புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­ட­மூலம் ஆபத்­தா­னது

நாம் முற்­றாக நிரா­க­ரிக்­கிறோம் என்­கி­றது ம.வி.மு.

0 511

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தை­யும்­விட பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­ட­மூலம் ஆபத்­தா­ன­தாகும். இதன்­மூலம் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக எழக்­கூ­டிய அனைத்து சக்­தி­க­ளையும் அடக்­கு­வதே அர­சாங்­கத்தின் திட்­ட­மாகும். இதனை நாங்கள் முற்­றாக நிரா­க­ரிக்­கின்றோம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிர­சாரச் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜித ஹேரத் தெரி­வித்தார்.

அர­சாங்கம் பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­க­வி­ருக்கும் பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­ட­மூலம் தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நிலைப்­பாடு தொடர்­பாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

தற்­போது நாட்டில் யுத்தம் இல்லை. அதனால் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­ப­ட­வேண்டும். 1978ஆம் ஆண்டு இந்த சட்­டத்தை கொண்­டு­வ­ரும்­போது தற்­கா­லி­க­மாக என்று தெரி­வித்தே இது கொண்­டு­வ­ரப்­பட்­டது. ஆனால் பின்னர் நிலை­யான சட்­ட­மாக இருந்து வந்­தது. யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் அர­சாங்கம், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை திருத்தி அமைப்­ப­தாக  ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்­தது. அத­ன­டிப்­ப­டை­யிலே தற்­போது பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்கி பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­ட­மூலம் என்று புதிய சட்­ட­மொன்றை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த சட்­ட­மூலம் பாரா­ளு­மன்ற ஒழுங்குப்­பத்­தி­ரத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருக்­கின்­றது. இது தொடர்பில் இரண்­டுக்கும் மேற்­பட்ட தட­வைகள் கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருக்­கின்­றன. அர­சாங்கம் முன்­வைத்­துள்ள இந்த சட்­ட­மூ­ல­மா­னது பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தையும் பார்க்க பயங்­க­ர­மா­ன­தாகும். பயங்­க­ர­வாதம் தொடர்பில் இந்த சட்­ட­மூ­லத்தில் பல அத்­தி­யா­யங்­களில் அர்த்தம் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அதன் பிர­காரம் எதிர்­கா­லத்தில் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக தொழிற்­சங்­கங்­க­ளுக்கு கூட வீதிக்கு இறங்­க­மு­டி­யாத நிலை ஏற்­படும்.

அத்­துடன் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் பாது­காப்பு அமைச்­சுக்கு கீழே இருந்து வரு­கின்­றது. ஆனால் தற்­போது இந்தப் புதிய சட்­ட­மூ­லத்தை வெளி­வி­வ­கார அமைச்சே கொண்­டு­வந்­துள்­ளது. இதன்­மூலம் அர­சாங்­கத்தின் நோக்கம் தெளிவாகின்றது. அரசாங்கத்துக்கு எதிராக செயற்படக்கூடிய அனைத்து போராட்டங்களையும் அடக்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும். இதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இந்த சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டால் எமது எதிர்பை தெரிவிப்போம் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.