வட கொரிய தலைவரின் சகோதரர் கொலையின் சந்தேக நபர் விடுதலை

0 544

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் ஒன்­று­விட்ட சகோ­தரர் கொலை தொடர்பில் குற்­றம்­சாட்­டப்­பட்­டி­ருந்த இந்­தோ­னே­ஷியப் பெண்ணை மலே­ஷிய நீதி­மன்றம் கடந்த திங்­கட்­கி­ழமை அனைத்துக் குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லு­மி­ருந்தும் விடு­வித்­துள்­ள­தாக மலே­ஷிய ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

சர்­வ­தேச ரீதி­யாக தடை செய்­யப்­பட்­டுள்ள இர­சா­யன ஆயு­த­மான வீ.எக்ஸ். எனும் நரம்பு மூலம் செலுத்­தப்­படும் இர­சா­ய­னத்தின் மூலம் கோலா­லம்பூர் விமான நிலை­யத்தில் வைத்து கடந்த 2017 பெப்­ர­வரி 13 ஆம் திகதி நஞ்­சூட்­டி­ய­தாகக் குற்­றம்­சாட்­டப்­பட்ட 27 வய­தான சித்தி ஆயிஷா இரண்டு வரு­டங்கள் சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருந்தார்.

இந்தக் கொலைக் குற்­றச்­சாட்டின் மற்­று­மொரு பெண் சந்­தேக நப­ரான வியட்­நாமைச் சேர்ந்த டொஆன் தியி ஹொஉங் (30) தற்­போ­து­வரை சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ள அதே­வேளை எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ளார்.

கோலா­லம்­பூ­ரி­லுள்ள இந்­தோ­னே­ஷியத் தூத­ரகம் இந்தத் தீர்­மா­னத்­திற்கு நன்­றி­களைத் தெரி­வித்­துள்­ளது. சித்தி ஆயிஷா மற்றும் டொஆன் தியி ஹொஉங் ஆகிய இரு பெண்­களும் கிம்மின் முகத்தில் விசி­று­வதை பாது­காப்புக் கண்­கா­ணிப்புக் கெம­ராக்கள் காண்­பித்­த­தை­ய­டுத்தே இரு­வரும் கைது செய்­யப்­பட்­டனர்.

தொலைக்­காட்­சியில் காண்­பிப்­ப­தற்­கான வேடிக்கைச் செயற்­பாடு ஒன்­றிற்­காக சிலர் கொரி­யர்கள் அல்­லது ஜப்­பா­னி­யர்கள் 90 டொலரை வழங்­கி­ய­தாக ஆயி­ஷாவின் சட்­டத்­த­ரணி தெரி­வித்தார்.

ஹொஉங்கைப் போன்று சித்­தியின் விரல் நகங்களில் நச்சு இரசாயனம் காணப்படவில்லை எனவும் அவரிடம் நஞ்சூட்டியமைக்கான அறிகுறிகள் தென்படவில்லை எனவும் தடயவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-Vidivlli

Leave A Reply

Your email address will not be published.