தடைப்பட்டுள்ள அரச திட்டங்களை முன்னெடுக்கவே தேசிய அரசாங்கம்

அமைச்சர் அகிலவிராஜ்

0 494

சுதந்­திர கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தி­ருந்த போது செயற்­பட்ட அமைச்­சுக்கள் சில தற்­போது நீக்­கப்­பட்­டுள்­ள­மையால் அவற்­றினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட வேலைத்­திட்­டங்­களும் தடைப்­பட்­டுள்­ளன. அவ்­வாறு அவற்றைக் கைவிட முடி­யாது. எனவே தான் தேசிய அர­சாங்­கத்தை அமைத்து அமைச்­ச­ர­வையின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க தீர்­மா­னித்­துள்ளோம் என ஐக்­கிய தேசிய கட்­சியின் பொதுச் செய­லாளர் கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் ஊட­கங்­க­ளுக்கு தெரி­விக்­கையில்,  அர­சாங்­கத்தை பல­மா­ன­தாக்கி நாட்டை முன்­னோக்கி கொண்டு செல்­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் 113 பெரும்­பான்­மை­யுடன் நாம் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்றோம். அபி­வி­ருத்தி தொடர்­பா­கவும் ஏனைய விட­யங்கள் தொடர்­பா­கவும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு அந்தப் பலம் மேலும் அவ­சி­ய­மா­கின்­றது. எனினும் நாம் பழைய தேசிய அர­சாங்­கத்தைப் போன்று தற்­போ­தைய தேசிய அர­சாங்­கத்தை அமைக்­கப்­போ­வ­தில்லை.

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் சிலர் எம்­முடன் இணைந்­துள்­ளனர். அதே வேளை அமைச்­ச­ரவை எண்­ணிக்­கை­யா­னது 48 இலி­ருந்து 30 ஆக மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இவர்­களில் கடந்த முறை அமைச்­சுக்­க­ளி­னூ­டாக பல்­வேறு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­த­வர்­க­ளுக்கு தற்­போது அமைச்சு பதவி கிடைக்கப் பெறா­ம­லுள்­ளது.

தேசிய அர­சாங்­கத்தை அர­சி­ய­ல­மைப்­பிற்­கூ­டா­கவே அமைக்க வேண்டும். குறிப்­பாக கடந்த நான்கு வருட கால­மாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் ஐக்­கிய தேசிய கட்சி இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தி­ருந்­தது. எனினும் அதனைத் தொடர்ந்து கொண்டு செல்ல முடி­யாத நிலைமை ஏற்­பட்­டது.

அத்­தோடு முன்னர் இருந்த சில அமைச்­சுக்கள் தற்­போது நீக்­கப்­பட்­டுள்­ளன. இதன் கார­ண­மாக அவ்­வாறு நீக்­கப்­பட்­டுள்ள சில அமைச்­சுக்­களின் மூலம் முன்­னெ­டுக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகள் தடைப்­பட்­டுள்­ளன. கடந்த நான்கு வருட கால­மாக முன்னெடுக்கப்பட்டு வந்த வேலைத்திட்டங்களை சில மாதங்களே எஞ்சியுள்ளதெனக் கூறி கைவிட முடியாது. எனவே தான் இவ்வாறான அமைச்சுக்களை மீண்டும் உள்வாங்குவதற்கு அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானித்துள்ளோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.