அளுத்கம, பேருவளை வன்முறைகளை 1915 கலவரத்துடன் ஒப்பிட்ட நீதியரசர்

5 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான வாதங்கள் ஆரம்பம்

0 83

எப்.அய்னா

அளுத்­கம வர்த்­தக நகரை மையப்­ப­டுத்தி அளுத்­கம, பேரு­வளை உள்­ளிட்ட பொலிஸ் பிரி­வு­களில் பதி­வான இன­வாத வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்பில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள ஐந்து அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் மீதான வாதங்கள் கடந்த திங்கட் கிழமை (26) ஆரம்­ப­மா­னது.

கடந்த 2014 ஆம் ஆண்டு தாக்கல் செய்­யப்­பட்ட எஸ்.சி.எப்.ஆர். 203/2014, எஸ்.சி.எப்.ஆர். 204/2014, எஸ்.சி.எப்.ஆர். 205/2014, எஸ்.சி.எப்.ஆர். 207/2014, எஸ்.சி.எப்.ஆர். 203/2014, எஸ்.சி.எப்.ஆர். 214/ 2014 ஆகிய ஐந்து அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களும் உயர் நீதி­மன்றின் 503 ஆம் இலக்க அறையில், விசா­ர­ணைக்கு வந்­தது. வாதங்கள் இடம்­பெறும் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், நீதி­ய­ரசர் யசந்த கோதா­கொட தலை­மை­யி­லான ஏ.எச்.எம்.டி. நவாஸ், மஹிந்த சம­ய­வர்­தன ஆகியோர் அடங்­கிய நீதி­ய­ர­சர்கள் குழாம் முன்­னி­லையில் குறித்த மனுக்கள் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டி­ருந்­தன.
இம்­ம­னுக்கள் தொடர்பில் மனு­தா­ரர்கள் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜெப்ரி அழ­க­ரத்னம், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், சட்­டத்­த­ரணி புலஸ்தி ஹேவ­மான்ன உள்­ளிட்­ட­வர்கள் ஆஜ­ரா­கின்­றனர்.

மனுக்கள் மீதான விசா­ர­ணையின் ஆரம்ப வாத­மாக சட்­டத்­த­ரணி புலஸ்தி ஹேவ­மான்ன மன்றில் வாதங்­களை முன் வைத்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி அளுத்­கம வன்­மு­றை­க­ளுக்கு முன்னர் அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் சுமார் ஒரு மணி நேரமும் 15 நிமி­டங்­களும் ஆற்­றிய உரை (அப­ச­ரண உரை என அறி­யப்­படும் உரை) ஏற்­க­னவே உயர் நீதி­மன்றில் காணொ­ளி­யாக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், கடந்த திங்­க­ளன்று அக்­கா­ணொ­ளியின் திரை வசன அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்டு அதனை மையப்­ப­டுத்தி முழு சம்­ப­வத்­தையும் மன்­றுக்கு விளக்­கினார்.

