தமிழ்பேசும் மக்கள் ஒற்றுமைப்படின் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்

சம்மாந்துறையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டு

0 504

நாட்டின் அர­சி­யல்­போக்கு முஸ்­லிம்­களின் ஒற்­று­மை­யினால் மாற்­றி­ய­மைக்­கப்­பட முடியும். வட, கிழக்­கிலும் வெளி­யிலும் தமிழ்­பேசும் மக்கள் அனை­வரும் ஒற்­று­மைப்­பட்டால் சிறந்­த­தொரு அர­சியல் கலா­சா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் நகர திட்­ட­மிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

சம்­மாந்­து­றையில் நகர திட்­ட­மிடல் அமைச்சின் நிதி­யொ­துக்­கீட்டில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட கைகாட்டி சந்தி சிறுவர் பூங்கா, கல்­ல­ரிச்சல் வீதி மற்றும் சிறுவர் பூங்கா, அன்வர் இஸ்­மாயில் மாவத்தை காபட் வீதி ஆகி­ய­வற்றை திறந்து வைத்­த­பின்னர் நடை­பெற்ற பொதுக் கூட்­டத்தில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு உரை­யாற்­றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறி­ய­தா­வது;

இது தேர்தல் வரு­ட­மாகும். யார் விரும்­பி­னாலும் விரும்­பா­விட்­டாலும், நடக்­க­வி­ருக்கும் தேர்­தலை தாம­தப்­ப­டுத்­தி­னாலும் இந்த வருட இறு­தியில் ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கா­வது நாம் முகம்­கொ­டுக்க வேண்டும். இந்த தேர்தல் நாட்டின் அர­சி­ய­லையே தலை­கீ­ழாக மாற்­று­கின்ற தேர்­த­லாக இருக்கும். இதன்­போது மீண்டும் ஆட்­சியை தீர்­மா­னிக்­கின்ற சக்­தி­யாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இருக்கும். அதைத் தீர்­மா­னிப்­பது மக்­க­ளா­கிய நீங்­கள்தான்.

முஸ்லிம் கட்­சிகள் தேர்­தலில் பிரிந்­து­நின்று ஆச­னங்­களை வென்­றாலும், சமூகம் தோற்­றுப்­போ­கக்­கூ­டாது என்­பது எல்­லோ­ரு­டைய அடிப்­படை விருப்­ப­மாக இருக்­கி­றது. நாட்டின் அர­சி­யல்­போக்கு முஸ்­லிம்­களின் ஒற்­று­மை­யினால் மாற்­றி­ய­மைக்­கப்­பட முடியும். இதன்­போது தமிழ் மக்­களும் எங்­க­ளுடன் சேர்ந்­து­கொண்டால் இன்னும் ஒரு­படி மேலே செல்­லலாம்.

வட, கிழக்­கிலும் வெளி­யிலும் தமிழ்­பேசும் மக்கள் அனை­வரும் ஒற்­று­மைப்­பட்டால் சிறந்­த­தொரு அர­சியல் கலா­சா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும். ஆனால், இப்­போது சில்­லறைப் பிரச்­சி­னைகள் பல தலை­தூக்கத் தொடங்­கி­யுள்­ளன. அர­சி­யல்­வா­திகள் தனிப்­பட்ட ரீதியில் ஆவே­சப்­பட்டு பேசு­வ­தினால் இரு சமூ­கங்­களும் பிரிந்­து­வி­டக்­கூ­டாது.

இரு சமூ­கங்­களின் மத்­தி­யி­லுள்ள பிரச்­சி­னை­களை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் முஸ்லிம் காங்­கி­ரஸும் பேசித் தீர்த்­துக்­கொள்ள வேண்டும். அத­தை­வி­டுத்து தனிப்­பட்ட முறையில் யாரும் இந்தப் பிரச்­சி­னை­களை தீர்­வு­களை காண­மு­டி­யாது என்றார்.

சம்­மாந்­துறை பிர­தேச சபை உறுப்­பினர் எஸ்.நளீம் தலை­மையில் நடை­பெற்ற நிகழ்வில், பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  எம்.ஐ.எம். மன்சூர், சம்­மாந்­துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம். நௌசாட், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான ஐ.எல்.எம். மாஹிர், சிப்லி பாறூக், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ரஹ்மத் மன்சூர், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் சப்றாஸ், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.