எதிர்வரும் தேர்தலும் சிறுபான்மை இனங்களும்

0 342

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

ஏதேனும் திட்­ட­மிட்ட அர­சியல் சூழ்ச்­சி­களோ எதிர்­பா­ராத வேறு இடைஞ்­சல்­களோ இடம்­பெ­றா­விட்டால் 2024 இலங்­கையின் தேர்தல் ஆண்­டாக இருக்கும் என்­பதே பொது­வாக எல்­லா­ரி­னதும் எதிர்­பார்ப்பு. ஆனால் அந்தத் தேர்தல் ஜனா­தி­பதித் தேர்­த­லாக இருக்­குமோ பொதுத்­தேர்­த­லாக இருக்­குமோ அல்­லது அவை இரண்டும் ஒன்­றன்பின் ஒன்­றாக நடை­பெ­றுமோ அவ்­வாறு நடை­பெறின் அவற்றுள் எது முதலில் நடை­பெறும் என்­பது ஆட்­சி­யி­லி­ருக்கும் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­ஹவின் முடிவைப் பொறுத்­தது. இலங்கை அர­சி­யலில் அவர் ஒரு பழங்­காட்டு நரி என்­பதை யாவரும் அறிவர். எனவே, பெரும்­பாலும் முதலில் தனது பத­வியை உறு­தி­செய்­து­கொண்டு அதன்பின் பொதுத் தேர்­தலை நடத்­துவார் என்ற எண்­ணத்தில் ஜனா­தி­பதித் தேர்­தலே முதலில் வரும் என்­பதை இக்­கட்­டுரை எதிர்­பார்க்­கின்­றது.

வரு­கின்ற தேர்தல் எது­வாக இருப்­பினும் அந்தத் தேர்­த­லுக்கும் இதற்கு முன்னர் நடை­பெற்ற தேர்­தல்­க­ளுக்கும் இடையே வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு வேறு­பாடு உண்டு. அதா­வது, இந்தத் தேர்தல் இலங்­கையின் அர­சியல், பொரு­ளா­தாரம், இன உறவு, கலாச்­சாரம் ஆகி­ய­வற்றின் அடிப்­படை அமைப்­பையே மாற்றி இந்த நாட்டை ஒரு புதிய பாதையில் இட்டுச் செல்­லக்­கூ­டிய ஒரு வாய்ப்பைத் தெரி­வு­செய்யும் தேர்­த­லாக அமையப் போகின்­றது. சுருக்­க­மாகக் கூறின் நாடா­ளு­மன்ற ஜன­நாயம் என்ற போர்­வைக்குள் புகுந்­து ­கொண்டு கடந்த எழு­பத்­தைந்து ஆண்­டு­க­ளாக இயங்­கி­வந்த சிங்­கள பௌத்த பேரி­ன­வாத ஆட்­சி­ முறை இன்று நோய்­வாய்ப்­பட்டுப் புண்­ணாகிப் புரை­யோடி நாட்டின் சுதந்­தி­ரத்­துக்கும் இறை­மைக்கும் பொரு­ளா­தார மீட்­சிக்கும் ஆபத்­தாக மாறி­யுள்ள நிலையில் அந்த அர­சியல் சமூக அமைப்­பையே முற்­றாக உதறித் தள்­ளி­விட்டுப் புதி­யதோர் அர­சியல் கலாச்­சா­ரத்­தையும் பொரு­ளா­தார நிர்­வா­கத்­தையும் சமூக அமைப்­பையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு மக்­களின் ஆத­ரவைத் தேடும் ஒரு தேர்­த­லாக அது அமையப் போகின்­றது.

