அல்–அக்ஸாவில் ரமழான் கால தொழுகையை நிறைவேற்ற புதிய பாதுகாப்பு வரையறைகளை விதித்தது இஸ்ரேல்

0 162

எம்.ஐ.அப்துல் நஸார்

எதிர்­வரும் புனித ரமழான் மாதத்தில் ஜெரூ­ச­லத்தில் அமைந்­துள்ள அல்-­அக்ஸா பள்­ளி­வா­சலில் வணக்க வழி­பா­டு­க­ளுக்கு பாது­காப்பு தேவை­களைக் கருத்­திற்­கொண்டு சில கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக இஸ்ரேல் பிர­தமர் பஞ்­சமின் நெதன்­யா­குவின் அலு­வ­லகம் திங்கட் கிழ­மை­யன்று அறி­வித்­தது.

காஸா போரில் இஸ்­ரேலின் முக்­கிய எதி­ரி­யாகக் காணப்­படும் ஹமாஸ் அமைப்பு உத்­தேச கட்­டுப்­பா­டு­களை கண்­டித்­துள்­ள­துடன், பலஸ்­தீன மக்கள் இக் கட்­டுப்­பா­டு­க­ளுக்கு எதி­ராக அணி­தி­ரள வேண்­டு­மெ­னவும் அழைப்பு விடுத்­துள்­ளது.

உலக முஸ்­லிம்­களின் புனிதத் தலங்­களுள் ஒன்­றான அல்-­அக்ஸா பள்­ளி­வாசல் கரு­தப்­ப­டு­வ­தோடு, யூதர்­களால் விவி­லிய காலத்தின் கோவில்­களின் தள­மா­கவும் மதிக்­கப்­ப­டு­கி­றது. குறித்த இடத்­தி­றகுச் செல்­லுதல் குறிப்­பாக ரமழான் போன்ற விடு­முறைக் காலங்­களில் அங்கு செல்­லுதல் பதற்றம் ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டாகக் காணப்­ப­டு­கின்­றது. இந்த வருட ரமழான் மாதம் மார்ச் 10 அல்­லது அதை அண்­மித்த திக­தி­யொன்றில் ஆரம்­ப­மா­கின்­றது.

இஸ்­ரேலில் வாழும் முஸ்­லிம்கள் அல்-­அக்­ஸா­வுக்குச் செல்­வதைத் தடுப்­ப­தற்­கான சாத்­தி­யக்­கூ­றுகள் தொடர்பில் கேட்­கப்­பட்­ட­போது, நெதன்­யா­குவின் அலு­வ­லகம் கூறி­ய­தா­வது: ‘பாது­காப்புத் தேவைப்­பாட்­டினைக் கருத்­திற்­கொண்டு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அளவில் வணக்க வழி­பா­டு­களில் ஈடு­படும் வகையில் நிபு­ணர்­களின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக சுதந்­தி­ரத்தை வழங்கும் வகையில் பிர­தமர் நடு­நி­லை­யான முடி­வொன்றை எடுத்­துள்ளார்’ எனினும் இது தொடர்பில் மேல­திக விவ­ரங்கள் எதுவும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.
நெதன்­யா­குவின் அர­சாங்­கத்தின் தீவிர வல­து­சாரிக் கூட்­டணிப் பங்­கா­ளி­யான பொதுப் பாது­காப்பு அமைச்சர் இதாமர் பென் ஜிவிர் கருத்துத் தெரி­விக்­கையில் ‘இஸ்­ரேலை வெறுப்­ப­வர்கள் ஹமாஸ் தலை­மைக்கு ஆத­ரவைக் காட்­டு­வ­தற்­கா­கவும், வன்­மு­றையைத் தூண்­டவும் இந்த நிகழ்வைப் பயன்­ப­டுத்­து­வார்கள்’ எனத் தெரி­வித்தார்.

‘டெம்பிள் மவுண்டில் நடை­பெ­ற­வுள்ள வெற்றிக் கொண்­டாட்­டத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான வெறுப்­பா­ளர்கள் நுழை­வது இஸ்­ரே­லுக்கு பாது­காப்பு அச்­சு­றுத்லை ஏற்­ப­டுத்தும்’ எனவும் பென் ஜிவிர் தெரி­வித்தார்.

‘இக் கட்­டுப்­பா­டுகள் எமது பலஸ்­தீன மக்­க­ளுக்கு எதி­ரான பயங்­க­ர­வாத ஆக்­கி­ர­மிப்பு அர­சாங்­கத்தின் தீவி­ர­வாத குடி­யே­றிகள் குழு தலை­மை­யி­லான சியோ­னிச குற்­ற­வியல் மற்றும் இஸ்­லாத்­திற்கு எதி­ரான போரின் தொடர்ச்சி’ என உத்­தேச கட்­டுப்­பா­டு­களை ஹமாஸ் வரு­ணித்­துள்­ளது.

‘இந்த குற்­ற­வியல் முடிவை நிரா­க­ரித்து, ஆக்கிரமிப்பு அரசின் ஆணவம் மற்றும் அடாவடித்தனத்தை எதிர்த்து, அல்-அக்ஸா பள்ளிவாசல் விடயத்தில் உறுதியாக நிற்க அணிதிரள வேண்டும்’ என இஸ்ரேல், ஜெருசலேம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பலஸ்தீனியர்களுக்கு ஹமாஸ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.