 99 டெட்­ட­னேட்­டர்­க­ளையும் குறித்த தென்னந் தோட்ட பயிற்சி முகா­மி­லி­ருந்து கடந்த ஜன­வரி 16 ஆம் திகதி சி.ஐ.டி.யினர் கைப்­பற்­றி­யி­ருந்­தனர்.

இதனைத் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களில் இத் தீவி­ர­வாத குழு­வினர் குண்டுத் தாக்­கு­தல்­களை நடாத்தும் போது ஆயு­தங்­களை கையாளும் முறை குறித்து பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.
அத்­துடன் இக் குழுவின் தலை­வ­ரான ஸஹ்ரான் ஹாஷிம் குறித்த பயிற்சி முகாமுக்கு அடிக்கடி வருகை தந்து குழுவில் புதிதாக இணைந்து கொண்டோருக்கு விரிவுரைகளை நடாத்தியுள்ளமையும் குறித்த முகாமிலேயே குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.