ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீடு முப்பது எம்.பி.க்கள் எதிர்த்து வாக்களிப்பர்

முஜிபுர் ரஹ்மான் திட்டவட்டம்

0 508

பாரா­­ளு­மன்­றத்தில் இன்று இடம்­பெ­ற­வுள்ள வரவு – செல­வுத்­தி­ட்­டத்தின் ஜனா­தி­ப­திக்­கான நிதி ஒதுக்­கீடு தொடர்­பான வாக்­க­ளிப்பில் அர­சாங்­கத்தின் பின்­வ­ரிசை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 30 பேர் எதிர்த்து வாக்­க­ளிக்­க­வுள்­ள­தாக கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்­ற­ உ­றுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

வரவு –செல­வுத் திட்­டத்தில் ஜனா­தி­பதிக்கான நிதி­யொ­துக்­கீட்­டுக்கு எதி­ராக வாக்­க­ளிப்­ப­தென்­று ஏற்­க­னவே மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னத்தில் எவ்­வித மாற்­றமும் இல்லை. ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும், அக்­கட்­சியின் தலை­மைத்­து­வத்­திற்கும் எதி­ராக பல்­வேறு பொய்க்­கு­ற்­றச்­சாட்­டுகளை சுமத்திவரும் ஜனா­தி­ப­திக்­கான நிதி ஒதுக்­கீ­டு­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்­டிய அவ­சியம் எமக்­கில்லை எனவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

ஜனா­தி­ப­திக்­கான நிதி ஒதுக்­கீடு தொடர்­பான விவாதம் இன்று பாரா­ளு­மன்­றத்தில் காலை 10.30 மணிக்கு ஆரம்­ப­மாகி பிற்­­பகல் 12.30 மணி­வரை நடை­பெ­ற­­வுள்­ளது. இந்­நிதி ஒதுக்­கீடு தொடர்­பான வாக்­கெ­டுப்பு இன்று மாலை இடம்­பெ­ற­வுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உகண்­டா­வுக்­கான விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டு நேற்று முன்­தினம் அந்­நாட்­டுக்குச் சென்றுள்ளதால் இன்று நடை­பெறும் அவ­ரது நிதி­யொ­துக்­கீட்­டு­க்­கான பாரா­ளு­மன்ற விவா­தத்தில் கலந்து கொள்­ள­­மாட்டார் எனத் தெரி­விக்­கப்­ப­­டு­கி­றது.

இதே­வேளை வரவு –செலவுத் திட்­டத்தில் ஜனா­தி­ப­தியின் நிதி ஒதுக்­கீடுகளுக்கு ஆத­ர­வ­ளித்து வாக்­க­ளிக்­க­வுள்­ள­தாக இணைந்த எதிர்­க்­கட்­சியைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தீர்­மா­னித்­துள்­ளனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.