பாகிஸ்தானும் இந்தியாவும் நெருக்கடி நிலையை சாதகமாகப் பயன்படுத்த வேண்டும்

சீனா வேண்டுகோள்

0 457

அண்­மையில் இந்­தியா மற்றும் பாகிஸ்­தா­னி­டையே ஏற்­பட்­டுள்ள முரண்­பாட்­டி­லி­ருந்து இரு நாடு­களும் தம்மை விடு­வித்­துக்­கொள்ள வேண்டும் என கடந்த வெள்­ளிக்­கி­ழமை சீனா இரு நாடு­க­ளி­டமும் வேண்­டுகோள் விடுத்­தது.

பீஜிங்கில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் பேசிய சீன வெளி­நாட்­ட­மைச்சர் வேங் இயி ‘புது­டில்­லியும் இஸ்­லா­மா­பாத்தும் விரை­வாக தமது புத்­த­கங்­களின் பக்­கங்­களைப் புரட்ட வேண்டும். தற்­போ­தைய பதற்­ற­மான சூழலை நீண்­ட­கால அபி­வி­ருத்­திக்கு ஏற்­ற­வாறு சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்’ எனத் தெரி­வித்­த­தாக இந்­தி­யாவின் பீ.ரீ.ஐ செய்தித் தாபனம் அறி­வித்­துள்­ளது.

பாகிஸ்­தானும் இந்­தி­யாவும் நெருக்­கடி நிலை­யினை சாத­க­மாகப் பயன்­ப­டுத்­திக்­கொள்ளும் எனவும் இரு நாடு­களும் இடை­ந­டுவில் சந்­தித்­துக்­கொள்ளும் என சீனா எதிர்­பார்ப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

சீனாவின் பிரதி வெளி­நாட்­ட­மைச்சர் கொங் ஸுவான்யூ இந்­தியா மற்றும் பாகிஸ்தான் நாடு­க­ளுக்­கி­டை­யே­யான பதற்­ற­நிலை தொடர்­பாக பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் மற்றும் இரா­ணுவத் தள­பதி ஜெனரல் கமர் ஜாவெட் பஜவா ஆகி­யோ­ருடன் கலந்­துரை­யா­டு­வ­தற்­காக பாகிஸ்­தா­னுக்கு விஜயம் செய்­த­தை­ய­டுத்தே சீன வெளி­நாட்­ட­மைச்­சரின் இக் கருத்து வெளி­யா­கி­யுள்­ளது.

கடந்த பெப்­ர­வரி 14 ஆம் திகதி வியா­ழக்­கி­ழ­மை­யன்று மத்­திய ரிசேவ் பொலிஸ் படை­யி­னரை ஏற்றிச் சென்ற பஸ் வண்­டி­யொன்றின் மீது வெடி­பொ­ருட்கள் நிரப்­பப்­பட்ட காரினை காஷ்மீர் கிளர்ச்­சிக்­கா­ரர்கள் கொண்டு சென்று மோதி தாக்­குதல் மேற்­கொண்­டதை அடுத்து இரு நாடு­க­ளுக்கும் இடை­யே­யான பதற்­ற­நிலை தீவி­ர­ம­டைந்­தது.

கடந்த பெப்­ர­வரி மாதம் 26 ஆந் திகதி பாகிஸ்­தானின் பகு­தியில் விமானத் தாக்­கு­தலை நடத்­திய இந்­தியா பெரும் எண்­ணிக்­கை­யி­லான ஜாயிஷ் – இ – மொஹம்மட் அமைப்­பினைச் சேர்ந்­த­வர்­களைக் கொன்­ற­தாக உரிமை கோரி­யது. பெப்­ர­வரி 14 ஆந் திகதி நடத்­தப்பட் தற்­கொலைத் தாகு­த­லுக்கு ஜாயிஷ் – இ – மொஹம்மட் அமைப்பே காரணம் என இந்­தியா குற்­றம்­சாட்டி வந்­தது.

எனினும், மறுநாள் காலை இதற்கு பதில் நட­வ­டிக்கை மேற்­கொண்ட பாகிஸ்தான் விமா­னப்­படை இந்­திய விமா­னப்­ப­டைக்குச் சொந்­த­மான இரு ஜெட் விமா­னங்­களைச் சுட்டு வீழ்த்­தி­ய­தோடு ஒரு விமா­னி­யையும் கைது செய்­தது. பின்னர் மார்ச் 01 ஆந் திகதி குறித்த இந்­திய விமானி சமா­தா­னத்­திற்­கான நல்­லெண்ண சமிக்ஞை­யாக இந்­தி­யா­வி டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டார்.

சீனா ஆரம்­பத்­தி­லி­ருந்தே பதற்ற­நிலை அதி­க­ரிக்­கா­தி­ருக்க வேண்­டி­யதன் அவ­சி­யத்­தையும், பேச்­சு­வார்த்­தைகள் மூலம் முரண்­பா­டுகள் தீர்க்­கப்­பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருவதாகவும், பீஜிங் இரு நாடுகளுக்கும் இடையே சமாதானத்திற்கான ஏற்பாட்டாளராக செயற்பட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே நாடுகளின் இறைமையும், ஆள்புல ஒருமைப்பாடும் மதிக்கப்பட வேண்டும் எனவும் சீன வெளிநாட்டமைச்சர் வலி யுறுத்தினார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.