சுற்­­றுச்­சூ­ழ­லுக்கு தீங்கு விளை­விக்­கும் மன்னார் புதிய காற்­றாலை திட்­டம்

0 613

ஆதில் அலி சப்ரி

உலகம் மிக வேக­மாக நிலை­பே­றான மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க சக்தி மூலங்­களை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. பரு­வ­கால மாற்றம் மற்றும் அதன் பூகோள தாக்­கங்கள் உலக நாடு­களை இவ்­வா­றான சக்தி மூலங்­களில் கவனம் செலுத்த வைத்­துள்­ளன. அபி­வி­ருத்­தி­ய­டைந்த நாடுகள் 2030 அல்­லது 2040ஆம் ஆண்­ட­ளவில் எரி­பொருள் பாவ­னைக்கு முற்­றுப்­புள்ளி வைத்­து­விட்டு, முழு­மை­யாக புதுப்­பிக்­கத்­தக்க சக்திப் பயன்­பாட்­டிற்குச் செல்லும் திட்­டத்­துடன் பய­ணிக்­கின்­றன.

வளர்­முக நாடுகள் புதுப்­பிக்­கத்­தக்க சக்தி மாற்­றத்­திற்கு செல்­வதில் எண்­ணி­ல­டங்கா சவால்கள் காணப்­ப­டு­கின்­றன. சூரிய சக்தி, காற்­றாலை அல்­லது கடல் அலை உட்­பட பல்­வேறு சக்தி மூலங்­களும் இல­வ­ச­மாக இருந்­தாலும், அவற்றை ஒரு­மு­கப்­ப­டுத்தி, பயன்­பாட்­டிற்குள் கொண்­டு­வரும் செயற்­பாடு பெரும் பணச் செலவைக் கொண்­ட­தாகும்.

இலங்கை ஒரு வளர்­முக நாடாக இருந்­தாலும் சூரிய மற்றும் காற்­றாலை சக்தி மூலங்­களைப் பயன்­ப­டுத்தி மின்­னுற்­பத்தி செய்யும் திட்­டங்­களில் நீண்ட கால­மாகக் கை வைத்­துள்­ளமை பெரு­மைப்­படக் கூடி­ய­துதான். இருந்­தாலும், பரு­வ­நிலை மாற்றம் மற்றும் அதன் தாக்­கங்­களில் இருந்து உலகை மீட்­ப­தற்­கான முயற்­சி­யாகக் கூறப்­படும் நிலை­பே­றான மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க சக்தி மூலங்­களை உற்­பத்தி செய்யும் திட்­டங்கள், நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் தீங்கு விளை­விப்­ப­தாக அமைய முடி­யுமா?

இலங்கை மின்­சார சபை மன்னார் தீவில் 30 காற்­றா­லை­களை நிர்­மா­ணித்து, அதன் மூலம் பிறப்­பிக்­கப்­படும் 103 மெகா வாட் மின்­சாரம் 2020ஆம் ஆண்டு முதல் தேசிய மின்­னோட்­டத்­திற்கு இணைக்­கப்­பட்­டுள்­ளமை எமக்குத் தெரிந்த விட­யமே. இலங்­கையின் முத­லா­வது பெரிய காற்­றாலை மின்­னுற்­பத்தித் திட்­ட­மான இது, மன்னார் காற்­றாலை மின்­சார உற்­பத்தி நிலையம் அல்­லது தம்­ப­ப­வனி மின்­சார உற்­பத்தி நிலையம் எனப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில், மன்­னாரில் தம்­ப­ப­வனி மின்­சார உற்­பத்தித் திட்­டத்தின் இரண்டாம் கட்­டத்தை ஆரம்­பிக்க இலங்கை மின்­சார சபை நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அது 21 காற்­றா­லை­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவும் மக்கள் குடி­யி­ருப்­பு­களை அண்­மித்­த­தா­கவும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளமை கவலை தரு­கின்­றது.
அர­சாங்­கத்தின் அபி­வி­ருத்தித் திட்­டங்­களை அல்­லது குறிப்­பாக புதுப்­பிக்­கத்­தக்க மின்­சார உற்­பத்தித் திட்­டத்தை எதிர்க்கும் மன­நி­லையில் மக்கள் இல்லை. என்­றாலும், தமது வாழ்­வா­தா­ரத்­தையும் இயல்பு வாழ்க்­கை­யையும் கேள்­விக்­கு­றி­யாக்கும் இந்தத் திட்­டத்தை மன்னார் தீவு மக்கள் எதிர்க்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