1948 இல் ஆட்சிச் சுதந்­திரம் கிடைத்த நாள் தொடக்கம் இலங்­கையின் ஆட்­சி­ய­மைப்­புக்கு அத்­தி­வா­ர­மாக அமைந்த சிங்­கள பௌத்த பேரி­ன­வாதக் கொள்­கையே இப்­போது நிலவும் பொரு­ளா­தார வங்­கு­ரோத்­துக்கு அடிப்­படைக் காரணம் என்­பதை பொரு­ளா­தார மீட்­சிக்­கான வழி­வ­கை­க­ளைப்­பற்றிப் பல சிபார்­சு­களை முன்­வைக்கும் நிபுணர்­க­ளும்­கூட சொல்லத் தயங்­கு­வது ஆச்­ச­ரி­ய­மாக இருக்­கி­றது. ஊழல்­ம­லிந்த அர­சாட்­சியும் அர­சாங்­கங்­களின் பொறுப்­பற்ற செல­வினங்­களும், திருப்பிச் செலுத்த முடி­யாத கடன் சுமைக்குள் நாட்­டையே ஈடு­வைத்து நடாத்­தப்­பட்ட ஓர் உண்­ணாட்டுப் போரும், பொரு­ளா­தார அபி­வி­ருத்தி என்ற போர்­வையில் திட்­ட­மி­டப்­ப­டாத முறை­யிலும் சுய­லாபம் கரு­தியும் வெறும் புகழை எதிர்­பார்த்தும் மேற்­கொள்­ளப்­பட்ட அனா­வ­சி­ய­மா­னதும் ஆடம்­ப­ர­மா­ன­து­மான முத­லீ­டு­களும், மனித உரி­மை­க­ளையும் பொது மக்­களின் அடிப்­படைச் சுதந்­தி­ரத்­தையும் புறந்­தள்­ளி­விட்டு இனங்­களை ஒன்­றோ­டொன்று மோத­விட்டு அதனை அடக்­கு­வ­தாகக் கூறிக்­கொண்டு அமு­லாக்­கப்­பட்ட சட்­டங்­களும், நீதித் துறை­யி­னையே அர­சியல் மய­மாக்­கி­ய­மையும் இன்னும் பல கார­ணி­களும் ஒன்று சேர்ந்து உரு­வாக்­கி­யதே இன்­றைய பொரு­ளா­தார வங்­கு­ரோத்தும் அதனால் மக்­கள்­படும் தாங்­கொ­ணாத கஷ்­டங்­களும் என்­பது உண்­மை­யெ­னினும் இத்­த­னைக்கும் அடிப்­ப­டை­யாக விளங்­கு­வது இந்த நாட்டின் அர­சியல் அமைப்பும் அதன் கலாச்­சா­ரமுமே. அந்த அமைப்பை மாற்­றா­த­வரை இலங்­கைக்கும் அதன் மக்­க­ளுக்கும் விடிவு ஏற்­ப­டாது. அதனை மாற்றப் போவது யார்? இந்தக் கேள்­விக்­குத்தான் எதிர்­வரும் தேர்தல் பதில்­கூறப் போகின்­றது. ஆகவே அந்தத் தேர்­தலில் சிறு­பான்மை இனங்­களின் பங்­க­ளிப்பு என்ன?

சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம் முடி­சூடா மன்­ன­னாக இருந்­து­கொண்டு இந்த நாட்டின் தலை­வி­தியைத் தீர்­மா­னித்­த­போது அதனால் பல­வ­கை­க­ளிலும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தமி­ழரும் முஸ்­லிம்­க­ளுமே. எனினும் இப்­பா­திப்பில் இரு இனங்­க­ளுக்­கு­மி­டை­யேயும் ஒரு குறிப்­பி­டக்­கூ­டிய வேறு­பா­டுண்டு. அதா­வது சிங்­கள இனம் மட்டும் இந்த நாட்டைக் கட்டி ஆள்­வதை தமி­ழினம் என்­றுமே ஆத­ரிக்­க­வில்லை. அதற்கு இலங்­கையின் பூர்­வீக வர­லாற்று அடிப்­ப­டை­யி­லான காரணம் உண்டு. அதனை இங்கே விப­ரிக்க முயன்றால் கட்­டுரை நீண்­டு­விடும். சுருக்­க­மாகக் கூறின் சிங்­கள இனத்­துக்­குள்ள அதே வர­லாற்­று­ரிமை தமி­ழி­னத்­துக்கும் உண்டு. ஆனால் முஸ்­லிம்­களோ எட்டாம் நூற்­றாண்­ட­ளவில் வர்த்­த­கர்­க­ளாக வந்து குடி­யே­றிய ஒரு கலப்­பினம். அதனால் இராமன் ஆண்­டா­லென்ன இரா­வணன் ஆண்­டா­லென்ன தங்­க­ளுக்கு வேண்­டி­ய­தெல்லாம் வர்த்­தகம் செய்யும் உரிமை மட்­டுமே என்­ற­பா­ணி­யி­லேயே தங்­களின் அர­சியல் வாழ்வை நீண்­ட­கா­ல­மாக தீர்­மா­னித்துக் கொண்­டனர். அதனால் சிங்­க­ள­வர்­க­ளுக்கும் தமி­ழ­ருக்கும் இடையே அர­சியல் உறவு பகை­யாக மாறி­ய­வுடன் முஸ்­லிம்கள் வர்த்­தக நலன் கருதி பெரும்­பான்மை இனத்­துடன் இணை­ய­லா­யினர். அந்தச் சந்­தர்ப்ப சக­வாசம் உலக அரங்கில் சிங்­கள இன­வாத அரசு இன­பே­த­மற்ற ஓர் அரசு என்­பதைப் பறை­சாற்ற இலங்கை ஆட்­சி­யா­ளர்­க­ளுக்குக் கிடைத்த பரிசு. அந்த நிலையில் சிங்­கள பௌத்த அர­சு­க­ளி­ட­மி­ருந்து பல சலு­கை­களை முஸ்­லிம்கள் பெற்­றனர். முஸ்லிம் பாட­சா­லை­களின் தோற்­றமும் வளர்ச்­சியும் இதற்­கொரு சிறந்த எடுத்­துக்காட்டு. இந்த வர­லாற்­றையும் இங்கே விப­ரிக்கத் தேவை இல்லை. ஆனால் 2009க்குப் பின்னர் அதா­வது தமி­ழரின் ஆயுதம் தாங்­கிய போர் படு­தோல்­வியில் முடி­வ­டைந்து தமி­ழ­ரைப்­பற்­றிய பயம் சிங்­கள பௌத்த இன­வா­தி­க­ளி­டையே மறையத் தொடங்­கவே, ‘தமி­ழ­ரையே சர­ண­டைய வைத்­து­விட்டோம் இனி முஸ்­லிம்­களின் நட்பு தேவையா’ என்ற ஒரு கேள்­வியை அவர்­க­ளிடம் தோற்­று­வித்­தது. அதன் விளை­வு­களை 2009க்குப் பின்னர் நடை­பெற்ற சிங்­கள முஸ்லிம் கல­வ­ரங்கள் தெளி­வு­ப­டுத்தும். அதனால் சிங்­க­ள-­முஸ்லிம் உறவு ஓரு சந்­தர்ப்ப சக­வாசம் மட்­டுமே என்­பது நிரூ­ப­ண­மா­கி­றது. தமி­ழர்­களின் தலை­மைத்­து­வத்­தின்கீழ் தமி­ழையே தாய்­மொ­ழி­யாகக் கொண்ட முஸ்­லிம்கள் அணி திர­ளா­மைக்கு தமிழ்த் தலை­மைத்­து­வத்தின் முஸ்­லிம்­க­ளைப்­பற்­றிய மாற்­றாந்தாய் மனப்­பான்மை என்­ப­தையும் இங்கே சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது. இருந்தும் முஸ்­லிம்கள் இப்­போது சிங்­க­ள­வர்­க­ளாலும் கைவி­டப்­பட்­டுள்­ளனர். சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தை அர­சியல் ரீதி­யாக எதிர்ப்­ப­தற்கு தமி­ழினம் எவ்­வாறு தமி­ழி­ன­வாதக் கட்­சி­களை உரு­வாக்­கி­யதோ அதே­போன்று சிங்­கள தமிழ் இனங்­களால் புறக்­க­ணிக்­கப்­பட்ட முஸ்­லிம்­களும் முஸ்லிம் மத­வாதக் கட்­சி­களை ஆரம்­பிக்­க­லா­யினர். மொத்­தத்தில் இலங்­கையின் ஜன­நா­யக அர­சியல் என்­பது இன­வாத அர­சி­ய­லாக மாறிற்று. அதன் விளை­வாக பொன் விளையும் இலங்கைப் பூமி பல­வி­த­மான வரட்­சி­களால் பாலை­யாக மாறிக் கிடக்­கி­றது. அந்தப் பாலையின் ஓர் அமி­சத்­தை­மட்டும் அடுத்து விளங்க வேண்டும்.

