அரகலயவுக்கு பிற்பட்ட இலங்கை அரசியல்: இங்கிருந்து எங்கே?

0 332

எம்.எல்.எம்.மன்சூர்

இன்­றைய இலங்கை சுதந்­தி­ரத்­திற்கு பிற்­பட்ட அதன் 75 வருட கால வர­லாற்றின் கொந்­த­ளிப்­புக்கள் சூழ்ந்த ஒரு கால கட்­டத்தை கடந்து கொண்­டி­ருக்­கின்­றது என்­பதில் எவ்­வித சந்­தே­க­மு­மில்லை.

2022 அரக­லய மக்கள் எழுச்­சியின் பின்னர் எமது அர­சியல் சமூ­கத்தில் (Polity) நிகழ்ந்­தி­ருக்கும் பல முக்­கி­ய­மான மாற்­றங்கள், நாட்டின் அர­சி­யலில் நேர்­ம­றை­யா­கவும், எதிர்­ம­றை­யா­கவும் செல்­வாக்குச் செலுத்தி வந்­தி­ருக்கும் முதன்­மை­யான தரப்­புக்­களை (Key Players) ஒரு பெரும் குழப்ப நிலைக்குள் ஆழ்த்­தி­யுள்­ளன. சிங்­கள சமூக ஊட­கங்கள் கட்­ட­மைத்து வரும் தீவி­ர­மான எதிர்ப்­ப­ர­சி­யலின் முக்­கி­ய­மான ஒரு சாதனை, இது­வரை காலமும் இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தி­ருக்கும் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மான அர­சாங்கக் கட்சி – பிர­தான எதிர்க் கட்சி மோதல் அர­சி­யலை (Bi – polar Contest) முழு­வ­து­மாக வேறு ஒரு திசையில் திருப்­பி­விட்­டி­ருப்­ப­தாகும். இலங்கை அர­சி­யலில் நிகழ்ந்­தி­ருக்கும் ஒரு முக்­கி­ய­மான நிலை­மாற்றம் இது. இந்த நிலை­மாற்­றத்தை துல்­லி­ய­மாக புரிந்து கொண்டால் மட்­டுமே இன்­றைய அர­சியல் களத்தில் நிலவி வரும் பெரும் குழப்ப நிலைக்­கான மூல கார­ணத்தை கண்­ட­றிய முடியும்.

இந்தப் பின்­ன­ணியில் SLPP, SJB, UNP போன்ற பிர­தான கட்­சிகள், சிங்­கள தேசி­ய­வாத முகாம், பொது­பல சேனா இயக்கம் போன்ற பௌத்த எழுச்சி இயக்­கங்கள், பாரா­ளு­மன்­றத்­திற்குள் சிங்­கள இன­வாத செயல்­திட்­டத்தை முன்­னெ­டுத்து வரும் ரதன தேரர் மற்றும் வீர­வன்ச – கம்­மன்­பில சோடி போன்ற பல்­வேறு தரப்­பி­னரும் ஒரு தடு­மாற்ற நிலைக்குள் தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றார்கள். தென்­னி­லங்­கையில் பொது­சன அபிப்­பி­ரா­யத்தை வடி­வ­மைக்கும் பணியை முழுக்க முழுக்க சிங்­கள சமூக ஊட­கங்கள் கையி­லெ­டுத்­தி­ருக்கும் ஒரு சூழ்­நி­லை­யி­லேயே இந்த மாற்­றங்கள் நிகழ்ந்­தி­ருக்­கின்­றன. வெளிப்­ப­டை­யாக எவரும் சொல்­லா­விட்­டாலும் கூட, SJB யையும் உள்­ளிட்ட அனைத்துத் தரப்­புக்­க­ளி­னதும் பொது எதி­ரி­யாக இப்­பொ­ழுது ஜேவிபி/ என்­பிபி அணி அடை­யாளம் காணப்­பட்­டி­ருக்­கின்­றது. அந்த நிலையில், ஜேவிபி / என்­பிபி அணியின் எழுச்­சியை முறி­ய­டிப்­ப­தற்கும், சிங்­கள சமூக ஊட­கங்­களில் இலட்சக் கணக்­கான பார்­வை­யா­ளர்­களைக் கொண்­டி­ருக்கும் அமைப்­புக்கு எதி­ரான (Anti Establishment) யூடியூப் பரப்­பு­ரை­யா­ளர்­களின் செல்­வாக்கை குலைப்­ப­தற்கும் அவ­சி­ய­மான உத்­தி­களை வடி­வ­மைக்கும் காரி­யத்­தி­லேயே மேற்­படி தரப்­புக்கள் அனைத்தும் இப்­பொ­ழுது மும்­மு­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­றன.

