பாட­சாலை கூட்­டு­றவுச் சங்­கங்கள் மாண­வர்­களின் ஆற்­றலை பெருக்கும்

அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் தெரி­விப்பு

0 636

பாட­சாலைக் கூட்­டு­ற­வுச்­சங்­கங்கள் மாண­வர்­களின் தலை­மைத்­துவ ஆற்­றலை பெருக்­கு­வ­தோடு எதிர்­காலத் திட்­ட­மி­ட­லுக்கும்  வழி­வ­குக்­கு­மென தான் நம்­பு­வ­தாக கைத்­தொழில், வணி­கத்­துறை, நீண்­ட­கால இடம்­பெ­யர்­வுக்­குள்­ளான மக்­களின் மீள்­கு­டி­யற்றம் மற்றும்  கூட்­டு­ற­வுத்­துறை அமைச்சர் றிசாத் பதி­யுதீன்  தெரி­வித்தார்.

கூட்­டு­ற­வுச்­சங்­கத்­திற்­கான (Coop Shop) விற்­பனை நிலையத்­திற்கு நிதி­யு­தவி மற்றும் உப­க­ர­ணங்கள் வழங்கும் (நென சக்தி) நிகழ்வு நேற்று கொழும்பு 2இல் உள்ள ச.தொ.ச. தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­ற­போது அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் பிர­தம விருந்­தி­ன­ராகக் கலந்­து­கொண்டு  உரை­யாற்­றினார்.

நாட்­டி­லுள்ள சிங்­கள, தமிழ், முஸ்லிம் பாட­சா­லைகள் உள்­ள­டங்­கிய 14 தேசிய பாட­சா­லை­களின் கூட்­டு­றவுச் சங்­கங்­க­ளுக்கு தலா 05 இலட்சம் ரூபா வீதம் இந்த நிதி­யு­தவி வழங்­கப்­பட்­டது. இந்­நி­கழ்வில் அமைச்சின் செய­லாளர் ரஞ்சித் அசோக்க, மேல­திக செய­லாளர் சமான், கூட்­டு­றவு பதில் ஆணை­யா­ளரும் மேல­திக செய­லா­ள­ரு­மான எஸ்.எல். நசீர், இளைஞர் வலு­வூட்டல் கூட்­டு­றவு அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம். ரியாஸ், அமைச்­சரின் இணைப்புச் செய­லாளர் இர்சாத் ரஹ்­ம­துல்லாஹ், கிழக்கு மாகாண கூட்­டு­றவு ஆணை­யாளர் சரீப் உட்­பட ச.தொ.ச. நிறு­வன அதி­கா­ரிகள், பாட­சாலை அதி­பர்கள் , ஆசி­ரி­யர்கள் மற்றும் மாண­வர்கள் கலந்­து­கொண்­டனர். தேசத்தின் சிறு­வர்­களின் அறி­வாற்­றலை ஒளி­ம­ய­மாக்கும் இந்த செயற்­றி­ட்டம் இன்று முதன் முறை­யாக ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது.

அமைச்சர் இங்கு உரை­யாற்றும் போது கூறி­ய­தா­வது;

”தேசிய பாட­சா­லை­களில் அமுல்­ப­டுத்­தப்­படும் இந்த திட்டம் எதிர்­கா­லத்தில் மாகாண பாட­சா­லை­க­ளுக்கு விஸ்­த­ரிக்­கப்­படும். இந்த திட்­டத்தின் மூலம் மாண­வர்­களை கூட்­டு­ற­வுத்­து­றையில் ஈடு­பட வைத்து கூட்­டு­ற­வுத்­துறை தொடர்­பான அறி­வையும், ஆற்­ற­லையும் பெருக்­கு­வதே இதன்  பிர­தான நோக்­க­மாக உள்ள போதும், எதிர்­கா­லத்தில் இந்த மாண­வர்கள் கூட்­டு­ற­வுத்­து­றைக்கு ஆக்­க­பூர்­வ­மான பங்­க­ளிப்பை நல்கும் மற்­றொரு நோக்­கையும் கொண்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. கூட்­டு­ற­வுத்­துறை சார்ந்த அறி­வுத்­தி­றனை பாட­சா­லை­களில் அடித்­தளம் இடு­வ­தற்கு இவ்­வா­றான திட்­டங்கள் பெரிதும் துணை­பு­ரியும் என நம்­பு­கின்றோம். இந்த திட்­டத்தில் சிங்­கள, தமிழ், முஸ்லிம் பாட­சா­லைகள் உள்­வாங்­கப்­பட்­டி­ருப்­பது சிறப்­பா­னது. தனியார் துறை­யுடன் கூட்­டு­ற­வுத்­துறை போட்­டி­யிட்டு  சமூக பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கான கரு­வி­யாக இந்­த­து­றையை மாற்­று­வ­தற்கு பாட­சாலை கூட்­டு­றவுச் சங்­கங்கள் அடித்­தளம் இடு­கின்­றது.

சர்­வ­தேச நாடு­களில் கூட்­டு­றவுச் சங்­கங்கள் வளர்ச்சிபெற்ற அளவுக்கு இலங்கையில் கூட்டுறவுத்துறை விருத்தியடையாமைக்கு பிரதான காரணம் இந்த துறையில் இளைஞர்களின் பங்களிப்பு மிக அரிதாகக் காணப்படுவதே.  எனவே இந்த துறையை பலம்வாய்ந்த துறையாக மாற்றியமைக்கும் வகையில், புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வருகின்றோம்.” இவ்வாறு அமைச்சர் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.