சிங்­கள பௌத்த இனமோ இலங்­கையின் ஆட்சி என்றும் தனது கைவசம் இருக்க வேண்டும் என்­பதில் உறு­தியாய் நிற்­கின்­றது. ஆளும் கட்­சிகள் மாறலாம். ஆனால் ஆட்­சியின் தலை­மைத்­துவம் என்றும் சிங்­கள பௌத்­தர்­களின் கைகளுள் இருக்­க­வேண்டும் என்­பதே அதன் அர­சியல் தாரக மந்­திரம். அந்த மந்­திரம் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு நாட்டின் அபி­வி­ருத்தி என்ற பெயரில் எதையும் சிங்­கள பௌத்த இனத்தின் மேம்­பாட்டைக் கருதி மேற்­கொள்­ளலாம் என்ற ஒரு நிபந்­த­னை­யற்ற சுதந்­தி­ரத்தை எழுத்தில் அல்­லாது நடை­மு­றையில் வழங்­கி­யுள்­ளது. இந்தக் கட்­டுப்­பா­டற்ற சுதந்­தி­ரமே இலங்­கையின் ஊழல் நிறைந்த ஆட்­சிக்கும் நிர்­வா­கத்­துக்கும் வழி­வ­குத்­தது என்­பதை உறு­தி­யாகக் கூறலாம். இந்த நிலையில் ஜன­நா­யக ஆட்சி என்­பது இலங்­கையைப் பொறுத்­த­வரை ஒரு வெறும் பம்­மாத்து. சீமான்­க­ளா­வ­தற்குச் சிறந்த வழி எது­வென்றால் ஆளும் கட்­சியில் அங்­கத்­த­வர்­க­ளா­கு­வதும் முடி­யு­மானால் அமைச்­சர்­க­ளா­கு­வதும் என்ற நிலைக்கு ஜன­நா­யகம் பாழ்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்த அர­சியல் கலாச்­சா­ரத்தை மாற்­றா­த­வரை சிறு­பான்மை இனங்­க­ளுக்கும் விடி­வில்லை இலங்­கைக்கும் சுபீட்­ச­மில்லை. அதை மாற்­று­வது யார் அல்­லது எந்தக் கட்சி என்­ப­தையே எதிர்­வ­ரப்­போகும் தேர்தல் தீர்­மா­னிக்­கப்­போ­கி­றது. எனவே தான் இந்தத் தேர்தல் வர­லாற்று முக்­கியம் பெறு­கி­றது. அதில் சிறு­பான்மை இனங்­களின் பங்­க­ளிப்பு மிகவும் முக்­கி­ய­மா­னது. ஏனெனில் அத்­தேர்­தலின் முடிவு அவ்­வி­னங்­களின் தலை­யெ­ழுத்­தையே மாற்­றலாம்.

அர­சியல் கலாச்­சா­ரத்தை மாற்­றி­ய­மைத்து, பொரு­ளா­தார நிர்­வா­கத்­தையும் ஊழ­லற்­ற­தாக மாற்றி, இனங்­க­ளி­டையே சம­ரச உற­வு­க­ளையும் வளர்த்து, மக்­களின் ஜன­நா­யக உரி­மை­க­ளையும் பேணி, சட்­டத்தின் முன் யாவரும் சமம் என்ற ரீதியல் ஒரு புதிய சகாப்­தத்தை உரு­வாக்க வேண்டும் என்ற குரல் பெரும்­பான்மை இனத்­துக்­குள்­ளி­ருந்து வெளிப்­பட்­ட­போ­தெல்லாம் சிறு­பான்மை இனங்கள் இரண்டும் அக்­கு­ர­லுக்குச் செவி­சாய்க்க மறுத்­தன. இதனை 1950, 1960களின் வர­லாறு உறு­திப்­ப­டுத்தும். சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்­துக்குப் பதில் சிறு­பான்­மை­யோரின் இன­வா­தமும் மத­வா­தமும் என்ற போக்கில் அர­சியல் தொடர அதனால் விரக்­தி­ய­டைந்த முற்­போக்குக் குரல்கள் இன­வாதக் கட்­சி­யொன்­றுடன் இணைந்து 1970களில் ஆட்சி நடாத்தி ஈற்றில் தமது பெய­ரையும் புக­ழையும் நிரந்­த­ர­மா­கவே இழந்த வர­லாற்­றையும் மறக்க முடி­யாது. இந்த நிலை எதிர்­வ­ரப்­போகும் தேர்­தலில் ஏற்­படக் கூடாது என்­பதை முதலில் எச்­ச­ரிக்க வேண்­டி­யுள்­ளது. அவ்­வா­றாயின் எதிர்­வரும் தேர்­தலில் எந்தத் தலை­வ­னுக்கு அல்­லது கட்­சிக்கு சிறு­பான்மை இனங்­க­ளி­ரண்டும் ஆத­ரவு வழங்­க­வேண்டும்?

