புதிய பயங்­க­ர­வாத தடைச்­சட்ட யோச­னையை ஏற்க முடி­யாது

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்க வேண்டும் என்­கி­றது ம.வி.மு.

0 460

இனங்­க­ளுக்­கி­டையில் தற்­போது பிள­வு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ள பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­பட வேண்டும். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­திற்கு பதி­லாக புதிய பயங்­க­ர­வாத  தடுப்பு சட்ட மூலம் கொண்டு வரு­வ­தற்­கான யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால்  பயங்­க­ர­வாத  தடைச்­சட்­டத்­திற்கு அப்­பாற்­பட்ட பல விட­யங்கள் புதிய யோச­னையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. இதனை ஏற்றுக் கொள்­ள­மு­டி­யாது என  மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளிந்த ஜய­திஸ்ஸ தெரி­வித்தார்.

புதிய பயங்­க­ர­வாத தடைச்­சட்ட மூலத்தை தோற்­டிக்க மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர், பொது­ஜன பெர­மு­ன­வி­ன­ருடன் கை­கோர்த்­துள்­ள­தாக குறிப்­பி­டப்­படும் செய்தி தொடர்பில் வின­விய பொழுதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் உள்ளோம். இவ்­வி­ட­யத்தில் அர­சியல் விட­யங்­களை மையப்­ப­டுத்தி தீர்­மா­னங்­களை முன்­னெ­டுக்க முடி­யாது. இன்றும் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் இனங்­க­ளுக்­கி­டையில்  பிள­வு­களை ஏற்­ப­டுத்தும் ஒரு ஏற்­பா­டா­கவே காணப்­ப­டு­கின்­றது.

ஆகவே பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­ப­டு­வ­தற்கு நாங்கள் முழு­மை­யான ஆத­ரவு வழங்­குவோம். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­திற்கு பதி­லாக முன்­வைக்­கப்­பட்­டுள்ள புதிய பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தில் உள்­ள­டக்­கி­யுள்ள விட­யங்கள் தொழில் துறை­யி­ன­ரது உரி­மை­க­ளுக்கு பாதிப்­பினை ஏற்­ப­டுத்தும்.

அடிப்­படை உரி­மை­க­ளுக்­காக போராடும் மக்கள் புதிய பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­ப­டு­வ­தற்­கான வழி­மு­றைகள் இதனுள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.

ஆகவே  தற்­போது நடை­மு­றையில் உள்ள பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தினை விட புதிய பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் பார­தூ­ர­மா­னது. இந்த சட்­ட­மூ­லத்­திற்கு எதி­ராக செயற்­ப­டுவோம் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.