மின்சார தடையில் அரசாங்கம் நாடகம்

ம.வி.மு. கடும் சாடல்

0 531

நாட்டில் மழை­யின்­மையால் ஏற்­பட்­டுள்ள வரட்­சியின் கார­ண­மா­கவே இவ்­வாறு மின்­னுற்­பத்­தியில் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தாகத் தெரி­வித்து அர­சாங்கம் மக்­களை ஏமாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றது. அரச நிறு­வ­ன­மொன்­றான பொதுப் பயன்­பா­டுகள் ஆணைக்­குழு இலங்கை மின்­சா­ர­சபை மீது தொடுத்­துள்ள வழக்­கிற்­க­மைய , எதிர்­வரும் 9 ஆம் திகதி மின்­சார சபை நீதி­மன்­றத்தில் முன்­னி­லை­யாக வேண்­டு­மென உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளமை இது பொய் என்­பதை தெளி­வு­ப­டுத்­து­கின்­றது என ம.வி.மு.வின் பாரா­ளு­மன்ற  உறுப்­பினர் சுனில் ஹந்­து­னெத்தி தெரி­வித்தார்.

ஜே.வி.பியின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் தற்­போது அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற மின்­வெட்டு பொரு­ளா­தா­ரத்தில் பாரிய தாக்­கத்தைச் செலுத்­து­கின்­றது. இதற்­கான பிர­தி­ப­லனை எதிர்­வரும் ஒரு வருட காலத்­திற்குள் அர­சாங்கம் எதிர்­கொள்ளும்.

காரணம் இந்த விடயம் தொடர்­பாக இலங்கை மின்­சார சபைக்கு எதி­ராக பொதுப் பயன்­பா­டுகள் ஆணைக்­குழு நீதி­மன்­றத்தில் வழக்கு தொடர்ந்­துள்­ளது. வழக்கு தொடுப்­ப­தற்கு முன்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் இவ்­வா­றான மின்­துண்­டிப்­பினால் பாதிக்­கப்­பட்­டோ­ரது விப­ரங்­களும் அந்த ஆணைக்­கு­ழுவால் சேக­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இம்­மாதம் 9 ஆம் திகதி இலங்கை மின்­சார சபை நீதி­மன்­றத்தில் முன்­னி­லை­யாக வேண்­டு­மென உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­மையும் இங்கு சுட்­டிக்­காட்ட வேண்­டி­ய­தாகும்.

தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பொதுப் பயன்­பா­டுகள் ஆணைக்­கு­ழுவை கடு­மை­யாக விமர்­சிக்க ஆரம்­பித்­துள்ளார். நாட்­டுக்கு வரு­ட­மொன்று தேவைப்­படும் மின்­னுற்­பத்தி தொடர்­பான சரா­சரி அளவு அர­சாங்­கத்­திற்கு தெரிந்­தி­ருக்க வேண்டும். அதே வேளை மழை­யற்ற காலங்­களில் நீர் மின்­னுற்­பத்தி பாதிக்­கப்­பட்டால், அதற்­கான மாற்று வழி முறை­யொன்றும் தயார்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் எதிர்­வரும் 30 வரு­டங்­க­ளுக்­கான நீர்த்­திட்­ட­மிடல் காணப்­ப­டு­கின்­றது. அதில் நீர்­மின்­னுற்­பத்தி தொடர்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­வாறே மின்­னுற்­பத்தி செய்­யப்­பட வேண்டும். அதனை மீறி மழை­யில்­லை­யெனக் கூறி சட்ட விரோ­த­மாக தனியார் துறை­யி­ன­ரிடம் இருந்து மின்­சா­ரத்தைப் பெறு­வ­தற்கு முயற்­சிக்கக் கூடாது.

தற்­போது ஏற்­பட்­டுள்ள மின்­சார தட்­டுப்­பாட்டை பூர்த்தி செய்­வ­தற்கு 250 மெகா வோல்ட் மின்­சாரம் தேவைப்­ப­டு­கின்­றது. இதனை எவ்­வாறு பெற்றுக் கொள்­வது என்­பது தொடர்பில் நீர்­திட்­ட­மி­டலில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால் அர­சாங்கம் அதனைச் செய்­யாது எம்­பி­லி­பிட்­டிய தனியார் மின்­னுற்­பத்தி நிலை­யத்­தி­ட­மி­ருந்து மின்­சா­ரத்தைப் பெறவே முயற்­சிக்­கின்­றது. இதற்­கான இலஞ்­சத்தை அவர்­க­ளி­ட­மி­ருந்து பெற்றுக் கொள்ளும்.

பொதுப் பயன்­பா­டுகள் ஆணைக்­குழு கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம், எதிர்­வரும் 2019 –- 2020 ற்கு இடைப்­பட்ட காலத்தில் மின் தட்­டுப்­பாடு ஏற்­படும் என எதிர்வு கூறி­யுள்­ள­தோடு அதற்­கான தீர்­வி­னையும் அந்த ஆணைக்­கு­ழுவே முன்­வைத்­துள்­ளது. இந்த அறிக்­கையை இலங்கை மின்­சார சபைக்கும் அனுப்­பி­வைத்­துள்­ளது. ஆனால் இந்த அர­சாங்கம் எத­னை­யுமே கவ­னத்தில் கொள்­ள­வில்லை. அதில் காற்று மற்றும் சூரிய மின்­னுற்­பத்தி தொடர்­பிலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அர­சாங்கம் ஏன் இந்த விட­யத்தில் கவ­னத்தில் கொள்­ள­வில்லை என்­பது கேள்­விக்­கு­றி­யாகும்.

இந்த முறை­மை­களைப் பின்­பற்­றாமல் தனி­யா­ரி­ட­மி­ருந்து உட­னடி மின்­சா­ரத்தைப் பெற­வுள்­ளனர். ஆனால் அதற்­கான பணத்­தையும் மக்­களே வரி­யாகச் செலுத்த வேண்டும். தேசிய வங்கி மற்றும் திறை­சேரி என்­பன மின்­சார சபைக்கு கடன்­களை வழங்­கி­யுள்ள போதும் மக்கள் மீதே இந்த சுமையும் திணிக்­கப்­ப­டு­கின்­றது. இதற்கு எதிர்ப்பு தெரி­விப்­பதன் கார­ண­மா­கவே பொதுப்­ப­யன்­பா­டுகள் ஆணைக்­கு­ழு­வுடன் மின்­சா­ர­சபை பொறி­யி­ய­லா­ளர்கள் சங்கம் தொடர்ந்தும் முரண்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது.

எதிர்­வரும் வரு­டங்­க­ளிலும் இவ்­வா­றான நெருக்­க­டிகள் ஏற்படும் போதும் மின்சார சபை இதே போன்று பொறுப்பற்று வியாபார நோக்குடனேயே இருக்கும். அரச நிறுவனமான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுயாதீனமாக நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு தொடர்ந்துள்ள போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த விடயத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பது நாட்டின் மீதும் மக்கள் மீதும் அவர்களுக்கு காணப்பட்ட பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.