குறிப்­பி­டக்­கூ­டிய வகையில் நான்கு கட்­சி­களும் அவற்றின் தலை­வர்­க­ளுமே இற்­றை­வரை களத்தில் குதிக்க ஆயத்­த­மா­கின்­றனர். ஐக்­கிய தேசியக் கட்­சியும் அதன் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­ஹவும், ஐக்­கிய தேசியக் கட்­சியின் கிளை­யாக உரு­வாகி இன்று தனி­ம­ர­மாக நிற்கும் மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியும் அதன் தலைவர் சஜித் பிரே­ம­தா­சாவும், ராஜ­பக்­சாக்­களின் மொட்டுக் கட்­சியும் அது முன்­னி­றுத்­த­வி­ருக்கும் ஜனா­தி­ப­திக்­கான அபேட்­ச­கரும், தேசிய மக்கள் சக்­தியும் அதன் தலைவர் அனுர குமார திஸ­நா­ய­கா­வுமே அவை­யாகும். இவற்றுள் முதல் மூன்றும் நடை­மு­றை­யி­லுள்ள அர­சியல் சமூக கலாச்­சார அமைப்பை முற்­றாகத் தகர்த்­தெ­றிந்­து­விட்டு புதி­ய­தொரு அமைப்பை ஏற்­ப­டுத்­து­வ­து­பற்றி மௌனமே சாதிக்­கின்­றன. ஆனால் அதே அமைப்­பின்கீழ் சில மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தலாம் என்ற எண்­ணத்­துடன் இன்­றுள்ள பொரு­ளா­தாரச் சீர­ழி­வையே முன்­னி­றுத்தி அதற்­கான தமது பரி­கா­ரங்­களை முன்­வைத்து மக்­களின் வாக்­கு­களைக் கவர முற்­ப­டு­கின்­றனர். இதிலே ஒரு பிரச்­சினை உண்டு.

இலங்­கையின் பொரு­ளா­தாரச் சீர­ழிவை கட்­டுப்­ப­டுத்தி அதனை வளர்ச்சிப் பாதையில் வழி­ந­டத்­த­வென்றே ஜனா­தி­பதி விக்­கி­ர­ம­சிங்ஹ சர்­வ­தேச நாணய நிதியின் உத­வியை நாடி அதி­லி­ருந்து கட­னு­த­வி­யையும் பெற்­றுள்ளார். அந்த நிதியின் ஆலோ­ச­னை­க­ளுக்­கி­ணங்­கவே 2023, 2024 வர­வு­செ­லவு அறிக்­கை­க­ளையும் அவர் நிதி அமைச்சர் என்ற முறையில் தயார் செய்து அதனை நாடா­ளு­மன்­றமும் நிறை­வேற்­றி­யது. அதன் பார­தூ­ர­மான விளை­வு­களை இன்று மக்கள் அனு­ப­விக்­கின்­றனர். ஆனால் முதல் மூன்று கட்­சி­களும் சர்­வ­தேச நாணய நிதியின் சில நிபந்­த­னை­களை மீளாய்வு செய்து சில திருத்­தங்­களை கொண்­டு­வ­ருவோம் என்­று­மட்டும் கூறித் திருப்­­தி­காண அனுர குமர திஸ­நா­ய­காவும் அவ­ரது கட்­சி­யுமே அந்­நி­தியின் அடிப்­படைத் தத்­து­வமே மீளாய்வு செய்­யப்­பட வேண்­டு­மென்று வாதிட்டு அவ்­வா­றான ஒரு மீளாய்­வுக்­கேற்ப சில சிபார்­சு­களை அந்­நி­தியின் தலை­மைப்­பீ­டத்­திடம் முன்­வைத்து மாற்­றங்கள் கொண்­டு­ வ­ருவோம் என்று கூறு­கின்­றனர். இந்த வாதத்தை பொரு­ளியல் ரீதி­யாக விளக்­கு­வ­தற்கு இக்­கட்­டுரை இடந்­த­ராது. வாச­கர்கள் விரும்­பினால் தமது விருப்­பத்தை இப்­பத்­தி­ரிகை மூலம் வெளி­யிட்டால் அதனை இன்­னு­மொரு கட்­டு­ரையில் விளக்க முடியும். ஆனால் தேசிய மக்கள் சக்­தியின் பொரு­ளா­தாரச் சீர்­தி­ருத்த நிலைப்­பாட்­டுக்கும் மற்­றைய மூன்று கட்­சி­க­ளி­னதும் நிலைப்­பாட்­டுக்­கு­மி­டையே ஆழ­மான வேறு­பா­டுண்டு. அந்த வேறு­பாடும் அமைப்பு மாற்­றத்தின் அவ­சி­யத்தை வலுப்­ப­டுத்­து­கின்­றது. இந்தத் தத்­து­வார்த்­த­மான வேறு­பாட்டின் விளை­வா­கவே வேறு எந்­தக்­கட்­சி­யு­டனும் கூட்டுச் சேராது அனுர குமா­ரவின் கட்சி தனித்துக் கள­மி­றங்கப் போகி­றது. அந்த முடி­வுக்கு 1970களில் முற்­போக்குக் கட்­சிகள் கூட்­டணி சேர்ந்து மூக்­கு­டை­பட்­டதும் ஒரு காரணம் என்று கூறலாம்.

