எவன்கார்ட் நிறுவனம் ஊடாக அரசுக்கு 1140 கோடி ரூபா நட்டம்

கோத்தா உள்ளிட்ட எண்மருக்கு எதிரான வழக்கு ஏப்ரல் 29 வரை ஒத்திவைப்பு

0 491

எவன்கார்ட் நிறு­வ­னத்­துக்கு மிதக்கும் ஆயுதக் களஞ்­சி­யத்தை முன்­னெ­டுத்­துச்­செல்ல அனு­ம­தி­ய­ளித்­ததன் ஊடாக அர­சாங்­கத்­துக்கு 1140 கோடி ரூபா நட்­டதை ஏற்­ப­டுத்­தி­ய­தாக முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜபக் ஷ உள்­ளிட்ட 8 பேருக்கு எதி­ராக இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு தொடர்ந்­துள்ள வழக்கு விசா­ர­ணை­களை எதிர்­வரும் ஏப்ரல் 29 ஆம் திக­தி­வரை  கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றம் ஒத்­தி­வைத்­தது.  கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்ன இதனை இவ்­வாறு ஒத்­தி­வைத்தார்.

இந்த வழக்கு தொடர்பில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றினால் இடைக்­கால தடை உத்­த­ர­வொன்று அமு­லி­லுள்ள நிலையில், உயர் நீதி­மன்றின் உத்­த­ர­வொன்று கிடைக்­கும்­வரை இவ்­வாறு குறித்த மனு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

எவன்கார்ட் விவ­கா­ரத்தில் அர­சுக்கு 1140 கோடி ரூபா நட்­ட­மேற்­ப­டுத்­தி­யமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு 19 குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ்,  கொழும்பு பிர­தான நீதிவான் முன்­னி­லையில் கோத்­தா­பய ராஜபக் ஷ உள்­ளிட்ட 8 பேருக்கு எதி­ராக வழக்கு தொடர்ந்­துள்­ளது.

கோத்­தா­பய ராஜபக் ஷ, முன்னாள் மேல­திக பாது­க­பு செயலர் சுஜாதா தம­யந்தி ஜய­ரத்ன,  இரா­ணு­வத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல் வடுகே பாலித பிய­சிறி பெர்­னாண்டோ, கரு­ணா­ரத்ன பண்டா எகொ­ட­வல,  முன்னாள் கடற்­படை தள­பதி அட்­மிரல் சோம­தி­லக திஸா­நா­யக்க, எவன்கார்ட் நிறு­வன தலைவர் மேஜர் நிசங்க சேனா­தி­பதி, முன்னாள் கடற்­படை தள­பதி  அட்­மிரல் ஜயநாத் குமா­ர­சிறி கொலம்­பகே,  முன்னாள் கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் பிரான்சிஸ் டயஸ் ஜய­ரத்ன பெரேரா ஆகி­யோ­ருக்கு எதி­ரா­கவே இந்த வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி முதல் 2015 ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் கொழும்பில் எவன்கார்ட் மெரிடைம்ஸ் சேர்­விசஸ் தனியார் நிறு­வ­னத்­துக்கு, மித­மிஞ்­சிய சலுகை, சட்ட விரோ­த­மான பிரதிபலன் அல்­லது அனு­ச­ரணை அல்­லது அனு­கூலம் ஒன்­றினை பெற்­றுக்­கொ­டுப்­பதை நோக்கக் கொண்டு அல்­லது அவ்­வாறு இடம்­பெ­று­மென அறிந்­தி­ருந்தும்  குறித்த நிறு­வ­னத்­துக்கு மிதக்கும் ஆயுதக் களஞ்­சி­யத்தை அமைக்க அனு­மதி கொடுத்ததன் ஊடாக ஊழல் எனும் குற்றத்தை புரிந்தமை, அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களே இந்த 8 பேருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.