மஹிந்த ராஜ­பக்ச 2005 இல் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற பின்னர் கிட்­டத்­தட்ட 15 ஆண்­டுகள் கொடி­கட்டிப் பறந்த சிங்­கள தேசி­ய­வா­தத்­துடன் இணைந்த பேரி­ன­வாத செயல்­திட்டம் (Majoritarian Agenda) இப்­பொ­ழுது ஒரு பெரும் சரிவை சந்­தித்­தி­ருக்­கி­றது. நாட்டின் பெரும்­போக்கு அர­சி­யலில் சிங்­கள தேசி­ய­வா­தமோ அல்­லது இன­வா­தமோ இப்­பொ­ழுது ஒரு முதன்­மை­யான சக்­தி­யாக (A Force to Reckon with) இருந்து வர­வில்லை. இன­வாத கோஷங்­களை மட்டும் முன்­வைத்து சிங்­கள மக்­களை அணி திரட்­டு­வது இனி­மேலும் சாத்­தி­ய­மில்லை என்ற யதார்த்­தத்தை சம்­பிக ரண­வக்க, விமல் வீர­வன்ச, சன்ன ஜய­சு­மன மற்றும் வசந்த பண்­டார போன்­ற­வர்கள் நன்கு உணர்ந்­தி­ருக்­கி­றார்கள்.

பெரும்­போக்கு அர­சி­ய­லுக்கு வெளியில் சிங்­கள – பௌத்த சமூ­கத்தில் முக்­கிய சக்­தி­க­ளாக எழுச்­சி­ய­டைந்­தி­ருந்த பொது­பல சேனா, சிஹல ராவய மற்றும் ராவண பலய போன்ற இயக்­கங்கள் சமூக ஊட­கங்­க­ளி­லி­ருந்து வரும் தொடர்ச்­சி­யான தாக்­கு­தல்­களை (Onslaught) எதிர்­கொள்ளும் திரா­ணி­யற்­ற­வை­யாகும். இப்­பொ­ழுது பெரு­ம­ள­வுக்கு முடங்கிக் கிடக்­கின்­றன. மறு­பு­றத்தில், நீண்ட கால­மாக ராஜ­பக்ச முகாமில் அணி திரண்­டி­ருந்த தேசி­ய­வாத / இன­வாத சக்­திகள் இப்­பொ­ழுது பல்­வேறு அணி­க­ளாக பிரிந்து, சித­றுண்டு போயி­ருக்­கின்­றன. விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில, சம்­பிக ரண­வக்க போன்­ற­வர்கள் தனித்து விடப்­பட்­டி­ருப்­ப­துடன், அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஆச­ன­மொன்றை வெல்­வது என்­பது அவர்­களைப் பொருத்­த­வ­ரையில் ஒரு பெரும் சவா­லாக இருந்து வரும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