எதிர்­வரும் தேர்­தலின் முடி­வு­பற்றிப் பல கருத்துக் கணிப்­பு­களும் ஹேஷ்­யங்­களும் வெளி­வந்­து­கொண்­டி­ருக்­கின்­றன. அவற்றுள் அதி­க­மா­னவை தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை உறுதிப்படுத்துகின்றன. அதனால்தானோ என்னவோ மற்றைய கட்சிகளெல்லாம் கூட்டிணைந்து அனுர குமாரவை தோற்கடிப்பதற்காக தம்மிடையே ஒரேயொரு அபேட்சகரைமட்டும் முன்னிறுத்தி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முனைகின்றன போலும். அந்த அளவுக்கு தேசிய மக்கள் சக்தி ஏற்கனவே வென்றுவிட்டது. ஆனால் அது நிஜமாக வேண்டும். எனவேதான் இரண்டு சிறுபான்மை இனங்களும் அந்தக் கட்­சிக்கு ஆத­ரவு வழங்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. இந்தத் தேர்­தலைப் பகிஷ்­க­ரிப்­பது தற்­கொ­லைக்குச் சம­னாகும். மாறாக தமக்­கி­டையே உரு­வா­கி­யுள்ள இன மத­வாதக் கட்­சி­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­பதும் விழ­லுக்கு இறைத்த நீராகும்.

இறு­தி­யாக ஒன்று. தமி­ழரின் பிரச்­சி­னை­க­ளுக்கு இந்­தி­யாவோ சர்­வ­தே­சமோ உதவப் போவ­தில்லை. அந்தப் பாடத்தை 2009 உணர்த்­தி­யி­ருக்க வேண்டும். அதே போன்று முஸ்­லிம்­களும் “இஸ்­லா­மிய உம்மா” தங்­க­ளுக்கு உத­வு­மென்ற கனவைக் கலைக்க வேண்டும். அதனை இப்­போது காசாவில் நடை­பெறும் இனச்­சுத்­தி­க­ரிப்பு தெளி­வு­ப­டுத்­து­கின்­றது. தமி­ழரும் முஸ்­லிம்­களும் முதலில் இலங்­கையர். அதனால் அவர்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்கு இலங்­கைக்­குள்­ளேயே பரி­காரம் காண வேண்டும். எனவே எதிர்­வரும் தேர்­தலை ஒரு ஜீவ­ம­ரணப் போராட்­ட­மாகக் கருதி தேசிய மக்கள் சக்­திக்குத் தமது ஆத­ரவை வழங்­கு­வது நல்­லது. இது இலங்கை அர­சி­யலின் யதார்த்­தத்தை விளங்கியதனால் விடுக்கப்படும் ஒரு தூரத்து நோக்குனனின் பக்கச்சார்பற்ற வேண்டுகோள்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.