இலங்கை மின்­சார சபையின் காற்­றாலைத் திட்­டத்­திற்குப் போட்­டி­யாக, இந்­தி­யாவின் அதானி நிறு­வ­னமும் மன்னார் தீவில் புதுப்­பிக்­கத்­தக்க மின்­சார உற்­பத்தித் திட்­டத்தில் இறங்­கி­யுள்­ளது. அதானி நிறு­வனம் 250 மெகா வாட் மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்யும் முயற்­சியில் 52 காற்­றா­லை­களைப் பொருத்த முயற்­சிப்­ப­தாகத் தெரிய வரு­கி­றது.

“நாம் மிகப் பெரும் ஆபத்தைச் சந்­தித்­துள்­ளமை பல­ருக்கும் தெரி­யாது. புதி­தாக நிறு­வப்­ப­ட­வுள்ள காற்­றா­லைகள் மக்கள் குடி­யி­ருப்புப் பகு­தி­க­ளி­லேயே பொருத்­தப்­ப­ட­வுள்­ளன. மக்கள் குடி­யி­ருப்­புகள் பறி­போகும் அவலம் காத்­தி­ருக்­கின்­றது. இந்தத் திட்­டத்­திற்கு எதி­ரான போராட்­டங்கள், மக்­களின் வாழ்­வி­யலைத் தக்­க­வைத்துக் கொள்­வ­தற்­கான முயற்­சி­க­ளே­யன்றி வேறில்லை” என்று மன்னார் பிர­ஜைகள் குழுவின் தலைவர் அருட்­தந்தை சந்­தி­யோகு மார்கஸ் தெரி­வித்தார்.

காற்­றா­லை­களின் இயக்கம் பாரிய இரைச்­சலை ஏற்­ப­டுத்தக் கூடி­யது. அவ்­வா­றான திட்­ட­மொன்று மக்கள் குடி­யி­ருப்­பு­க­ளுக்கு அரு­கா­மையில் வரு­வது மக்­களின் இயல்பு வாழ்க்­கையைப் பாதிக்கும் என்­பதில் ஐய­மில்லை. மேலும், காற்­றாலை மின் உற்­பத்தித் திட்டம் மூலம் மன்னார் தீவு மக்­களின் ஜீவ­னோ­பா­யமும் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது.

பனை மரங்கள் இந்த மக்­களின் வாழ்­வா­தா­ரத்தில் பிர­தான பங்கு வகிக்­கின்­றன. பனையை மைய­மாகக் கொண்ட உற்­பத்­திகள் மூலம் பெரு­ம­ள­வான மக்கள் வாழ்ந்து வரு­கின்­றனர். அத்­தோடு, பனை மரங்கள் மன்னார் தீவின் நிலக்கீழ் நீர் ஓட்­டத்­தையும் ஸ்திரப்­ப­டுத்­து­கி­றது. இவ்­வாறு இருக்­கையில் இந்தத் திட்­டங்­க­ளுக்­காக ஆயிரக் கணக்­கான பனை மரங்கள் அழிக்­கப்­படும் அவ­தானம் இருப்­ப­தாக மக்கள் தெரி­விக்­கின்­றனர். “எமது வீட்­டிற்கு மதில் அமைக்­கவும் கூரை போடவும் பனை மரங்­களை வெட்­டு­வது தடை செய்­யப்­பட்­டுள்­ளது. ஆனாலும், இந்தத் திட்­டத்­திற்­காக ஆயி­ரக்­க­ணக்­கான பனை மரங்­களை அழிக்க எத்­த­னிக்­கின்­றனர்” என ஒரு முதி­யவர் முணு­மு­ணுக்­கிறார்.

