கிழக்கு மாகாண காணி பிரச்சினைக்கு 3 மாத காலத்தில் தீர்வு

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய உயர்மட்ட குழு நியமிப்பு என்கிறார் கிழக்கு மாகாண ஆளுநர்

0 552

கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள காணிப் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்ளேன். ஜனா­தி­ப­தியின் ஆலோ­ச­னையைப் பெற்று ஓர் உயர்­மட்டக் குழு­வையும் நிய­மித்­துள்ளேன். மக்­களின் காணியை விடு­விப்­ப­தற்­காக அக்­கு­ழு­வுக்கு முழு அதி­கா­ரத்­தையும் வழங்­கி­யுள்ளேன். மூன்று மாத காலத்­திற்குள் சகல காணிப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வு­களைக் காண நட­வ­டிக்கை எடுத்­துள்ளேன். எதிர்­வரும் 15ஆம் திகதி அம்­பா­றையில் முத­லா­வது கூட்­டத்தை நடத்­த­வுள்ளோம் என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

நிந்­தவூர் அல்–-மஸ்ஹர் பெண்கள் உயர்­தரப் பாட­சா­லையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐக்­கிய அமெ­ரிக்க பசுபிக் கட்­டளை மையத்­தினால் சுமார் ரூபா 7 கோடி நிதியில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட 12 வகுப்­ப­றை­களைக் கொண்ட 3 மாடிக் கட்­டிடத் தொகுதி திறப்பு விழாவில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அனர்த்த முகா­மைத்­துவத் திட்­டத்தின் கீழ் கட்­டப்­பட்ட இம்­மூன்று மாடிக் கட்­டி­டத்­தோடு, நவீன வச­தி­களைக் கொண்ட சமை­ய­லறைத் தொகு­தியும், மல­ச­ல­கூடத் தொகு­தியும் திறந்து வைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

பாட­சா­லையின் அதிபர் ஏ.எல்.நிஸா­முத்தீன் தலை­மையில் நடை­பெற்ற இவ்­வி­ழாவில் கிழக்கு ஆளுநர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

கிழக்கு மாகாணம் கல்வி, பொரு­ளா­தாரம் உட்­பட எல்­லாத்­து­றை­க­ளிலும் பின்­தங்­கிய நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது. இம்­மா­கா­ணத்தை நாம் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மானால் இனம், மொழி, பிர­தேச வேறு­பா­டு­க­ளி­லி­ருந்து விடு­பட்டு ஒற்­று­மைப்­ப­டுதல் வேண்டும்.

கிழக்கு மாகாணம் யுத்­தத்­தி­னாலும்,  இன­மு­ரண்­பா­டு­க­ளி­னாலும் இயற்கை அனர்த்­தத்­தி­னாலும் பாதிக்­கப்­பட்ட ஒரு பிர­தே­ச­மாகும்.  யுத்­தத்­தினால் மூவின மக்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். நான் யுத்­தத்தின் தாக்­கங்­களை நேர­டி­யாக அனு­ப­வித்­தவன். அதன் துன்பம், துய­ரங்­களை அனு­ப­வித்­தவன். கிழக்கு மாகா­ணத்தை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய பொறுப்பு நம் எல்­லோ­ருக்கும் இருக்­கின்­றது. இதற்­கா­கவே ஜனா­தி­பதி ஒரு வருட காலத்­திற்கு ஆளுநர் பத­வியை எனக்கு வழங்­கி­யுள்ளார். ஆகவே, நாம் இன, மத, மொழி வேறு­பா­டு­க­ளின்றி ஒற்­று­மை­யுடன் செயற்­பட வேண்டும். நாங்கள் அர­சியல் ரீதி­யா­கவும், இன ரீதி­யா­கவும், பிர­தேச ரீதி­யா­கவும், மொழி ரீதி­யா­கவும் முரண்­பட்டு எதிர்ப்­புக்­களைக் காட்­டினால் கிழக்கு மாகா­ணத்தை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய இலக்கை அடைய முடி­யாது.

ஆளுநர் என்­பது கொழும்­பிலே இருந்து வந்து ஒரு உல்­லாச வாழ்க்­கையை வாழ்­கின்­ற­தொரு பத­வி­யா­கவே இருந்து வந்­துள்­ளது. அப்­ப­டி­யில்­லாமல் இம்­மா­கா­ணத்­தி­லுள்ள உண்­மை­யான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களைக் காண வேண்­டு­மென்று ஆசைப்­ப­டு­கின்றேன்.  இன முரண்­பா­டுகள் களை­யப்­பட வேண்­டு­மென்று ஆசைப்­ப­டு­கின்றேன்.