மேலோட்­ட­மாக பார்த்தால் சஜித் பிரே­ம­தாச ‘ரணில் ராஜ­பக்ச அர­சாங்­கத்­திற்கு’ கடும் எதிர்ப்பை தெரி­வித்து வரு­வது போல தோன்­றி­னாலும், அவ­ரு­டைய அண்மைக் கால நட­வ­டிக்­கைகள் SJB ஐ மற்­றொரு மொட்டுக் கட்­சி­யாக (SLPP) நிலை­மாற்றம் செய்யும் விதத்­தி­லேயே அமைந்­தி­ருக்­கின்­றன. முன்னாள் பாது­காப்புப் படை அதி­கா­ரி­களும், பொலிஸ் அதி­கா­ரி­களும் இப்­பொ­ழுது SJB மேடை­களில் முக்­கிய பேச்­சா­ளர்­க­ளாக கள­மி­றக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

அவர்கள் நிகழ்த்தும் பெரும்­பா­லான உரைகள் ‘தாய் நாட்டை எதி­ரி­யி­ட­மி­ருந்து மீட்­டெ­டுத்த ரண­வி­ரு­வாக்­க­ளுக்கு’ புக­ழாரம் சூட்­டு­ப­வை­யா­கவே (Glorification of War Heroes) இருந்து வரு­கின்­றன. கோத்­த­பய ராஜ­பக்ச வின் எழுச்­சிக்கு பெரும் பங்­க­ளிப்பை வழங்­கி­யி­ருந்த (முன்னாள் இரா­ணுவத் தள­பதி) தயா ரத்­னா­யக்­கவும் சஜித் உடன் கைகோர்த்துக் கொண்­டி­ருக்­கின்றார். அத­னை­ய­டுத்து, முன்னாள் கடற்­படைத் தள­பதி தயா சந்­த­கி­ரியும் SJB க்குள் வந்­தி­ருக்­கிறார். இந்த எதிர்­பா­ராத மாற்­றங்கள் அனைத்தும் கோத்­த­ப­யவின் ஆசீர்­வா­தத்­து­ட­னேயே இடம்­பெற்று வரு­வன போல் தெரி­கி­றது.

விடு­தலைப் புலிகள் இயக்­கத்தை முறி­ய­டித்து, போரை முடி­வுக்குக் கொண்டு வந்த ‘ரண­வி­ரு­வாக்­க­ளுடன்’ தன்னை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான சஜித்தின் ஒரு முயற்­சி­யா­கவே இவற்றை பார்க்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. பிரே­ம­தாச குடும்­பத்­துடன் நெருக்­க­மான தொடர்­பு­களை பரா­ம­ரித்து வந்­தி­ருக்கும் எல்லே குண­வங்ச தேரர் போன்­ற­வர்கள் இது தொடர்­பாக திைர­ம­றை­வி­லி­ருந்து காய்­களை நகர்த்தி வரு­வது போல் தெரி­கி­றது. எப்­படிப் பார்த்­தாலும், சஜித் பிரே­ம­தா­சவின் அண்மைக் கால நகர்­வு­களின் பின்­ன­ணியில் மிக வலு­வான ஒரு சிங்­கள – பௌத்த மறை­கரம் இருந்து வரு­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை. (முன்­னைய தேர்­தல்­களில் பெரு­ம­ள­வுக்கு சரி­வ­டைந்­தி­ருந்த SJB யின் சிங்­கள – பௌத்த வாக்கு வங்­கியை மீண்டும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும், JVP / NPP அணியின் எழுச்­சியை எதிர்­கொள்­வ­தற்கும் திட்­ட­மிட்ட விதத்தில் இந்­ந­கர்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன). மறு­பு­றத்தில், சஜித் பிரே­ம­தா­சவின் ‘Populist’ வகை அர­சியல் இலங்கை போன்ற பொரு­ளா­தார ரீதியில் திவால் நிலையை அடைந்­தி­ருக்கும் நாடு­க­ளுக்கு எந்த விதத்­திலும் பொருந்­தக்­கூ­டி­யது அல்ல. தனது சொந்தப் பணத்­தி­லி­ருந்து பன்­ச­லை­க­ளுக்கு நன்­கொ­டை­களை வழங்­கு­வதன் மூலமும், பாட­சா­லை­க­ளுக்கு பேருந்­து­களை பெற்றுக் கொடுப்­பதன் மூலமும் அவர் தீர்க்க விரும்பும் பிரச்­சி­னைகள் எவை என்­பது தெளி­வாக தெரி­ய­வில்லை. அத்­துடன், அவர் அண்­மையில் தனது கட்­சியில் புதி­தாக சேர்த்துக் கொண்­டி­ருக்கும் ஆட்­களின் பெயர்ப் பட்­டி­யலை பார்க்கும் பொழுது, இளைய தலை­மு­றை­யினர் எதிர்­பார்த்­தி­ருக்கும் எந்த ஒரு ‘System Change’ ஐயும் அக்­கட்­சி­யி­ட­மி­ருந்து எதிர்­பார்க்க முடி­யாது என்­பது தெளி­வாகத் தெரி­கி­றது.

