திசை ­தி­ருப்பப்­படும் மக்­களின் அர­சியல் உணர்­வு­கள்

0 241

மே தினத்தை முன்­னிட்டு நாட்டின் தேசிய கட்­சிகள் ஏற்­பாடு செய்த பாரிய பேர­ணி­களும் கூட்­டங்­களும் நேற்­றைய தினம் கொழும்பை ஸ்தம்­பிக்கச் செய்­தி­ருந்­தன.

கடந்த சில வரு­டங்­க­ளாக சோபை­யி­ழந்­திருந்த மே தின நிகழ்­வுகள் இவ்­வரும் களை கட்­ட­டி­­ய­மைக்கான காரணம் இந்த ஆண்டு நடை­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டும் தேர்­த­லாகும்.

நடக்கப் போவது ஜனா­தி­பதித் தேர்­தலா அல்­லது பாரா­ளு­­மன்றத் தேர்­தலா என்­பது இது­வரை உறுதி செய்யப்­ப­டா­விட்­டாலும் முதலில் ஜனா­தி­பதி தேர்­தலே நடை­பெறும் என அர­சியல் வட்­டா­ரங்­கள் எதிர்வு கூறு­கின்­ற­ன.
இப் பின்­ன­ணி­யில்தான் ஐக்­கிய தேசியக் கட்சி, ஐக்­கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் பொது ஜன பெர­­முன ஆகிய கட்­சிகள் தமது பலத்தையும் மக்கள் ஆத­ர­வை­யும் காண்­பிப்­ப­தற்­கான தரு­ண­­மாக இதனைப் பய­ன்­ப­டுத்திக் கொண்­டன.

மே தினப் பேர­ணிக்கு வரும் மக்­களைக் கொண்டு அர­சியல் ஆத­ரவைக் கணிப்­பி­டு­வது பொருத்­­த­மில்லை என்ற போதிலும் நாட்டில் சமீப கால­மாக ஏற்­பட்­டுள்ள அர­சியல் தொடர்­பான விழிப்­பு­ணர்வு நேற்­றைய பேர­ணி­களில் வெளிப்­பட்­டதா என்ற கேள்­விக்கு விடை காண முடி­­யா­துள்­ள­து. எப்­ப­டி­யி­ருப்­பினும் இலங்­கையைப் பொறுத்­த­வரை மக்­களின் மன­மாற்­றத்தை ஒரு­போதும் எதிர்வு கூற முடி­யா­து.

கடந்த இரு வரு­டங்­களில் மக்கள் மத்­தியில் ஏற்­பட்ட அர­சியல் விழிப்­பு­ணர்வு தேர்­தலில் வாக்­க­ளிக்கும் வரை தாக்குப் பிடிக்­குமா அல்­லது தமது அர­சியல் மாயா­ஜா­லங்கள் மூலம் வழக்­க­மான சாக்­கடை அர­சி­ய­லுக்குள் மக்கள் தள்­ளப்­ப­டுவார்­களா என்ற கவலை தற்­போது எழத் தொடங்­கி­யுள்­ள­து.
அர­சாங்­கத்தின் விலைக்­ கு­றைப்­புகள் சலு­கைகள் மற்றும் ஊழல் அர­சி­யல் கட்­சி­களின் பொய் வாக்­கு­று­தி­களில் மயங்­குண்டு மக்கள் தமது அர­சியல் விழிப்­பு­ணர்­வி­லி­ருந்து திசை திருப்­பப்­ப­டு­வார்­க­ளாயின் அது மீண்டும் இந்த நாட்டை படு­கு­ழி­யி­லேயே தள்ள வழி­வ­குக்கும்.

அந்த வகையில் மக்­களை அர­சியல் ரீதி­யாக விழிப்­பு­ணர்­வூட்ட வேண்­டிய தேவை முன்­னரைவிட தற்­போது வெகு­வாக எழுந்­துள்­ளது. 2022 ஆம் ஆண்டு ஊழல் அர­சி­யல்­­வா­தி­க­ளுக்கு எதி­ராக மக்கள் வீதிக்கு இறங்கிப் போரா­டினர். குடும்ப ஆட்­சிக்கு இட­ம­ளிக்­க­மாட்டோம் என ஆக்­ரோ­ஷ­மாக கருத்­து­ரைத்­தனர். எனினும் இன்று அந்த நிலை­மையைக் காண முடி­ய­வில்லை.

என­வேதான் மோசடி ஆட்­சி­யா­ளர்கள் மக்­களை திசை திருப்புவதற்கு நேற்­றைய மே தினத்­தி­லி­ருந்து தயா­ரா­கி­விட்­டனர். இது மீண்டும் மக்கள் வழக்­க­மான சாக்­கடை அர­சி­யலின் பின்­னா­லேயே அள்­ளுண்டு செல்­லப் போகின்­றனர் என்­ப­தையே காண்­பிப்­ப­தாக உள்­ளது.

மக்­களை அரசியல் ரீதியாக அறி­வூட்­டு­வ­தற்­கான தேவை மீண்டும் எழுந்­துள்­ளது. அதே­போன்று தகு­தி­யான அர­சி­ய­ல்­வா­தி­களை இனங்­கண்டு எதிர்­வரும் தேர்­தல்­களில் கள­மி­றக்க வேண்­டி­ய அவ­சி­யத்தை இது உணர்த்­து­கி­றது. இது தொடர்பில் நேர்­மை­யான அர­சியல் ஆர்வ­­லர்­களும் சிவில் செயற்­பாட்­டா­ளர்­களும் கவனம் செலுத்த வேண்டும். மக்­களின் அர­சியல் விழிப்­பு­ணர்வை மழுங்­க­டிக்கச் செய்து மீண்­­டும் மோசடி ஆட்­சி­யா­ளர்­க­ள்பின்னால் செல்ல அனு­ம­திக்கக் கூடாது. நாட்டில் அர­சியல் கலாசா­ரத்தில் மாற்றம் ஒன்று ஏற்­பட அனை­வரும் இணைந்து செயற்­பட வேண்டும். அதுவே காலத்தின் தேவை­யு­மாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.