அதன்­படி இக்­கூட்டம் தொடர்பில் முன் கூட்­டியே அர­சாங்­கத்­துக்கு தகவல் கிடைத்­தி­ருந்தும் அக்­கூட்­டத்தை நடாத்த அனு­ம­தி­ய­ளித்து, பொலிஸ் கட்­டளைச் சட்­டத்தை சரி­வர அமுல் செய்ய பொலிஸார் தவ­றி­யுள்­ள­தா­கவும் இதன்­போது மன்றில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. பொலி­ஸாரும் அர­சாங்­கமும் தமது பொறுப்­புக்­களை சரி­வர அமுல் செய்ய தவ­றி­ய­தா­கவும் அதன் விளைவே அளுத்­கம மற்றும் அதனை அண்­மித்த முஸ்லிம் கிரா­மங்கள் மீதான அத்­து­மீ­றிய தாக்­குதல் எனவும் மன்றில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.
இதன்­போது நீதி­ய­ர­சர்கள் குழாமின் தலைமை நீதி­ப­தி­யாக இருந்த நீதி­ய­ரசர் யசந்த கோதா­கொட, இந்த சம்­ப­வத்­துடன் 1915 ஆம் ஆண்டு பதி­வான சிங்­கள முஸ்லிம் கல­வ­ரத்தை ஒப்­பீடு செய்து விளக்கம் கோரி பதில்­களை சட்­டத்­த­ரணி புலஸ்தி ஹேவ­மான்­ன­வி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொண்டார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி அதி­கா­ரி­கொட, வெலி­பிட்­டிய, சீனன் வத்த, துந்­துவ, பேரு­வளை, வெலிப்­பன்னை உள்­ளிட்ட பகு­தி­களில் முஸ்­லிம்­களை இலக்கு வைத்து வன்­மு­றைகள் பதி­வா­கின. இந்த வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்த பொலிஸார் தவ­றி­யதன் ஊடாக தமது அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தா­கவும், வன்­மு­றை­க­ளுக்கு கார­ண­மா­ன­வர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்கக் கோரியும் இந்த மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டன. விஷே­ட­மாக, இதன் பின்னர் இவ்­வா­றான வன்­மு­றைகள் ஏற்­ப­டு­வதை தடுக்க பொறி­முறை ஒன்­றினை உயர் நீதி­மன்றம் தனது தீர்ப்பின் ஊடாக வழங்கி அதனை அமுல்­ப­டுத்த சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வோ­ருக்கு உத்­த­ர­விட வேண்டும் எனவும் இம்­ம­னுக்கள் ஊடாக கோரப்­பட்­டுள்­ளது.

மனுவின் பிர­தி­வா­தி­க­ளாக அப்­போ­தைய பொலிஸ் மா அதிபர், அப்­போ­தைய மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க, அப்­போ­தைய பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை கட்­டளைத் தள­பதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர். டப்­ளியூ.சி.என். ரண­வன, அப்போ­தைய சட்டம் ஒழுங்கு செயலர் மேஜர் ஜெனரல் நந்த மல்­லவ ஆரச்சி, சட்ட மா அதிபர், பின்னர் நிய­மிக்­கப்­பட்ட பொலிஸ் மா அதிபர் உள்­ளிட்ட 9 பேர் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

பேரு­வளை, அளுத்­கமை வன்­முறை கார­ண­மாக 48 வீடுகள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ளன. இருவர் சுட்டுக் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­துடன், 80 பேர் (சூட்டுக் காயங்கள் உட்­பட)படு­கா­ய­ம­டைந்­துள்­ளனர். 17 பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடாத்­தப்­பட்­டது. 79 முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் சேத­மாக்­கப்­பட்­டது (17 வர்த்­தக நிலை­யங்கள் முற்­றாக அழிப்பு). 2248 முஸ்­லிம்கள் உள்­ளூரில் இடம்­பெ­யர்ந்­த­தாக மனு­தா­ரர்கள் தமது மனுவில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.
இந் நிலை­யி­லேயே தமது அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கு­மாறும், வன்­மு­றை­க­ளுடன் தொடர்­பு­டை­யோ­ருக்கு, அதற்கு கார­ண­மா­னோ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கவும் மனு­தா­ரர்கள் கோரி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந் நிலையில், மனுக்கள் மீதான விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், ஒரு மனு­தாரர் சார்­பி­லான சமர்ப்­பணம் மட்­டுமே நிறைவு பெற்­றுள்­ளது.

ஏனைய மனு­தா­ரர்கள் சார்­பி­லான வாதங்கள் எதிர்­வரும் மே 5,9,28 ஆம் திக­தி­க­ளுக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன.

விஷே­ட­மாக கடந்த திங்­க­ளன்று விசாரணைகளின் போது மன்றில் பிரதிவாதிகளுக்காக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மாலி கருனாநாயக்க, கடந்த 2014 ஜூன் 15 ஆம் திகதி அளுத்கமவில் நடந்த கூட்டத்தில் பல பேச்சாளர்கள் தமது கருத்துக்களை முன் வைத்ததாகவும், அதில் ஒருவரின் உரையை மட்டும் வைத்துக்கொண்டு அக்கூட்டத்தை முன்னெடுக்க வழங்கப்பட்ட அனுமதி அல்லது அதனை தடுக்காமை தொடர்பில் குற்றம் சுமத்துவது எப்படி என கேள்வி எழுப்பியிருந்த்தமை சுட்டிக்காட்டத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.