SJB உடன் கூட்டுச் சேர்ந்­தி­ருக்கும் முஸ்லிம் கட்­சி­களும், மலை­யகத் தமி­ழர்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் சில கட்­சி­களும் இந்த நகர்­வு­களை மௌன­மாக அவ­தா­னித்துக் கொண்­டி­ரு­கின்­றன. அக்­கட்­சி­க­ளுக்கு வேறு போக்­கிடம் இல்­லா­தி­ருப்­பதும் இதற்­கான கார­ண­மாக இருக்­கலாம். ஞான­சார தேர­ருக்கு இணை­யான விதத்தில் நாட்டில் முஸ்லிம் வெறுப்பை விதைத்த சன்ன ஜய­சு­மன போன்ற ஒரு­வரை சஜித் தனது அணிக்குள் அர­வ­ணைத்துக் கொண்ட பொழுது அது குறித்து எவரும் வாய் திறக்­க­வில்லை. ஆகவே, (நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் ஜேவிபி / என்­பிபி ஆத­ரவு நிலைப்­பாட்டில் இருந்து) சிங்­கள சமூக ஊட­கங்­களில் முனைப்­புடன் இயங்கி வரும் பல யூடியூப் பிர­ப­லங்கள் சீர­ழிவின் உச்ச கட்­டத்­தி­லி­ருந்து வரும் இலங்கை சமூக அர­சியல் கட்­ட­மைப்பின் (System) உள்­ளார்ந்த ஓர் அங்­க­மா­கவே SJB ஐயும் நோக்­கு­கி­றார்கள்.
பொது­ஜன பெர­முன (SLPP) எதிர்­கொள்ளும் நெருக்­கடி வேறு வித­மா­னது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை கைவி­டு­வ­தாக இருந்தால் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக யாரை முன்­னி­றுத்­து­வது என்­பது அவர்­களின் முக்­கிய பிரச்­சினை. ராஜ­பக்ச ‘Brand’ க்கு இன்­னமும் சந்தை மதிப்பு இருந்து வரு­கி­றதா என்ற மிகப் பெரிய கேள்­விக்­குறி அவர்­களை அலைக்­க­ழித்து வரு­கின்­றது. அதிலும் பார்க்க சிக்­க­லான பிரச்­சனை ஒரு தேர்­தலின் போது மக்கள் முன்னால் வைக்­கப்­பட வேண்­டிய தேர்தல் சுலோகம் (Campaign Slogan) என்ன என்­பது. சிங்­கள சமூக ஊட­கங்­க­ளுக்கும், பெரும்­போக்கு ஊட­கங்­க­ளுக்கும் (Main Stream Media) இடையில் நிகழ்ந்து வரும் கடும் போட்­டியில் சமூக ஊட­கங்கள் வெற்­றி­யீட்டி, இப்­பொ­ழுது முன்­ன­ணியில் நிற்­கின்­றன. அதனை சகித்துக் கொள்ள முடி­யாத நிலை­யி­லேயே ‘தெரண’, ‘ஹிரு’ போன்ற காட்சி ஊட­கங்­களும், ‘திவ­யின, ‘அருண’ போன்ற சிங்­கள நாளி­தழ்­களும் ஒரு சில முன்­னணி சிங்­கள யூடியூப் பிர­ப­லங்­களை ‘பௌத்த மதத்­தையும், மகா சங்­கத்­தி­ன­ரையும், பௌத்த மக்­களின் உணர்­வு­க­ளையும் மிக மோச­மான விதத்தில் இழி­வு­ப­டுத்தி வரும் நபர்­க­ளாக சித்­த­ரித்து வரு­கின்­றன. மேலோட்­ட­மாக ‘பௌத்த மதத்தை பாது­காத்துக் கொள்ள வேண்டும்’ என்ற கோஷத்தை இந்த ஊட­கங்கள் முன் வைத்­தாலும் கூட, வியா­பாரப் போட்டி மற்றும் தமது சந்தைப் பங்­கினை வேக­மாக இழந்து வரு­வ­துடன் இணைந்த பதற்ற நிலை­மைகள் ஏற்­ப­வற்­றி­னா­லேயே இத்­தாக்­கு­தல்கள் தூண்­டப்­பட்­டுள்­ளன என்­பது தெளி­வாகத் தெரி­கி­றது. .

