அளுத்கம மக்களுக்கு நீதி கிட்ட வேண்டும்

0 124

அளுத்­கம, தர்­கா­நகர், பேரு­வளை மற்றும் அதனை அண்­டிய முஸ்லிம் கிரா­மங்­களை இலக்­கு­வைத்து திட்­ட­மிட்டு தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்டு இவ்­வ­ருடம் ஜூன் மாத­மா­கின்­ற­போது 10 ஆண்­டு­க­ளா­கின்­றன. 21 ஆம் நூற்­றாண்டில் இலங்கை வர­லாற்றில் இடம்­பெற்ற குறிப்­பி­டத்­தக்க இன வன்­மு­றை­களில் அளுத்­கம, தர்­கா­நகர் பகு­தி­களில் அரங்­கேற்­றப்­பட்ட வன்­முறைச் சம்­ப­வங்கள் பிர­தான இடம் வகிக்­கின்­றன. இந்த அசம்­பா­வி­தங்கள் நடந்து பத்­தாண்­டு­க­ளா­கின்­ற­போதும் பாதிக்­கப்­பட்ட தரப்­பான முஸ்லிம் சமூ­கத்­திற்கு இன்னும் நீதி கிடைத்­த­தாக இல்லை.

இதற்­கி­டையில், 2017 இல் கிந்­தோட்­டை­யிலும், 2018 இல் அம்­பாறை, கண்டி, திகன பகு­தி­க­ளிலும் 2019 இல் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து மினு­வாங்­கொடை மற்றும் வடமேல் மாகா­ணத்தின் பல பகு­தி­க­ளிலும் முஸ்­லிம்­களை இலக்­கு­வைத்து பல்­வே­று­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்கள் பதி­வா­கி­விட்­டன. அத்­துடன், கொரோனா தொற்றால் உயி­ரி­ழந்த முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை எரி­யூட்டி முஸ்லிம் சமூ­கத்தை ஆத்­தி­ர­மூட்டும் விதத்­திலும் சர்­வ­தேச ரீதியில் அழுத்­தங்­களை ஏற்­ப­டுத்தும் வித­மான இன­வாத செயற்­பா­டுகள் அரங்­கே­றின.

இன­வாத செயற்­பா­டுகள், பிழை­யான அர­சியல் தீர்­மா­னங்கள் மற்றும் கொரோனா பெருந்­தொற்று என்­ப­வற்றால் பொரு­ளா­தார ரீதி­யிலும் அர­சியல், நிர்­வாக ரீதி­யிலும் நலி­வுற்ற இந்­நாட்டில், 2022 ஆம் ஆண்டு மார்ச் மாத­ம­ளவில் சுயா­தீ­ன­மாக மேலெ­ழுந்த மக்கள் எழுச்சிப் போராட்­டங்­க­ளை­ய­டுத்து இன­வாத செயற்­பா­டுகள் தணிந்­தி­ருக்­கி­றது. எனினும், அர­சியல் இலாபம் கருதி சில அர­சியல் சக்­திகள் ஆங்­காங்கே இன­வாத கருத்­துக்­களை பரப்பி நாட்டின் அமை­தியை கெடுக்கும் விதத்தில் செயற்­ப­டு­கின்­றன.

இது இப்­ப­டி­யி­ருக்க, 2014 ஆம் ஆண்டு அளுத்­கம, பேரு­வளை மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் இடம்­பெற்ற திட்­ட­மிட்ட இன அடக்­கு­முறை தொடர்­பாக அப்­போது தாக்கல் செய்­யப்­பட்ட ஐந்து அடிப்­படை உரிமை மீறல்கள் தொடர்­பான மனுக்கள் மீதான விசா­ரணை கடந்த திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­கின.
இதன்­போது, அளுத்­கம வன்­மு­றைகள் இடம்­பெ­று­வ­தற்கு கார­ண­மாக இருந்த பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரரின் ‘அப­ச­ரன உரை’ தொடர்பில் முன்­கூட்­டியே தக­வ­ல­றிந்­தி­ருந்த அர­சாங்­கமும் பொலிஸ் தரப்பும் கூட்­டத்தை நடத்­து­வ­தற்கு அனு­ம­தி­ய­ளித்­த­துடன், உரி­ய­மு­றையில் சட்­டத்தை அமுல்­ந­டத்­தாது இருந்­த­மை­யி­னா­லேயே வன்­மு­றைகள் அரங்­கேற்­றப்­பட்­ட­தா­கவும் எனவே, அர­சாங்­கமும் பொலிஸ் தரப்பும் தனது பொறுப்­பு­களை சரி­வர செய்­வ­தற்கு தவ­றி­யுள்­ள­தா­கவும் சட்­டத்­த­ரணி புலஸ்தி ஹேவ­மான்ன நீதி­மன்­றத்தில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

அத்­துடன், நீதி­ய­ர­சர்கள் குழாமின் தலைமை நீதி­ப­தி­யாக இருந்த நீதி­ய­ரசர் யசந்த கோதா­கொட, இந்த சம்­ப­வத்­துடன் 1915 ஆம் ஆண்டு பதி­வான சிங்­கள முஸ்லிம் கல­வ­ரத்தை ஒப்­பீடு செய்­தி­ருந்தார்.

இங்கு சட்­டத்­த­ரணி புலஸ்தி ஹேவ­மான்ன மிக வலு­வான குற்­றச்­சாட்­டொன்றை அர­சாங்­கத்தின் மீதும் பொலிஸ் தரப்பின் மீதும் சுமத்­தி­யி­ருக்­கின்றார். குறித்த நியா­ய­மான குற்­றச்­சாட்டு தொடர்பில் நீதித்­துறை கவ­ன­மெ­டுக்கும் பட்­சத்தில் நாட்டில் இன்­னொரு இன­வன்­மு­றைக்கு இட­ம­ளிக்­காத விதத்­தி­லான நீதியை பெற்­றுக்­கொள்ள முடி­யு­மா­ன­தாக இருக்கும். இதுவே, அர­சியல், வியா­பாரம் மற்றும் இதர நோக்­கங்­க­ளுக்­காக இன வன்­மு­றை­களை தோற்­று­விக்க நினைப்­ப­வர்­க­ளுக்கு சாட்­டை­ய­டி­யா­கவும் அமை­யலாம்.
இந்த விட­யத்தில் பாதிக்­கப்­பட்ட முஸ்லிம் தரப்­பா­னது நீதித்­துறை மீது மிகுந்த நம்­பிக்கை கொண்டு நியா­யத்தை எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கி­றது.

அத்­தோடு, 2018 ஆம் ஆண்டு, பெப்­ர­வரி இறு­திப்­ப­கு­தியில் அம்­பா­றை­யிலும் மார்ச் மாத ஆரம்­பத்தில் கண்­டி­யிலும் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட இன­வன்­மு­றை­க­ளுக்கு 6 வரு­டங்­க­ளா­கின்­றன. இந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கும் வெகு சீக்கிரமாக நீதியை பெற்றுக் கொடுப்பதும் அவசியமாகின்றன.

அத்தோடு, அளுத்கமை வன்முறைச் சம்பவங்கள் முதல் தற்போதுவரை நடத்தப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு எதிரான அசம்பாவிதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் நஷ்டஈடுகள் வழங்கப்பட வேண்டும். எனவே, இது விடயமாக அரசியல், சிவில் தலைமைகள் பொறுப்புடன் செயற்பட்டு நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.