கிழக்கு இந்தோனேஷியாவில் வெள்ளப்பெருக்கு 70 பேர் பலி

0 539

இந்­தோ­னே­ஷி­யாவின் கிழக்கு மாகா­ண­மான பபு­வாவில் அடை மழை கார­ண­மாக ஏற்­பட்ட வெள்ளம் மற்றும் மண்­ச­ரி­வு­களின் கார­ண­மாக குறைந்­தது 70 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் மேலும் 59 பேர் காய­ம­டைந்­துள்­ள­தா­கவும் நாட்டின் தேசிய அனர்த்த முகா­மைத்­துவ முக­வ­ரகம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்­தது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அடை மழை மற்றும் மண்­ச­ரி­வு­களின் கார­ண­மாக மாகாணத் தலை­ந­க­ரான ஜய­பு­ரா­விற்கு அரு­கி­லுள்ள சென்­டானி நகரில் வெள்ளப் பெருக்கு ஏற்­பட்­ட­தாக தேசிய அனர்த்த முகா­மைத்­துவ முக­வ­ர­கத்தின் பேச்­சாளர் சுடோபோ புர்வோ நுக்­ரேஹோ அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்ளார்.

சென்­டானி நகரில் 63 பேர் உயி­ரி­ழந்­த­தா­கவும் அம்­பேரா பிராந்­தி­யத்தில் 7 பேர் உயி­ரி­ழந்­த­தா­கவும் பபுவா மாநி­லத்­தி­லுள்ள இரா­ணுவ அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

காய­ம­டைந்­த­வர்கள் ஜய­பு­ரா­வி­லுள்ள வைத்­தி­ய­சா­லை­யொன்­றிற்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ள­தாக நுக்­ரேஹோ தெரி­வித்தார்.

காணாமல் போயுள்­ளோரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

பாதிக்­கப்­பட்ட பல பகு­தி­க­ளுக்கு இது­வரை போக முடி­யா­துள்­ளதால் உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்கும் வாய்­புள்­ள­தா­கவும் நுக்­ரேஹோ தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் சுலாவெஸ்ஸி தீவில் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளின் காரணமாக 68 பேர் உயிரிழந்தனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.