சமூக ஊட­கங்­களில் சிங்­கள வல­து­சாரி மற்றும் தேசி­ய­வாத தரப்­புக்­களின் பிர­சன்னம் குறிப்­பிட்டுச் சொல்லக் கூடிய அளவில் இருந்து வர­வில்லை. அவ்­வா­றான ஒரு சில யூடியூப் தளங்­களும் கூட மிகக் குறைந்த எண்­ணிக்­கை­யி­லான பார்­வை­யா­ளர்­க­ளையே கொண்­டுள்­ளன. ‘நாத்­திக தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து (நிரா­க­மிக்க ரடிகல்ஸ்) புத்த சாச­னத்­தையும், மகா சங்­கத்­தி­ன­ரையும் பாது­காத்துக் கொள்ள வேண்டும்’ என்ற சுலோ­கங்கள் மட்­டுமே அவர்­க­ளுக்கு இப்­பொ­ழுது எஞ்­சி­யி­ருக்­கின்­றன.

SLPP யும், (அதனை எதிர்ப்­ப­தாக பாவனை செய்து வரும்) வீர­வன்ச அணியும், ராஜ­பக்ச ஆத­ரவு சிங்­கள ஊட­கங்­களும் அந்தச் சுலோ­கத்தை அவ்­வப்­போது உச்­ச­ரித்து வரு­வதை பார்க்க முடி­கி­றது. இது ஜேவிவி / என்­பிபி அணி மீது தொடுக்­கப்­படும் ஒரு மறை­மு­க­மான தாக்­கு­த­லாக இருந்து வரு­கி­றது. ‘பௌத்த மதத்தை நாங்­கள எந்த விதத்­திலும் இழி­வு­ப­டுத்­த­வில்லை. தமது அத்­தனை அயோக்­கி­யத்­த­னங்­க­ளையும் மூடி­ம­றைத்துக் கொள்­வ­தற்கு மதத்தை ஒரு கேட­ய­மாக பயன்­ப­டுத்தி வரும் அர­சி­யல்­வா­தி­க­ளையும், பிக்­கு­க­ளையும், ஊடக முத­லா­ளி­க­ளையும் அம்­ப­லப்­ப­டுத்­து­வதே எங்கள் நோக்கம்’ என்­கி­றார்கள் சேபால் அம­ர­சிங்க போன்ற முன்­னணி யூடியூப் பரப்­பு­ரை­யா­ளர்கள்.
இதன் விளை­வாக, 2010 – 2020 தசாப்தம் நெடு­கிலும் நாட்டில் நிலவி வந்த இனங்­க­ளுக்­கி­டை­யி­லான பெரும் பிளவு (Ethnic Polarisation) இப்­பொ­ழுது சிங்­கள சமூ­கத்தின் இரு தரப்­புக்­க­ளுக்­கி­டை­யி­லான ஒரு பிள­வாக திசை­மா­றி­யி­ருக்­கின்­றது. இவ்­விரு தரப்­புக்­களும் ஒரு­வ­ரை­யொ­ருவர் பரஸ்­பர வன்­மத்­துடன் எதிர்­கொண்டு வரும் நிலை நாளுக்கு நாள் தீவி­ர­ம­டைந்து வரு­கின்­றது. இந்தப் பிளவு பாரிய வன்­முறைச் சம்­ப­வங்­க­ளுக்­கான வித்­துக்­க­ளையும் தன்­ன­கத்தே கொண்­டுள்­ளது. சிங்­கள சமூக ஊட­கங்கள் வெற்­றி­க­ர­மாக சாதித்­தி­ருக்கும் ஒரு கைங்­க­ரியம் இது. இதன் பின்­ன­ணியில் JVP / NPP அணியின் மறை­கரம் செயற்­பட்டு வரு­வ­தாக குற்றம் சாட்­டு­கி­றார்கள் எதிர்த் தரப்­பினர். சனத் நிசாந்த வின் மர­ணத்தை சமூக ஊட­கங்கள் கொண்­டா­டிய விதம் குறித்து கருத்துத் தெரி­வித்த ஹிரு­னிகா பிரே­மச்­சந்­திர ‘இந்த வன்­மத்தை ஜேவி­பியே போஷித்து, வளர்த்து வரு­கி­றது’ எனக் குற்றம் சுமத்­தி­யி­ருந்தார்.

