பயங்­க­ர­வா­தத்தை தோற்­க­டிக்க பாகிஸ்தான் கைகொ­டுக்கும்

பிரதமர் ரணிலிடம் இம்ரான் கான் உறுதி

0 540

இலங்­கையின் பயங்­க­ர­வாத எதிர்ப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு பாகிஸ்­தா­னிய அர­சாங்கம் ஆத­ர­வ­ளிக்­கு­மென பாகிஸ்­தா­னிய பிர­தமர் இம்ரான் கான் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

நேற்­றைய தினம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தொலை­பே­சி­யி­னூ­டாக தொடர்பு கொண்டு உரை­யா­டி­ய­போதே அவர் இந்த உறு­தி­மொ­ழியை வழங்­கி­யுள்ளார்.

கடந்த ஞாயி­றன்று இலங்­கையில் இடம்­பெற்ற தீவி­ர­வாத தாக்­கு­த­லினை வன்­மை­யாகக் கண்­டித்த பாகிஸ்­தா­னிய பிர­தமர் குண்டுத் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு தனது இத­ய­பூர்­வ­மான இரங்­கலை இதன்­பொ­ழுது தெரி­வித்தார். மேலும் காய­ம­டைந்­த­வர்கள் விரை­வாக குண­ம­டை­வ­தற்­காகத் தான் பிரார்த்­திப்­ப­தா­கவும் குறிப்­பிட்டார்.

மேலும் பாகிஸ்­தா­னிய மக்கள் தாக்­கு­த­லிலே உயி­ரி­ழந்த அப்­பாவி மக்கள் குறித்து கடு­மை­யாக வேத­னை­ய­டைந்­துள்­ள­தா­கவும் இத் துன்­ப­மான தரு­ணத்­திலே இலங்கை சகோ­த­ரர்­க­ளுக்கு தங்­க­ளது ஆத­ர­வினை அவர்கள் வழங்­கு­வ­தா­கவும் பிர­தமர் இம்ரான் கான் தெரி­வித்தார். தீவி­ர­வா­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் என்ற வகையில் பாகிஸ்­தா­னி­யர்­களால் இலங்கை சகோ­த­ரர்­களின் வேத­னை­யினை புரிந்­து­கொள்ள முடியும் எனக் குறிப்­பிட்ட பிர­தமர் இம்ரான் கான், தீவி­ர­வா­தத்­திற்கு எல்­லையோ, மதமோ கிடை­யாது என்­ப­துடன் பிராந்­தி­யத்­தி­னதும், உல­கத்­தி­னதும் சமா­தா­னத்­திற்கு தீவ­ர­வாதம் அச்­சு­றுத்­த­லாக காணப்­ப­டு­கின்­றது என்றும் சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தான் தீவி­ர­வா­தத்தின் அனைத்­து­வி­த­மான வடிவம் மற்றும் வெளிப்­பா­டு­களை கண்­டிப்­ப­துடன் அதனை அழிப்­ப­தற்கு இயன்றளவிலான ஆதரவினை வழங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.