மீண்டும் சிறை செல்வாரா ஞானசார தேரர்?

முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டது எதற்காக?

0 102

எப்.அய்னா

இஸ்­லா­மி­யர்கள் ஏக இறை­வ­னாக வழி­படும் அல்­லாஹ்­வையும் இஸ்­லாத்­தையும் அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டதன் ஊடாக இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக நடந்­து­கொண்­டமை தொடர்பில் குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனா­தி­பதி செய­லணி முன்னாள் தலை­வரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­ல­ரு­மான கல­கொட அத்தே ஞான­சார தேரர், அவை குறித்து தொட­ரப்­பட்­டுள்ள மேல் நீதி­மன்ற வழக்கில் பகி­ரங்க மன்­னிப்பு கேட்க விரும்­பு­வ­தாக அறி­வித்­துள்ளார்.

இஸ்­லா­மி­யர்கள் ஏக இறை­வ­னாக வழி­படும் அல்­லாஹ்வை தூற்றும் வித­மாக கருத்து வெளி­யிட்டு, மத உணர்­வு­களை தூண்­டி­ய­தாக கொழும்பு மேல் நீதி­மன்றில் சட்ட மா அதிபர் தொடர்ந்­துள்ள எச்.சி.1948/20 எனும் வழக்கின் விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்­துள்ள நிலையில், பிர­தி­வாதி தரப்பு நியா­யங்­களை எடுத்­தி­யம்பும் வித­மாக குற்­ற­வாளிக் கூண்­டி­லி­ருந்து தன் நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தியே கடந்த 15 ஆம் திகதி ஞான­சார தேரர் இந்த விட­யத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

மேல் நீதி­மன்ற வழக்கு:
இந்த வழக்கில் சாட்சி விசா­ர­ணைகள் 2022 செப்­டம்பர் 20 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்­டது. கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி ஆதித்ய பட்­ட­பெந்­திகே முன்­னி­லையில் இவ்­வ­ழக்கு விசா­ரணை செய்­யப்­பட்­டது.
இந்த வழக்கில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் சாட்­சியம் அளித்­தி­ருந்­தனர். சாட்­சி­யா­ளர்­களின் நலன் தொடர்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் தலை­மையில் சட்­டத்­த­ரணி வசீமுல் அக்ரம் உள்­ளிட்ட குழு­வி­ன­ருடன் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

குற்­றச்­சாட்டு:
2016 ஆம் நவம்பர் மாதம் முதலாம் திக­திக்கும் 16ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலத்தில், கொழும்பு – கிரு­ளப்­ப­னையில் ஊடக சந்­திப்­பொன்­றினை நடாத்தி, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மான வெறுப்­பூட்டும் கருத்­துக்­களை வெளி­யிட்­ட­தாக ஞான­சார தேரர் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. தண்­டனை சட்டக் கோவையின் 291(அ) பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை அவர் புரிந்­த­தாக சட்ட மா அதி­பரால் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. வர­லாற்று சிறப்பு மிக்க பலாங்­கொடை தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் விவ­காரம் குறித்து ஊடக சந்­திப்பில் கருத்து வெளி­யிடும் போது, கூர­கல பெளத்த புரா­தன சின்­னங்­களை முஸ்­லிம்கள் ஆக்­கி­ர­மிப்­ப­தா­கவும், கேவ­ல­மான வச­னங்­களைக் கொண்டு இஸ்­லா­மி­யர்கள் ஏக இறை­வ­னாக வழி படும் அல்­லாஹ்வை தூற்றும் வித­மாக கருத்து வெளி­யிட்டு, மத உணர்­வு­களை தூண்­டி­ய­தா­கவும் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

முறைப்­பாடு:
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர் பொலிஸில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமைய இடம்­பெற்ற விசா­ர­ணை­களை மையப்­ப­டுத்தி, மேல் நீதி­மன்றில் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக சட்ட மா அதி­பரால் இந்த குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்டு அது கைய­ளிக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே அவ்­வ­ழக்கு விசா­ரணை செய்­யப்­பட்­டது.

இதன்­போது கல­கொட அத்தே ஞான­சார தேரர் சார்பில் சட்­டத்­த­ரணி சஞ்­சய ஆரி­ய­தாச ஆஜ­ரானார்.

சாட்­சிகள்:
இந்த நிலை­யி­லேயே, முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மற்றும் சுவர்­ண­வா­ஹினி செய்திப் பிரிவின் பணிப்­பாளர் ஆகி­யோரின் சாட்­சி­யங்கள் முறைப்­பாட்­டாளர் தரப்பு சாட்­சி­யங்­க­ளாக சட்ட மா அதிபர் தரப்பால் நெறிப்­ப­டுத்­தப்­பட்­டது.
இந் நிலை­யி­லேயே கடந்த 15 ஆம் திகதி, பிர­தி­வாதி தரப்பின் சாட்­சி­யங்கள் நெறிப்­ப­டுத்த அவ­காசம் அளிக்­கப்­பட்ட போதும், பிர­தி­வாதி சாட்­சி­யங்­களை கொண்­டு­வ­ராது குற்­ற­வாளிக் கூண்டில் இருந்­த­வாறு தன் நிலைப்­பாட்டை அறி­விப்­ப­தாக அறி­வித்தார்.

அதன்­படி குற்­ற­வாளிக் கூண்டில் இருந்­த­வாறு தன் நிலைப்­பாட்டை அறி­வித்த ஞான­சார தேரர், தான் ஊடக சந்­திப்பில் தெரி­வித்த கருத்து ஆவே­சத்தில் குறிப்­பிட்ட ஒன்று எனவும் அது முஸ்­லிம்­களின் மனங்­களை புண்­ப­டுத்தி இருந்தால் அதற்­காக மனம் வருந்­து­வ­தா­கவும் முஸ்­லிம்­க­ளிடம் மன்­னிப்பு கோரு­வ­தா­கவும் தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து இவ்­வ­ழக்கின் தீர்ப்பை எதிர்­வரும் 28 ஆம் திகதி அறி­விப்­ப­தாக நீதி­பதி ஆதித்ய பட்­ட­பெந்­திகே அறி­வித்தார்.

சிக்­கு­வாரா ஞான­சார தேரர்?:
ஏற்­க­னவே, ஞான­சார தேரர் நீதி­மன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொது மன்­னிப்பில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்தார். அந்த நட­வ­டிக்கை உயர் நீதி­மன்றில் சவா­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றான நிலையில் ஞான­சார தேர­ருக்கு இவ்­வ­ழக்கில் ஒத்தி வைக்­கப்­பட்ட சிறைத் தண்­டனை ஒன்று வழங்­கப்­ப­டு­வ­தற்­கான சந்­தர்ப்பம் மிகக் குறைவு என சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.