2022 அர­க­லய எதிர்ப்­பி­யக்­கத்தின் போது நாட்டு மக்கள் முன்­வைத்த ‘System Change’ என்ற கோஷத்­துக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்­டு­மானால் அடுத்து வரும் தேர்­தல்­களில் SLPP , UNP, SJB ஆகிய கட்­சி­க­ளையும், அவற்­றுடன் சந்­தர்ப்­ப­வாத கூட்­டுக்­களை வைத்துக் கொள்ளும் சிறு கட்­சி­க­ளையும் தோற்­க­டித்து பல­வீ­ன­ம­டையச் செய்ய வேண்டும் என்­பதே சிங்­கள யூடியூப் பரப்­பு­ரை­யா­ளர்­களின் கோரிக்கை. பர­வ­லான விதத்தில் சமூக ஊட­கங்­களை பயன்­ப­டுத்தி வரும் சிங்­கள நடுத்­தர வர்க்­கத்­தி­னரின் அபிப்­பி­ரா­யங்­களை வடி­வ­மைப்­பதில் இவர்கள் செலுத்தி வரும் செல்­வாக்கை எவரும் குறைத்து மதிப்­பிட முடி­யாது. அத­னுடன் இணைந்த விதத்தில் பின்­வரும் தரப்­பு­களும் முற்­றாக முடக்­கப்­பட வேண்டும் என்­கி­றார்கள் அவர்கள்:

• ராஜ­பக்ச செயல்­திட்­டத்தின் உள்­ளார்ந்த ஓர் அங்­க­மாக இருந்து வந்­தி­ருக்கும் முன்­னணி தேரர்­க­ளான மெத­கொட அபய திஸ்ஸ, அத்­து­ர­லிய ரதன, கல­கொட அத்தே ஞான­சார மற்றும் எல்லே குண­வங்ச போன்ற தேரர்­களை உள்­ள­டக்­கிய ஒரு குழு­வினர்.
• ராஜ­பக்­ச­களை எதிர்ப்­ப­தாக வெளியில் கூறிக் கொண்டு, தீவிர மத­வாத அஜன்டா ஒன்றை கையி­லெ­டுத்து, ஜேவிபி /என்­பிபி எழுச்­சிக்கு எதி­ராக சிங்­கள மக்­களை அணி­தி­ரட்ட முயன்று வரும் ஒரு சில முன்­னணி இளம் பிக்­குகள் (உதா­ரணம் பலங்­கொட கஸ்­ஸப்ப தேரர்).
• சிங்­கள பெரும்­போக்கு ஊட­கங்­களின் ஒரு பிரிவு.