கிழக்கு மாகா­ணத்தில் காணிப் பிரச்­சினை வெகு­வாகக் காணப்­ப­டு­கின்­றது. சுகா­தாரப் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. எங்­களின் வாழ்­வா­தா­ரத்­திலும் பல பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. அதிலும், அம்­பாறை மாவட்­டத்தில் அதி­க­ளவு காணிப் பிரச்­சினை காணப்­ப­டு­கின்­றது. வன இலாகா என்றும், தொல்­பொருள் என்றும் காணிகள் பறிக்­கப்­பட்­டுள்­ளன. இவற்­றுக்கு நாம் தீர்­வு­காண வேண்டும். கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள காணிப் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்ளேன். ஜனா­தி­ப­தியின் ஆலோ­ச­னையைப் பெற்று ஓர் உயர்­மட்ட குழு­வையும் நிய­மித்­துள்ளேன். மக்­களின் காணியை விடு­விப்­ப­தற்­காக அக்­கு­ழு­வுக்கு முழு அதி­கா­ரத்­தையும் வழங்­கி­யுள்ளேன். மூன்று மாத காலத்­திற்குள் சகல காணிப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வு­களை காண நட­வ­டிக்கை எடுத்­துள்ளேன். எதிர்­வரும் 15ஆம் திகதி அம்­பா­றையில் முத­லா­வது கூட்­டத்தை நடத்­த­வுள்ளோம்.

கிழக்கு மாகாணம் கல்­வி­யிலும், பொரு­ளா­தா­ரத்­திலும், சுகா­தா­ரத்­து­றை­யிலும் ஒன்­ப­தா­வது இடத்தில் இருக்­கின்­றது. கிழக்கு மாகாணம் மதுக்­குடிப் பழக்­கத்தில் முத­லா­வது இடத்தில் இருக்­கின்­றது. 22 மாவட்­டங்­களில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தில்தான் அதி­க­ளவு மதுக்­குடிப் பழக்­கத்­தை­யு­டைய மக்கள் காணப்­ப­டு­கின்­றார்கள்.

கல்­வியை பொறுத்­த­வரை சில பாட­சா­லை­களில் அதி­க­மான ஆசி­ரி­யர்கள் இருக்­கின்­றார்கள். அதே வேளை, முக்­கி­ய­மான சில பாடங்­க­ளுக்கு போதிய ஆசி­ரி­யர்கள் இல்­லாத நிலையும் காணப்­ப­டு­கின்­றது. அத்­த­கைய பாடங்­களில் ஏற்­படும் பின்­ன­டைவு கார­ண­மாக முழு மாகா­ணமும் பாதிப்­ப­டை­கின்­றது. ஒரு­சில வல­யங்கள் மிகவும் பின்­தங்­கிய நிலையில் காணப்­ப­டு­கின்­றன. கிழக்கு மாகாணம் ஏன் ஒன்­ப­தா­வது இடத்தில் இருக்­கின்­ற­தென்று நாம் ஆராய்ந்தோம். அதன்­போது, கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து ஒரு வல­யத்தை நீக்­கி­விட்டால் நாங்கள் ஐந்­தா­வது இடத்­திற்கு வர­லா­மென்று தெரி­விக்­கப்­பட்­டது. இதனால், அந்த வல­யத்தில் விசேட கவனம் செலுத்­து­மாறு பணித்­துள்ளேன். தேவை­யான வளங்­களை வழங்­காமல் அந்த வல­யத்தை குறை­சொல்ல முடி­யாது. எந்­த­வொரு பாட­சா­லை­யையும் குறை­சொல்ல முடி­யாது.   இவற்­றுக்­கெல்லாம் 2020ஆம் ஆண்டு தீர்வு காண வேண்­டிய கட்­டாயம் உள்­ளது.

இத்­தி­றப்பு விழாவில் இலங்கை மற்றும் மாலை­தீவு நாடு­க­ளுக்­கான அமெ­ரிக்க தூது­வ­ரா­ல­யத்தின்  அர­சியல் பிரிவு தலைவர் அன்டனி எப். ரென்சூலி (Anthony F Renzulli), சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் சிவில் பாதுகாப்பு கட்டளை மையத்தின் பணிப்பாளர் டெர்ரி ஜோன்சன் (Terry A Jhonson),  கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், நிந்தவூர் கோட்டக் கல்வியதிகாரி யூ.எல்.எம்.சாஜித் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.