காற்­றா­லைகள் ஒவ்­வொன்­றையும் இணைப்­ப­தற்­காக அமைக்­கப்­பட்­டுள்ள பாதை மூலம் மன்னார் வெள்ள அனர்த்­தங்­களை எதிர்­கொண்­டுள்­ளது. குறித்த பாதை நிலத்தில் இருந்து 1 மீட்டர் அளவு உய­ர­மாக இருப்­பதால் நீர் வடிந்­தோடும் அமைப்­புகள் தடைப்­பட்­டுள்­ளன. இதனால் முன்­னெப்­போதும் இல்­லாத வெள்ள அனர்த்தம் ஏற்­பட்டு, விவ­சாய நிலங்கள் வெள்­ளத்தில் மூழ்­கு­வ­தாக மக்கள் குற்றம் சாட்­டு­கின்­றனர்.

இது­ தொ­டர்­பாக மன்னார் மாவட்ட பெண்கள் ஒன்­றி­யத்தின் தலைவி மகா லக்ஷ்மி கருத்துத் தெரி­விக்­கையில், “தீவில் ஏற்­க­னவே பொருத்­தப்­பட்­டுள்ள காற்­றா­லை­களால் நாம் பல்­வேறு இன்­னல்­க­ளுக்கும் முகங்­கொ­டுத்து வரு­கின்றோம். வெள்­ளத்தால் பெண்­களின் வீட்டுத் தோட்­டங்கள் நாச­ம­டைந்து போனது. அபி­வி­ருத்தித் திட்­டங்கள் எமது சமூக, பொரு­ளா­தார, மனித உரி­மை­களைப் பாதிக்கும் விதத்தில் இருக்கக் கூடாது” என்றார்.

ஐக்­கிய நாடுகள் புலம்­பெயர் உயி­ரி­னங்­களைப் பாது­காப்­பது தொடர்­பான பேர­வையின் பிர­தா­ன­மான நாடாக இலங்கை விளங்­கு­கி­றது. இதற்­கான காரணம், ஆண்­டு­தோறும் 30 க்கு மேற்­பட்ட நாடு­களில் இருந்து 250க்கும் அதி­க­மான பறவை இனங்கள் இலங்­கைக்குப் புலம்­பெ­யர்­வ­த­னா­லாகும். வரு­டாந்தம் இலங்­கைக்கு 15 இலட்சம் பற­வைகள் வரு­வ­தாகக் கணிக்­கப்­பட்­டுள்ள நிலையில், மன்னார் பிர­தே­சத்­திற்கு மாத்­திரம் 10 இலட்சம் பற­வைகள் வருகை தரு­கின்­றன.

இவ்­வாறு வரு­கின்ற பற­வை­களின் பயணப் பாதையும் இருப்­பி­டங்­களும் பாதிப்­ப­டை­வ­தா­கவும், காற்­றா­லை­களின் இயக்­கத்தால் பற­வைகள் உயி­ரி­ழப்­ப­தா­கவும் சூழ­லியல் நீதிக்­கான நிலை­யத்தின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் ஹேமன்த விதா­னகே தெரி­விக்­கிறார். இந்­தி­யாவின் அதானி நிறு­வ­னத்தின் திட்­டத்தில் பற­வை­க­ளுக்­கான தாழ்­வாரப் பகு­திகள் ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­பட்­டாலும் அவை, பெய­ர­ள­வி­லா­னது என்றும் அவர் விளக்­கு­கிறார்.

மன்னார் பிர­தேச மக்கள் அபி­வி­ருத்தித் திட்­டங்­களை எதிர்ப்­ப­வர்­க­ளல்லர். மாறாக, திட்­டங்கள் தமது இருப்பையும் வாழ்வியலையும் பாதித்துவிடக் கூடாதென்று போராடுபவர்கள். இந்த முன்மொழிவுத் திட்டங்கள் தொடர்பாக இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எனினும், அறிக்கையில் மன்னார் வாழ் மக்களின் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச் சூழல் விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று சிவில் அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. மக்களின் இருப்பு உட்பட பல்வேறு சூழலியல் காரணிகளையும் சவாலுக்கு உட்படுத்தும் அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் மன்னார் தீவுக்கு வெளியே கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.