இப்­பொ­ழுது நட்­சத்­திர அந்­தஸ்தை ஈட்டிக் கொண்­டி­ருக்கும் சேபால் அம­ர­சிங்க, சுதத்த தில­க­சிரி போன்­ற­வர்கள் தமது காணொ­ளி­களில் பயன்­ப­டுத்திவரும் சிங்­கள வார்த்­தைகள் இது­வ­ரையில் எவரும் பொது வெளியில் சொல்லத் துணி­யாத ‘கெட்ட வார்த்தை’ வகையைச் சேர்ந்தவை. ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை உள்­ளிட்ட தலை­வர்­க­ளையும், முன்­னணி பிக்­கு­க­ளையும் நோக்கி எவ்­வித மனத் தடை­க­ளு­மில்­லாமல் அவர்கள் அந்த வார்த்­தை­களை வீசி வரு­கி­றார்கள். இந்த பௌத்த மத எதிர்ப்பு அலையின் பின்­ன­ணியில் ஜேவிபி/ என்­பிபி அணி இருந்து வரு­கி­றது என்­பதே SLPP யையும் உள்­ளிட்ட எதிர்த் தரப்­பி­னரின் குற்­றச்­சாட்டு. ஜேவி­பியை மறை­மு­க­மாக சாடும் விதத்தில் சாகர காரி­ய­வசம் போன்­ற­வர்­க­ளையும் உள்­ளிட்ட சிங்­கள வல­து­சா­ரிகள் முக்­கி­ய­மாக இரு வார்த்­தை­களை உதிர்த்து வரு­கின்­றனர். ஒன்று ‘வைரய’ – ‘பொறா­மையால் தூண்­டப்­பட்ட வன்மம்’ என்று சொல்­லலாம். மற்­றது ‘குஹ­கயோ’ என்­பது – ‘நய­வஞ்­ச­கர்கள்’. சிங்­கள நடுத்­தர வர்க்­கத்தின் ஒரு பகு­தி­யினர் ஜேவிபியையும் உள்­ளிட்ட இட­து­சா­ரி­களை நீண்ட கால­மாக இந்த வார்த்­தை­களைப் பயன்­ப­டுத்­தியே நிரா­க­ரித்து வந்­தி­ருக்­கி­றார்கள். அதா­வது ‘மற்­ற­வர்கள் உண்டு, மகிழ்ந்­தி­ருப்­பதை சகித்துக் கொள்ள முடி­யா­த­வர்கள்’ என்ற பொதுப் புத்திச் சார்ந்த விமர்­ச­னத்தின் வெளிப்­பாடு அது.

