ஆட்சி மாற்­றத்தின் நோக்கம் இன்று கன­வாகி விட்­டது இரண்டு கட்­சி­களும் தவ­று­களை திருத்தி ஒத்­து­ழைப்­புடன் செயற்­பட வேண்டும்

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க தெரி­விப்பு

0 567

இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து நாட்­டுக்­காக ஒரு­மித்து செயற்­பட வேண்டும் என்ற நோக்­கத்­திலே 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றம் இடம் பெற்­றது. ஆனால் எதிர்ப்­பார்த்த நோக்­கங்கள் அனைத்தும் தோற்­க­டிக்­கப்­பட்டு வெறும் கன­வாகி விட்­டது. போட்­டித்­தன்­மை­யுடன் இரண்டு கட்­சி­களும் செயற்­பட்டால் பிறி­தொரு தரப்­பி­னரே இலாபம் பெறு­வார்கள் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்தார்.

வியாங்­கொட பகு­தியில் நேற்று முன்­தினம் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இலங்கை அர­சியல் வர­லாற்றில் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியும், ஐக்­கிய தேசிய கட்­சியும் தொடர்ந்து போட்டித் தன்­மை­யு­டனும், முரண்­பா­டு­க­ளுடனும் அர­சி­யலில் செல்­வாக்கு செலுத்­தி­ன. இவ்­வா­றான போட்­டித்­தன்­மையே முன்­னேற்­றத்­திற்கு ஒரு தடை­யாக காணப்­பட்­டது.

நாட்டின் எதிர்­கா­லத்­தினை கருத்திற் கொண்டு புதிய அர­சியல் கொள்­கை­களை வகுக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டது. இதற்­க­மைய 2015 ஆம் ஆண்டு பாரிய போராட்­டத்தின் மத்­தியில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டது. இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்­க­மாக மாறு­பட்ட அர­சியல் நிர்­வா­கத்தை முன்­னெ­டுத்து சென்­றது. இந்த ஒரு­மைப்­பாடு தொடர்ந்து நீடிக்­க­வில்லை. தேசிய அர­சாங்கம் அமைக்கும் போது பல முன்­னேற்­ற­க­ர­மான அர­சியல் திட்­டங்கள் வகுக்­கப்­பட்­டன. இரண்டு தரப்­பி­னரும் ஒத்­து­ழைப்­புடன் செயற்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்ட போதும் அவை செயற்­ப­டுத்தப்பட­வில்லை. உள்­ளக ரீதி­யி­லான முரண்­பா­டுகள் ஒரு­கட்­டத்தில் உச்­ச­கட்­டத்­தினை அடைந்­தது. இதன் பெறு­பே­றுகள் இரண்டு தரப்­பிலும் தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­தி­ன. ஆட்சி மாற்றம் உரு­வாக்­கப்­பட்­ட­மைக்­கான நோக்கம் இன்று வீழ்த்­தப்­பட்­டுள்­ளது என்­பது கவ­லைக்­கு­ரி­யது.

பொது­வான விட­யங்­க­ளையும், முன்­னேற்­ற­க­ர­மான விட­யங்­க­ளையும் அர­சியல் களத்தில் எடுத்­து­ரைக்கும் போது ஒரு தரப்­பி­னரால் நான் ஐக்­கிய தேசிய கட்­சியின் உறுப்­பினர் என்று விமர்­சிக்கப்படு­கின்றேன். இவ்­வா­றான விமர்­ச­னங்­களை பொருட்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­யமும் கிடை­யாது. எனது அர­சியல் பயணம் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சி­யி­லேயே தொடங்­கி­யது. சுதந்­திர கட்­சி­யிலே முடி­வுறும் என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

நாடு முன்­னேற்­ற­ம­டைய வேண்­டு­மாயின் புதிய மாற்­றங்­களை அர­சி­யலில் ஏற்­ப­டுத்த வேண்டும். தேசிய அர­சாங்கம் முடி­வு­று­வ­தற்கு பல்வேறு காரணிகள் இரு தரப்பிலும் காணப்படலாம். ஆனால் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்திய மக்கள் ஏமாற்றமடையக் கூடாது. தவறுகளை திருத்திக் கொண்டு இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவது பல பிரச்சினைகளுக்கு இலகுவான தீர்வினை பெற்றுக் கொடுக்கும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.