ரோஹிங்ய மக்களின் மீள் திரும்புகை பாதுகாப்பானதாக அமைய வேண்டும்

பங்களாதேஷ் பிரதமர் வேண்டுகோள்

0 476

பங்­க­ளா­தேஷின் தெற்கு கொக்ஸ் பஸார் மாவட்­டத்தில் தற்­கா­லிக தங்­கு­மி­டங்­களில் வசித்­து­வரும் ரோஹிங்ய மக்­களின் மீள் திரும்­புகை பாது­காப்­பா­ன­தாக அமைய வேண்டும் என பங்­க­ளாதேஷ் பிர­தமர் ஷேக் ஹஸீனா வேண்­டுகோள் விடுத்­துள்­ள­தாக உள்ளூர் ஊட­கங்கள் தெரி­வித்­தன.

ரோஹிங்ய மக்கள் தமது சொந்த நாட்­டுக்கு அவர்­க­ளது பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் விரை­வாக மீளத் திரும்­பு­வதே சிறந்­த­தாகும் என கடந்த செவ்­வாய்க்­கி­ழமை டாக்­கா­வுக்­கான புதி­தாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் ரொபட் சட்­டேடன் டிக்­சனை அவ­ரது உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் வர­வேற்கும் நிகழ்ச்­சியில் ஷேக் ஹஸீனா தெரி­வித்தார்.

அதிக எண்­ணிக்­கை­யான ரோஹிங்­கிய அக­தி­க­ளினால் உள்ளூர் பங்­க­ளாதேஷ் மக்கள் எதிர்­நோக்கும் நெருக்­க­டிகள் தொடர்­பிலும் உரை­யாற்­றிய பங்­க­ளாதேஷ் பிர­தமர், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிப்­பதில் தனது அர­சாங்கம் முடிந்­த­ளவு சேவை­யாற்றி வரு­வ­தாகத் தெரி­வித்தார்.

பாது­காப்­பா­கவும் கௌர­வ­மா­கவும் பங்­க­ளா­தேஷின் ரோஹிங்ய மக்­களின் மீள் திரும்­புகை விரை­வாக இடம்­பெற வேண்டும் என பங்­க­ளாதேஷ் பிர­த­மரின் வேண்­டு­கோ­ளுக்கு டிக்சன் ஆத­ரவு தெரி­வித்­த­தாக பங்­க­ளா­தேஷின் தனியார் ஊட­க­மான யுனைட்டட் நியூஸ் தெரி­வித்­துள்­ளது.

ரோஹிங்ய நெருக்­க­டியை தீர்ப்­ப­தற்கு காலம் சென்ற முன்னாள் ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் கொபி அனான் தலை­மையில் அமைக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழு­வினால் முன்­வைக்­கப்­பட்ட சிபா­ரி­சு­களை நடை­மு­றைப்­ப­டுத்த மியன்மார் அதி­கா­ரிகள் முன்வர வேண்டும் எனவும் ஹஸீனா வேண்டுகோள் விடுத்தார்.

நெருக்கடிமிக்க முகாம்களில் தற்போது சுமார் 40,000 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.