இங்கு முக்­கி­ய­மாக குறிப்­பிட்டுச் சொல்ல வேண்­டிய மற்­றொரு சுவா­ரஷ்­ய­மான விடயம் தென்­னி­லங்கை சிங்­கள சமூ­கத்தில் உரு­வா­கி­யி­ருக்கும் ஓர­ள­வி­லான அர­சியல் விழிப்­பு­ணர்வும், (‘A’ க்கு பதி­லாக ‘B’ மற்றும் ‘B’ க்கு பதி­லாக ‘A’ என்ற வகை­யி­லான) ஏமாற்று அர­சியல் மீதான அதீத விரக்­தியும் சார்பு ரீதியில் வடக்கு கிழக்கு பிர­தே­சங்­களில் அதே அளவில் காணப்­ப­ட­வில்லை என்­ப­தாகும். வடக்கு கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் அர­சி­யலில் ஆதிக்கம் செலுத்தி வரும் சமூக, அர­சியல் கார­ணிகள் மிகவும் சிக்­க­லா­னவை. ஆட்­சி­யா­ளர்­களை மாற்றும் விட­யத்தைப் பார்க்­கிலும், (யார் ஆட்­சிக்கு வந்­தாலும்) கொழும்பு அர­சாங்­கத்­துடன் கொடுக்கல் வாங்கல் செய்­வது எப்­படி என்ற விட­யத்­தி­லேயே அவர்கள் அதி­கமும் கவனஞ் செலுத்தி வரு­கி­றார்கள். TNA, SLMC மற்றும் ACMC போன்ற கட்­சி­க­ளுக்குள் நடக்கும் பெரும்­பா­லான உட்­சண்­டைகள் இந்தப் புள்­ளியை மைய­மாகக் கொண்டே நிகழ்ந்து வரு­கின்­றன. அடுத்து வரப்போகும் (ஜனாதிபதி அல்லது பாராளுமன்றத்) தேர்தல் ஜேவிபி / என்பிபி அணியைப் பொருத்தவரையில் மிகவும் நிர்ணயகரமான ஒரு வரலாற்று நிகழ்வாக இருந்து வரும் என்பதில் சந்தேகமில்லை. ‘அநுர குமார திசாநாயக்கவின் வெற்றி ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டு விட்டது’ என்ற விதத்தில் மேற்படி யூடியூப் செயற்பாட்டாளர்கள் ஓர் அதீத நம்பிக்கையை கட்டியெழுப்பி வருகிறார்கள்.

தென்னிலங்கையில் நடத்தப்படும் கருத்துக் கணிப்புக்களும் ஓர­ள­வுக்கு அதனை ஊர்­ஜிதம் செய்து வரு­கின்­றன. ‘நாட்டில் அப்­படி குறிப்­பிட்டுச் சொல்லக் கூடிய ஜேவிபி / என்­பிபி ஆத­ரவு அலை­யொன்று இருந்து வர­வில்லை’ என எதிர்தரப்­புக்கள் ஊட­கங்­க­ளிடம் கருத்துத் தெரி­வித்து வந்த போதிலும், அவர்கள் வெளிப்­ப­டுத்திக் காட்டும் உடல் மொழியும், அவர்­க­ளு­டைய முகங்­களில் பிர­தி­ப­லிக்கும் பதற்ற உணர்­வு­களும் அவர்கள் ‘தெரிந்தே பொய் சொல்­கி­றார்கள்’ என்­ப­தனை அம்­ப­லப்­ப­டுத்­து­கின்­றன. அதன் விளை­வாக, SLPP யையும் உள்­ள­டக்­கிய எதிர்த்­த­ரப்பு அடுத்து வர­வி­ருக்கும் அர­சியல் மாற்­றங்­களை மிகுந்த பதற்­றத்­து­டனும், தனது எதிர்­காலப் பாது­காப்பு தொடர்­பான இனம் புரி­யாத ஓர் அச்­சத்­து­டனும் எதிர்­கொண்டு வரு­கின்­றது. இங்­குள்ள கவ­லைக்­கு­ரிய விடயம் 2024 இல் தேர்­தல்கள் நடத்­தப்­பட்­டாலும், அவை ஒத்தி வைக்­கப்­பட்­டாலும் நாட்டில் வன்­முறை வெடிக்க முடியும் என்­ப­தாகும்.

அதேபோல, ஜேவிபி/ என்­பிபி ஜனா­தி­பதி வேட்­பாளர் வெற்­றி­யீட்­டி­னாலும், தோல்­வி­ய­டைந்­தாலும் 2022 மே 09 ஆந் திகதி பகல் கொழும்­பிலும், அன்­றைய தினம் இரவு நாடு முழு­வதும் அரங்­கே­றிய அரா­ஜக செயல்கள் மீண்டும் ஒரு முறை அதிலும் பார்க்க மோசமான விதத்தில் அரங்கேறக் கூடிய வாய்ப்புக்களே அதிகம் தென்படுகின்றன.

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.