மாகாண தேர்தலை நடத்த அரசியல்வாதிகளே தடை

பெப்ரல் அமைப்பு குற்றச்சாட்டு

0 541

மாகா­ண­சபைத் தேர்­தலை நடாத்­து­வ­தற்கு உள்ள ஒரே தடை அர­சி­யல்­வா­தி­க­ளாவர். தேர்­தலை நடாத்­து­வ­தற்கு அர­சியல் ரீதி­யான தீர்­வொன்றே தேவை. அர­சி­யல்­வா­திகள் சரி­யான தீர்­மானம் ஒன்­றுக்கு வரு­வார்கள் என்றால் எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்த முடியும் என பெப்ரல் அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் ரோஹன ஹெட்டி ஆரச்சி தெரி­வித்தார். மாகா­ண­சபை தேர்தல் தொடர்ந்து கால­தா­ம­தப்­ப­டுத்­தப்­ப­டு­வது தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,

மாகா­ண­சபைத் தேர்தல் புதிய தேர்தல் முறையின் கீழ் நடாத்­தப்­பட வேண்­டு­மென்றால் எல்லை நிர்­ணய மீளாய்வுக் குழுவின் அறிக்கை வர்த்­த­மானி அறி­வித்­தலில் பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். புதிய முறையில் தேர்தல் நடாத்­தப்­ப­டு­வ­தற்கு இதுவே தடை­யாக உள்­ளது. இந்­நி­லையில் பழைய முறை­மையின் கீழ் தேர்தல் நடாத்­தப்­பட வேண்­டு­மென்றால் பாரா­ளு­மன்­றத்தில் இதற்­கென சட்­ட­மொன்று அங்­கீ­க­ரித்துக் கொள்­ளப்­பட வேண்டும். அவ்­வா­றென்றால் எது­வித தடை­க­ளு­மின்றி பழைய முறையில் தேர்தல் நடாத்­தப்­ப­டலாம்.

பழைய முறை­மையின் கீழ் தேர்­தலை நடாத்­து­வ­தற்கே எல்­லோரும் விரும்­பு­கின்­றனர். அதனால் 2/3 பெரும்­பான்­மை­யுடன் பாரா­ளு­மன்­றத்தில் அதற்­கான சட்­டத்தை அங்­கீ­க­ரித்துக் கொள்­ள­மு­டியும். ஐக்­கிய தேசியக் கட்சி மாகா­ண­சபைத் தேர்தல் நடாத்­தப்­பட வேண்­டு­மென தொடர்ச்­சி­யாகக் கூறி­வ­ரு­கி­றது. ஜனா­தி­ப­தியும், எதிர்க்­கட்­சி­யி­னரும் தேர்தல் நடாத்­தப்­பட வேண்­டு­மென மேடை­களில் தெரி­வித்து வரு­கி­றார்கள் என்­றாலும் இவர்கள் மாகா­ண­சபைத் தேர்­தலை விரை­வு­ப­டுத்­து­வ­தாகத் தெரி­ய­வில்லை. அர­சியல் அதி­கா­ரத்தில் உள்­ள­வர்கள் பல்­வேறு கருத்­து­களைத் தெரி­விக்­கி­றார்கள். ஒரு­சாரார் முதலில் ஜனா­தி­பதி தேர்தல் நடத்­தப்­பட வேண்­டு­மென்­கி­றார்கள். மற்­று­மொ­ரு­சாரார் மாகா­ண­சபைத் தேர்­த­லொன்றே முதலில் நடத்­தப்­பட வேண்டும் என்­கி­றார்கள்.

ஓய்­வு­பெற்றுச் செல்ல வேண்­டிய அர­சி­யல்­வா­திகள் எத்­தனை பேர் இருக்­கி­றார்கள். அவர்கள் சட்­ட­மி­யற்றும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­ப­வர்­க­ளாக இல்லை. தேர்­தல்­க­ளுக்­கான கால அட்­ட­வ­ணை­யொன்று எமது நாட்டில் இருக்­கி­றது. மாகா­ண­ச­பை­களின் தேர்­தல்கள் ஒரே நாளில் ஒன்­றாக நடத்­தப்­ப­ட­வேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.